POPULATION

Entire population of indian origin upcountry tamil people is currently estimated as 1.5 millian. out of this .75 millian people live outside tea estates and elswhere in the country.only 50% of the people live and work at tea estates and this containes of 3800 families.in 1950 ,six decades ago 90% of above population lived and dependants of tea estates . because of lower wage and poor living conditions people are try to find works outside tea estats and distracted from tea industry.if this tendancy continues in for another five decades there going to be hardley any single workers family going to be left inside in a tea estate.

a tea estate with dwelings

a tea estate with dwelings

it is so cold

it is so cold
there is no way out

sun set pictures near galle

sun set pictures near galle




perspective

perspective
imbulpitiya tea estate near nawalapitiya from the distance

new developments

new developments
after 1972when the parliament passed land ceiling act the hill country border plantations were divided into small portions given to sinhala peasants colonnialising the plantation districts.

workers children.....it is difficult to smile

workers children.....it is difficult to smile

Monday, June 14, 2010

"நிலம் பெயர்ந்த தமிழர் , வேரும் விழுதும்

"நிலம் பெயர்ந்த தமிழர் , வேரும் விழுதும்

உலகத் தமிழ்ப் பண்பாட்டு மன்றத்தின்
(மலேசியா)வெளியீடு 2007

பேராசிரியர் சோ. சந்திரசேகரம்
இலங்கை

1827 முதல் இலங்கையில் நிறுவப்பட்ட பெருந்தோட்டப் பொருளாதார உற்பத்திக்காகப் பணியாற்றத் தென்னிந்தியாவிலிருந்து அழைத்து வரப்பட்ட தமிழர்களின் வம்சாவளியினரின் சிக்கல்கள் ஏழு அரிய அட்டவணைகள் வழித் துல்லியமாக விளக்கங்களைப் பெறுகின்றன. குடித்தொகை, இலங்கைக்கு வந்தோரின் தென்னிந்திய மாவட்டங்கள், அரசியல் பங்கேற்பு, இலங்கை இந்திய ஒப்பந்தப்படி குடியுரிமை, இன அடையாளம், தமிழர் பிரச்சினை, கல்வி பாடசாலைகள், இறப்பு விகிதம் முதலியவை தெளிவாக விளக்கம் பெறுகின்றன. கட்டுரையாளர் பேராசிரியர் என்பதால் கல்வி, மொழி அடையாளங்களை இலங்கைக் குடிசன மதிப்பீட்டு அறிக்கை வழியும், யுனிசெப் ஆவணங்கள் வழியும் சரியாகக் கணக்கிட்டு மதிப்பீடு செய்துள்ளார்.

அறிமுகம்: 1830 ஆம் ஆண்டு தொடக்கம் இலங்கையில் நிறுவப்பட்ட பெருந்தோட்டப் பொருளாதார முறையில் பணிபுரிவதற்காகத் தென்னிந்தியாவிலிருந்து அழைத்து வரப்பட்ட தமிழர்களின் வம்சாவளியினர் இன்று மலையகத் தமிழர் என்றும், இந்தியத் தமிழர் என்றும், இந்திய வம்சாவளித் தமிழர் என்றும் பலவாறு அழைக்கப்படுகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் வரலாற்று ரீதியாகப் பெருந்தோட்டங்களில் வாழ்ந்து வந்தமையால் இவர்கள் பெருந்தோட்டச் சமூகத்தினர் என்றும் அழைக்கப்பட்டு வருகின்றனர். தற்போது இவர்களுடைய குடித்தொகை பதிமூன்று இலட்சத்தை எட்டியுள்ளது. நாட்டின் குடித்தொகையில் இவர்கள் 5.08% என குடிசன மதிப்பீட்டு அறிக்கைகள் (2001) கூறிய போதிலும் நடைமுறையில் இச்சதவீதம் மேலும் அதிகம் என்று குடிசனவியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

1880 தொடக்கம் இலங்கைக்கு வந்த இச் சமூகத்தினர் ஆரம்ப தசாப்தங்களில் இலங்கையில் நிரந்தரமாகக் குடியேறாது தாய் நாட்டிற்குத் திரும்பிச் சென்றதும் உண்டு. அதாவது ஆரம்பக்காலங்களில் இந்தியாவுடனான தமது தொடர்புகளை அவர்கள் பேணி வந்தனர். படிப்படியாக 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் அவர்கள் இலங்கையில் நிரந்தரமாகக் குடியேறி, பெரும்பாலானவர்கள் இந்தியாவுடனான தமது தொடர்புகளை இழந்தனர். 1961 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் இந்தியத் தமிழ் மக்களின் குடித் தொகை வளர்ச்சியைப் பின்வரும் அட்டவணை எடுத்துக்காட்டும்

அட்டவணை 1: இந்திய மக்களின் குடித்தொகை வளர்ச்சி
ஆண்டு மக்கள் தொகை ஆண்டு மக்கள் தொகை
1827 10,000 1921 4934,944
1847 50,000 1931 692,540
1877 146,0001946 665,853
1911 457,765 1961 949,684

பெருந்தோட்டத் தொழிலாளர்களை விட, துறைமுக அபிவிருத்திப் பணியிலும் அரசாங்கப் பொதுத்துறைப் பணிகளிலும் பணிபுரிவதற்கெனச் சார்பளவில் குறைந்தளவிலான தொழிலாளர்கள் இலங்கைக்குக் கொண்டு வரப்பட்டனர். இவர்களைத் தவிர, தோட்டத்துறை சாராத இந்தியர்கள் என அழைக்கப்பட்ட மற்றொரு பிரிவினரும் இலங்கைக்கு வந்து சேர்ந்தனர். இவர்கள் பெரும்பாலும் தமது சொந்த முயற்சியிலும் சொந்தச் செலவிலுமே இலங்கைக்கு வந்தனர். இந்தியக் குடிசன மதிப்பீட்டு அறிக்கையின் படி (1931) 19211930 வரை இலங்கை வந்த தோட்டத் துறை சாராத இந்தியவர்களின் வருகை பற்றிய புள்ளி விபரங்களை அறிய முடிகின்றது.

அட்டவணை2 : தோட்டத் துறை சாராத இந்தியர்களின் வருகை

ஆண்டு குடிவரவு
1921 82,754
1924 88,784
1927 125,739
1928 133,046
1930 114,669
(ஆதாரம்: இந்தியக் குடிசன மதிப்பீட்டு அறிக்கை 1951)


இலங்கைக்குக் குடிவந்தவர்களினுடைய சொந்த மாவட்டங்கள் பற்றி ஆராய்ந்த போது, தோட்டத் தொழிலாளர்களில் பெரும்பாலானோர் திருச்சிராப்பள்ளி, சேலம், தஞ்சாவூர், மதுரை, இராமநாதபுரம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். தோட்டத் துறை சாராத இந்தியர்கள் பெரும்பாலும் திருநெல்வேலி, இரõமநாதபுரம், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாக இருந்ததாக அரசாங்க அறிக்கைகள் (1965) தெரிவிக்கின்றன (பார்க்க அட்டவணை 3)

அட்டவணை3: இலங்கைக்கு குடிவந்தவர்களின் சொந்த மாவட்டங்கள்

தோட்டத் தொழிலாளர்/ மாவட்டம் மொத்தத்தின் சதவீதம் தோட்டத் துறைசாராதவர் மாவட்டம் மொத்தத்தின் சதவீதம்

திருச்சிராப்பள்ளி 35% திருநெல்வேலி 40%
சேலம் 18% இராமநாதபுரம் 15%
தஞ்சாவூர் 10% மலபார் 08%
மதுரை 08% தஞ்சாவூர் 08%
இராமநாதபுரம் 07% திருவாங்கூர் 05%
புதுக்கோட்டை 07% சென்னை 04%

(ஆதாரம்: இலங்கைப் பருவப்பத்திரம்.1965)

இலங்கையின் அரசாங்க அறிக்கையின்படி இலங்கையிலுள்ள தமிழ் மாவட்டங்களில் அதாவது இலங்கைத்தமிழர் செறிந்து வாழும் மாவட்டங்களில் இந்தியத் தமிழர்களும் கணிசமாக வாழ்ந்ததாகத் தெரிகின்றது. 1946இல் 13,273 ஆக இருந்த இந்தியத் தமிழரின் தொகை 1971 இல் ஒரு இலட்சத்து எண்ணூற்று முப்பத்து நான்காக அதிகரித்தது. இந்தியர்கள் செறிந்து வாழ்ந்த பெருந்தோட்ட மாவட்டங்களில், அவர்களுக்கு எதிராக எழுந்த இன வன்செயல்களின் காரணமாகவே அவர்கள் பாதுகாப்புத்தேடி இலங்கைத் தமிழர்கள் வாழுகின்ற மாவட்டங்களுக்குச் சென்று குடியேறத் தொடங்கினர்.

20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இந்தியத் தமிழர்களின் தொகை இலங்கைத் தமிழர்களை விட அதிகமாக இருந்தபோதிலும் காலப்போக்கில், குறிப்பாக சுதந்திரத்தின் பின்னர் இந்தியர்கள் இந்தியக் குடியுரிமை பெற்று இந்தியாவிற்குத் திரும்பச் சென்றமையால் இலங்கையின் குடித்தொகையில் அவர்களுடைய விகிதாசாரம் குறையத்தொடங்கிற்று. 1953 இல் மொத்த குடித் தொகையில் 12% ஆக இருந்த இந்தியத் தமிழரின் சதவீதம் 1963 இல் 10.6 % ஆகவும் 1971 இல் 9.4% ஆகவும் 1981 இல் 5.6 % ஆகவும் குறைய நேர்ந்தது.

இப் பின்புலத்தில் இலங்கையில் வாழ்ந்து வருகின்ற இந்திய வம்சாவளித் தமிழர்களின் வரலாற்று ரீதியான சில அம்சங்களையும் சமகாலச் சமூக பொருளாதார, அரசியல் நிலைமைகள் பற்றியும் வெளிநாடுகளில் வாழுகின்ற தமிழர்களுக்கு அவர்கள் பற்றிய ஒரு சுருக்கமான அறிமுகத்தைச் செய்வது இக்கட்டுரையினுடைய நோக்கமாகும்.

சனத்தொகைப் பரம்பல்

இந்திய வம்சாவளித் தமிழர்களின் 88% மானோர் நுவரெலியா (350,000), பதுளை (141,000), கண்டி (106,000), இரத்தினபுரி(78,000), கேகாலை (45,000), மாத்தளை (23,000) ஆகிய பெருந்தோட்ட மாவட்டங்களிலேயே வாழ்கின்றனர். நாட்டில் உள்ள 25 மாவட்டங்களில் நுவரெலியா மாவட்டத்தில் மட்டுமே இவர்கள் பெரும்பான்மையினராக வாழுகின்றனர். அங்கு வாழும் மொத்த மக்கள் தொகையில் 51,33% மானவர்கள் இவர்களாவர். இதன் காரணமாக அரசியல் ரீதியாகத் தமது பாராளுமன்ற மற்றும் மாகாண சபை பிரதி நிதிகளைத் தெரிவு செய்து கொள்ள இம் மாவட்டம் இந்தியத் தமிழர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததொன்றாகவும், விளங்குகின்றது. ஏனைய பெருந்தோட்ட மாவட்டங்களின் மொத்தக் குடித்தொகையில் இந்தியத் தமிழர்களின் சதவீதம் பின்வருமாறு அமையும்.

அட்டவணை 4: பெருந்தோட்ட மாவட்டங்களில் மொத்த குடித்தொகையில் இந்தியர்களின் சதவீதம்

மாவட்டம் சதவீதம்
1 நுவரெலியா 51.33%
2. பதுளை18.22%
3. கண்டி 8.35%
4. இரத்தினபரி 7.79%
5. கேகாலை 5.86%
6. மாத்தளை 5.27

(ஆதாரம்: இலங்கைக் குழுத்தொகை மதிப்பீடு 2001)

ஏற்கனவே கூறியவாறு பெரும்பான்மையினத்தவரின் வன் செயல்கள் காரணமாக இம்மக்கள் வடகிழக்கில் உள்ள தமிழ் மாவட்டங்கள் நோக்கி குடியகன்ற போதிலும், அம்மாவட்டங்களில் வாழும் மொத்த இந்தியத் தமிழர்கள் நாட்டில் வாழும் இந்தியத் தமிழர்களில் 7% ஆகும். அதாவது 93% ஆன இந்தியத் தமிழர்கள் வடகிழக்கிற்கு அப்பாலுள்ள தென்னிலங்கை மாவட்டங்களில் பெரும்பான்மைச் சிங்களவர்களின் அயலவர்களாக வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. புவியியல் ரீதியான இந்நெருக்கம் காரணமாக வட கிழக்கு மக்களை விட இந்திய வம்சாவளித் தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையே சார்பளவின் அதிகளவிலான தொடர்புகள் காணப்படுகின்றன. அதேவேளையில் இப்புவியியல் ரீதியான நெருக்கத்தின் காரணமாக இந்தியத் தமிழர்கள் ஏராளமான சந்தர்ப்பங்களில் பெரும்பான்மையினரின் வன்முறைகளுக்கு இலக்காக நேர்ந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்திய மக்களின் புவியியல் ரீதியான பரம்பலைக் கருத்திற் கொள்ளுமிடத்து ஒரு விடயத்தைக் குறிப்பிட வேண்டும். மலையக மாவட்டங்களை மையமாகக் கொண்டு ஒரு சமூகமாக வளர்ச்சியடைந்த இந்தியத் தமிழ் மக்கள் சமூகம் பல்வேறு காரணங்களால் சிதைவுற்று ஒரு பகுதியினர் வடகிழக்குப் பிராந்தியத்திற்கும் இன்னொரு பிரிவினர் 1964,1974 ஆகிய ஆண்டுகளில் செய்யப்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்தங்களின் படி இந்தியாவிற்கும் செல்ல நேர்ந்தமையும் குறிப்பிடத்தக்கது (இவ்வாறு தாயகம் திரும்பியோர் தொகை 1988 வரை ஐந்து இலட்சத்து நாற்பத்தாறாயிரம் பேர்)

இத்தகைய பெரிய குடியகல்வுகளின் விளைவாக இந்தியத் தமிழ்ச் சமூகத்தின் அரசியல் வலிமை காலவோட்டத்தில் குறைந்து சென்றது என்ற கருத்துப் பல ஆய்வாளர்களால் தெரிவிக்கப்பட்டது.

அரசியல் பங்கேற்பு

1931
ஆம் ஆண்டு இலங்கை மக்களுக்கு வழங்கப்பட்ட சர்வஜன வாக்குரிமையானது மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இந்தியத்தமிழர்களுக்கும் வழங்கப்பட்டதன் காரணமாக அவர்களுடைய பிரதிநிதிகள் 7 பேர், 1947 ஆம் ஆண்டு பாராளுமன்றப் பொதுத்தேர்தலில் வெற்றி பெற முடிந்தது. 101 பேர் கொண்ட பாராளுமன்றத்தில் இது கணிசமான தொகையாக அமைந்தது. இப்பிரதிநிதிகள் சிங்கள மக்களைக் கொண்ட தேர்தல் தொகுதிகளிலிருந்து வெற்றி பெற்றிருந்தனர். அத்துடன் இந்திய மக்களின் அரசியல் தொழிற்சங்க இயக்கமான, இலங்கை இந்திக் காங்கிரஸ் அக்காலத்தில் இலங்கை இடதுசாரி கட்சிகளுடன் இணைந்து தேர்தலில் போட்டியிட்டது. இவ்வாறான போக்கு மலையக மாவட்டங்களில் வாழ்ந்த சிங்கள மக்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தையும் அதிகாரத்தையும் குறைந்துவிடும் என்றும் இடதுசாரிகளின் எதிர்கால அரசியல் செல்வாக்கிற்கு வழிகோலும் என்பதும் வலதுசாரி மற்றும் இனவாத அரசியலாரின் கருத்தாக இருந்தன.

இப்பின்புலத்தில் இந்தியத் தமிழர்களின் குடியுரிமை மற்றும் வாக்குரிமை என்பவற்றைப் பறித்து அவர்களை அரசியல் செல்வாக்கற்ற, ஒரு சமூகமாக மாற்றுவதற்கான நடவடிக்கையை அப்போதிருந்த வலதுசாரி ஐக்கிய தேசியக்கட்சி அரசாங்கம் மேற்கொள்ளத் தீர்மானித்தது. இதன் விளைவாக 1948 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட இலங்கைக் குடியுரிமைச் சட்டம் தேர்தல்கள் சட்டம் என்பவற்றினூடாக,இந்தியத் தமிழ் மக்களின் குடியுரிமையும் வாக்குரிமையும் பறிக்கப்பட்டன. இச்சட்டங்களின் விளைவாக 8 இலட்சம் இந்தியத் தமிழர்கள் இவ்வுரிமைகளை இழந்தனர். இந்நிலையில் இந்திய அரசு இவர்களை ஏற்றுக்கொள்ளும் நிலையில் இருக்கவில்லை. இதன் காரணமாக இச்சமூகம் நாடற்றவர் சமூகம் (குtச்tஞுடூஞுண்ண் குணிஞிடிஞுtதூ) என்ற பெயரையும் பெறநேர்ந்தது.

இவ்வாறான உரிமை இழப்பின் காரணமாக இச்சமூகம் சுதந்திரத்தின் பின் நாட்டில் ஏற்பட்ட அபிவிருத்தித் திட்டங்களின் நன்மைகளைப் பெறமுடியாது. கல்வி, சுகாதாரம், வருமானம், வீட்டு வசதி என்பவற்றில் மிகவும் பின்தங்க நேர்ந்தது. இச்சமூகத்தின் மேல் நோக்கிய சமூகநகர்வு (குணிஞிடிச்டூ ட்ணிஞடிடூtதூ) தடைப்பட்டு, அதனைச் சேர்ந்த பெரும்பாலானவர்கள் தொடர்ந்து பெருந்தோட்டங்களிலேயே வாழ நேரிட்டது. இப்பெருந்தோட்டங்கள் நகரங்களுக்கும், கிராமங்களுக்கும் வேறுபட்ட சமூக பொருளாதார,கலாசார நிலைமைகளைக் கொண்டதாய், சுதந்திரமற்ற ஒரு கட்டுப்பாடான வாழ்க்கை முறையைக் கொண்டதாய் விளங்கியது. பெருந்தோட்ட வாழ்க்கை முறைமையே இம்மக்களின் மேம்பாட்டிற்குத் தடையானதாகவும் தோட்ட முகாமையாளர்களில் தங்கி வாழ்க்கை நடத்தும் ஒரு நிலைமையை ஏற்படுத்தியது.
1947 ஆம் ஆண்டின் பின்னர் இம்மக்கள் பொதுத் தேர்தலில் தமது பிரதிநிதிகளைத் தெரிவு செய்யும் வாய்ப்பு இருக்கவில்லை. 1948 இன் குடியுரிமைச் சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்ட போது 1960களில் எட்டு இலட்சம் பேரில் ஒரு இலட்சத்து முப்பத்து நான்காயிரம் பேர் மட்டுமே பதிவுப் பிரஜை என்ற அந்தஸ்தைப் பெற்றனர். (இதற்கு 1948 ஆம் ஆண்டின் இந்தியர் பாகிஸ்தானியர் பிரஜா உரிமைச் சட்டம் வழிவகுத்தது) எவ்வாறாயினும் 1977 ஆம் ஆண்டிலேயே இம்மக்கள் நுவரெலியா தேர்தல் தொகுதியிலிருந்து ஒரேயொரு பிரதிநிதியைத் தெரிவு செய்ய முடிந்தது. அதுவரை இவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ஒரு நியமன உறுப்பினர் அரசாங்கத்தால் பாராளுமன்றத்தில் நியமிக்கப்பட்டிருந்தார்.

1977 இன் பின்னர் நடைமுறைப்படுத்தப்பட்ட சிறிமா சாஸ்திரி ஒப்பந்தம் (1964) இந்திரா காந்தி சிறிமா ஒப்பந்தம் (1970) காரணமாக இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குடியுரிமையையும் வாக்குரிமையையும் பெற்றனர். அதேவேளையில் இவ் ஒப்பந்தங்களின் படி 575,000 பேரும் அவர்களுடைய இயற்கை அதிகரிப்பும் இந்தியா திரும்ப நேர்ந்தது. 1970 களிலும் 1980 களிலும் தீவிரமடைந்த வடகிழக்குத் தமிழர்களின் ஆயுதமேந்தியப் போராட்டம், 1983இல் நிகழ்ந்த இனக்கலவரம், இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட இந்தியாவின் தலையீடு, மலையக மக்களின் அரசியல் இயக்கமாகிய இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஏற்படுத்திய பல்வேறு நிர்ப்பந்தங்கள் என்பவை காரணமாக குடியுரிமையற்று வாழ்ந்த எஞ்சிய இந்தியத் தமிழ் மக்களுக்கு உரியுரிமை வழங்கும் சட்டங்கள் அரசால் நிறைவேற்றப்பட்டன. (1986,1988, 2004 ஆகிய ஆண்டுகளில் இச்சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன)

அட்டவனை 5
இலங்கை இந்திய ஒப்பந்தங்களின் படி (1964 1974 )இந்திய மக்களின் குடியுரிமை நிலைமை (1988)
1. 1964 ஆம் ஆண்டின் சிறிமா சாஸ்திரி ஒப்பந்தப்படி
அ.இந்தியக் குடியுரிமை பெற வேண்டியவர்கள் 525,000
ஆ.இந்தியக் குடியுரிமைக்கு விண்ணப்பித்தவர்கள் 506,000
இ.இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டவர்கள் 337,413
ஈ.இலங்கைக் குடியுரிமை பெற வேண்டியவர்கள் 300,000
உ.இலங்கைக் குடியுரிமைக்கு விண்ணப்பித்தவர்கள் 469,000
ஊ. இலங்கை குடியுரிமை பெற்றவர்கள் 276,000

2. 1974 ஆம் ஆண்டின் சிறிமா இந்திரா காந்தி ஒப்பந்தப்படி
அ.இந்தியக் குடியுரிமை பெற வேண்டியவர்கள் 75,000
ஆ. இலங்கைக் குடியுரிமை பெற வேண்டியவர்கள் 75,000

3 இந்த இரு ஒப்பந்தப்படி இலங்கையில் வாழ்ந்த இந்திய வம்சாவழியினர் (மதிப்பீடு) 975,000
அ.இந்தியா செல்ல வேண்டியவர்கள் 600,000
ஆ.இலங்கை குடியுரிமை பெற வேண்டியவர்கள் 375,000
( ஆதாரம் ஏச்ணண்டிணூஞீ,9111988,ஏதட்ச்ண குஞுஞிதணூடிtதூ டிண tடஞு ஏடிடூடூ இணிதணtணூதூ, ஊணிதணஞீச்tடிணிண ஞூணிணூ இணி உதுடிண்tச்ணஞிஞு)
இச் சட்டங்கள் காரணமாகப் பெறப்பட்ட குடியுரிமை அதன் காரணமாகப் பெறப்பட்ட வாக்குரிமை என்பவற்றின் அடிப்படையில் நுவரெலியா பதுளை கண்டி ஆகிய மாவட்டங்களிலிருந்து இம் மக்கள் சமூகம் தமது பிரதிநிதிகளை மாகாண சபைகளுக்கும் பாராளுமன்றத்துக்கும் தெரிவு செய்ய கூடியதாக இருந்தது.சுதந்திரக் கால இலங்கையில் முதல் முதலாகத் தற்போது இரு கபினெட் அமைச்சர்களும் ஆறு பிரதிஅமைச்சர்களும் பணியாற்றி வருகின்றனர். அவர்களில் ஒரு பிரதி அமைச்சர் தேசிய கல்வி முறைமைக்குப் பொருப்பானவராக உள்ளார்.
மாகாண மட்டத்தில் மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் இச் சமூகப் பிரதிநிதிகள் கல்வித் துறைக்குப் பொறுப்பான அமைச்சர்களாகப் பணியாற்றி வந்துள்ளனர்.
மாகாண சபைக்கு அடுத்த மட்டத்தில் உள்ள பிரதேச சபைகளைக் பொறுத்த வரையில் மலையகத்தில் உள்ள இரு பிரதேச சபைகள் பெருந் தோட்ட மக்களின் பிரதிநிதிகளின் பொறுப்பில் வந்துள்ளமையும் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களாகும்.
1978 ஆம் ஆண்டின் அரசியல் யாப்பின் படியான விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறை காரணமாக மக்கள் பிரதிநிதிகள் அதிகரித்துள்ளனர் என்ற கருத்தும் உண்டு. எவ்வாறாயினும் பெருந்தோட்ட இந்திய மக்கள் செறிந்து வாழும் இரத்தினபுரி கேகாலை மாத்தளை ஆகியமாவட்டங்களிலிருந்து பிரதிநிதிகளை தெரிவு செய்ய முடியாத நிலையும் உண்டு. தேர்தல் தொகுதிகளை நிர்ணயம் செய்யும் போது இம் மக்களின் குடித்தொகை பரம்பல் கருத்தில் கொள்ள வேண்டிய அவசியம் ஒன்றுண்டு.
1950 கள் 1960 கள் என்பவற்றோடு ஒப்பிடும் போது அண்மைக் காலங்களில் குடியுரிமை வாக்குரிமை அரசியல் பிரதிநிதித்துவம் என்பவற்றில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை மறுப்பதற்கில்லை.

இனத்துவ அடையாளமும் அதிகõர பரவலாக்கமும்
தென்னிலங்øகயில் குறிப்பாக பெருந்தோட்ட மாவட்டங்களில் வாழ்ந்து வருகின்ற இந்திய வம்சாவழி மக்களின் அரசியல் தலைமைகளும் கற்றறிவாளர்களும் இந்திய மக்கள் ஒரு தனித் தேசிய இனம் என்ற கருத்தை வலியுறுத்தி வருகின்றனர்.அவ்வாறு அவர்கள் அதிகாரப் பூர்வமாகப் பிரகடனம் செய்யப்படல் வேண்டும் என்ற கருத்தும் முன் வைக்கப்படுகின்றது. உலகில் இந்தியாவிலும் இலங்கையிலுமே சுதேசிகளான தமிழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இலங்கையில் வட கிழக்கு மாகாணங்களில் பன்னெடுங் காலமாக வாழ்ந்து வரும் தமிழர்கள் இலங்கைத் தமிழர்கள் என்றும் தென்னிலங்கையில் 1830 களின் பின் வந்து குடியேறிய இந்தியர்களின் வம்சாவழியினர் இந்தியத் தமிழர்கள் என்றும் அழைக்கப்படுகின்றனர். இலங்கைக் குடிசன மதிப்பீட்டு அறிக்கையும் இவ்வாறான வகைப்பாட்டையே வலியுறுத்தி வருகின்றது. (உதாரணமாக 1911, 1921, 1931, 1981 குடிசன மதிப்பீட்டு அறிக்கைகள்) வட கிழக்கில் வாழும் இலங்கைத் தமிழர்களின் உரிமைப்போராட்டங்களை அங்கீகரிக்கும் அதே வேளையில் இவ்விரு தமிழ் இனக் குழுவினருக்கும் இடையிலான மொழி பண்பாட்டு ஒற்றுமைகளை ஏற்றுக் கொள்ளும் அதே வேளையில் தாம் ஒரு தனியான தேசிய இனம் எனும் நிலைப்பாட்டை வற்புறுத்தப்பட்டு வருகின்றது. இலங்கைத் தமிழர்கள் தனி நாடு கூட்டாட்சி (ஊஉஈகீஅஃஐகுM)என்ற அடிப்படையில் முன் வைத்துள்ள பிரச்சினைகளோடு ஒப்பிடும் போது தமது அரசியல் சமூக பொருளாதார பிரச்சினைகள் வேறுப்பட்டவை அவற்றைத் தீர்ப்பதற்கு கையாள வேண்டிய அணுகுமுறைகளும் வேறுபட்டவை என்பது இந்தியத் தமிழர்களின் தலைமைத்துவங்களின் நிலைப்பாடாக இருந்து வருகின்றது.
இவ்வாறான தனியான தேசிய இனம் என்ற கருத்து எவ்வளவு தான் வலியுறுத்தப்பட்ட போதிலும் சிங்களப் பெருபான்மையினர் இரு வகையான தமிழர்கள் என்ற நிலைப்பாட்டை ஏற்றுக் கொள்ளவில்லை.இவ்வாறு தமிழர்களை அவர்கள் வேறுபடுத்தி பார்க்கவில்லை இதன் காரணமாக 1956 ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் தென்னிலங்கையில் வாழ்ந்த தமிழர்களுக்கு எதிரான இனக் கலவரங்கள் பெரிய அளவில் நடைபெற்றன. வட கிழக்கு மாகாணங்களில் தமிழர்களின் உரிமைப் போராட்டங்கள் அஹிம்சை முறையில் நடத்தப்பட்ட காலங்களில் அவற்றின் பிரதிபலிப்பாக தென் இலங்கையில் வாழ்ந்த இந்திய தமிழர்கள் கடுமையான தாக்குதல்களுக்கு உள்ளாகினர். தாம் முன்வைக்காத கோரிக்கைகளுக்காக தாம் சிங்களப் பெரும்பான்மையாளர்களால் தாக்கப்படுவதாக இவர்கள் கருதுகிறார்கள். 1958, 1977, 1981, 1983 ஆகிய ஆண்டுகளில் தொடர்ச்சியாக நிகழ்ந்த தாக்குதல்கள் காரணமாக இந்திய தமிழர்கள் இந்தியாவுக்கு மட்டுமன்றி வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய தமிழ் மாவட்டங்களுக்கும் இடம் பெயர்ந்து செல்ல நேரிட்டது. 1983க்குப் பின்னர் வடமாகாணத்தில் பாதுகாப்பின்மையும் மோதல்களும் தீவிரம் அடைந்தமையால் இப் போக்கு தடைப்பட நேர்ந்தது. மலையக மாவட்டங்களிலும் கொழும்பு மாவட்டங்களிலும் வாழ்ந்த மத்திய தர இந்திய தமிழர்கள் இவ் வன்செயல்கள் காரணமாக அதிகளவில் தமிழக தொடர்புகளை புதுப்பித்துக் கொண்டனர் இவர்களில் கணிசமானவர்கள் தற்போது இலங்கையில் நிலவும் பாதுகாப்பு பிரச்சினைகளையும் எதிர்காலத்தையும் கருத்திற்கொண்டு தம்மை கடல் கடந்த இந்திய பிரஜைகளாக பதிவு செய்து கொண்டுள்ளனர்.

1948இல் குடியுரிமையையும் வாக்குரிமையையும் இழந்த இந்திய தமிழர்கள் அதனை திரும்பப் பெறும் முயற்சியில் கடந்த ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக போராடி பல முன்னேற்றங்களையும் கண்டனர். இப்பிரச்சினைக் காரணமாக இலங்கைத் தமிழர்களின் தேசிய இனப் பிரச்சினைக்கான அதிகாரப் பகிர்வுத் தீர்வு நோக்கில் கருத்தாடல்களின் போது எதிர்காலத்தில் தென்னிலங்கையில் வாழும் நிலத் தொடர்பற்ற இந்தியச் சிறுபான்மையினருக்கான அதிகாரப் பகிர்வு என்னும் விடயத்தில் அக்கறை செலுத்தப்படவில்லை. மலையக மாவட்டங்களில் வாழும் இந்தியத் தமிழர்களுக்கான அதிகார அலகுகள் பற்றிய கோரிக்கைகள் எவையும் அதிகாரப்பூர்வமாகச் சமர்ப்பிக்கப்பட வில்லை. இவ்வாறான கோரிக்கைகளுக்கு வடகிழக்குத் தமிழர்களின் அதிகாரப்பகிர்வுக்கான போராட்டத்துக்குக் குந்தகமாகவும், ஏட்டிக்குப் போட்டியாகவும் அமைந்து அவர்களுடைய போராட்டத்தைத் திசைதிருப்பலாம் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டது. அத்துடன் சிங்களவர்கள் மத்தியில் வாழ்ந்து கொண்டு அதிகார அலகு பற்றிக் கோரிக்கை விடுவித்தல், அதன் காரணமாச் சிங்களவர்களின் மேலாதிக்க வெறுப்பைச் சம்பாதிக்க நேரிடும் என்றும் கருதப்பட்டது. சிங்களவர் மத்தியில் வாழ்ந்து கொண்டு தமக்கெனத் தனியான அதிகார அலகொன்றைக் கோருவது மற்றொரு தனிநாட்டுக் கோரிக்கைக்கான அத்திவாரமே எனச் சிங்கள இனவாத அரசியல் வாதிகள் பேசுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்கும் முயற்சி என்ற முறையில் கருத்துகள் வெளிப்பட்டன. பல சந்தர்ப்பங்களில் வடகிழக்கில் தமிழ்ஈழம், மலையக மாவட்டங்களில் தனியான மலைநாடு என நாடு பிரியப்போவதாகச் சில சிங்களத் தலைவர்கள் எச்சரித்திருந்தனர். எவ்வாறாயினும் அண்மைக்காலங்களில் நிலத்தொடர்பற்ற சிறுபான்மையினர் என்ற முறையில் இந்தியத் தமிழர்களுக்கான அதிகார அலகு ஒன்றின் தேவை பற்றி இந்தியக் கற்றறிவாளர்களும் இந்தியர்களின் அரசியல் இயக்கங்களும் கருத்தாடல்களை நடாத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

(பார்க்க, ஈஞுதிச்ணூச்டீ(2004) அ,லோரன்ஸ் (2005)

ஈஞுதிச்ணூச்டீ (2006)

வரையறுக்கப்பட்ட ஒரு பிரதேசத்தை மட்டும் கொண்டிராமல் பல பகுதிகளில் செறிந்தும், பரந்தும் வாழும் இந்திய வம்சாவழித் தமிழர்கள், முஸ்லிம்கள் போன்றோருக்குத் தங்கள் குழு உரிமைகளை உத்தரவாதப்படுத்துவது என்பதிலும் கவனம் செலுத்த வேண்டியுள்ளது என்பது தேவராஜின் கருத்து.(ஈஞுதிச்ணூச்டீ 2004) இந்நிலைப்பாடு வலுப்பெறும் வகையில் மேதகு ஜனாதிபதியால் அரசியல் யாப்புத்திருத்தம், இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பன தொடர்பாக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் பெரும்பான்மை அறிக்கையில் (2006) இந்தியத் தமிழர் தொடர்பான பின்வரும் ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டன.

12.4 இந்திய வம்சாவழித் தமிழ்ர்கள் பிரச்சினைகளைக் கருத்திற்கொள்ளுமுகமாக ஒரு சுயாதீன மண்டலப் பேரவை (அதtணிணணிட்ணிதண் ஙூணிணச்டூ இணிதணஞிடிடூ) நிறுவப்படல் வேண்டும். இவர்கள் செறிந்து வாழும் நுவரெலியா, அம்பகமுவைப் பிரதேச சபைகளின் கீழ்வரும் பகுதிகள், ஹட்டன், டிக்கோயா, தலவாக்கலை, லிண்டுவ நகரசபைப் பிரதேசங்கள் நுவரெலியா மாநகர சபைப் பிரதேசம் என்பவற்றை உள்ளடக்கியதாக இப் பேரவை அமைதல் வேண்டும்.
12.5 இப் பேரவைக்கு ஆலோசனை வழங்கும் வகையில் இந்தியத் தமிழருக்கான கலாசாரப் பேரவை (இதடூtணூதச்டூ இணிதணஞிடிடூ) ஒன்று அமைதல் வேண்டும். இந்தியத் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களும் மாகாணசபை உறுப்பினர்களும் இப்பேரவையின் உறுப்பினர்களாதல் வேண்டும். இவர்களோடு ஜனாதிபதியின் நியமன உறுப்பினர்கள் ஐவர் இப்பேரவையில் இடம் பெறல் வேண்டும். பேரவையின் சகல உறுப்பினர்களையும் மேதகு ஜனாதிபதி நியமிப்பர்.

சுயாதீன மண்டலப் பேரவையானது, தமிழ் மொழிப் பாடசாலைகள், தொழில் கல்வி, விவசாய அபிவிருத்தி, கலாச்சார விவகாரங்கள் என்பவற்றுக்குப் பொறுப்பாகவும், பிரதேச சபைகள் செய்கின்ற அனைத்துப் பணிகளையும் செய்யும் அதிகாரங்களைப் பெற்றிருக்கும் என இந் நிபுணர் குழுவானது பரிந்துரை செய்துள்ளது.

இந் நிபுணர் குழுவின் அறிக்கையைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட திஸ்ஸ வித்தாரண அறிக்கையானது (திஸ்ஸ வித்தாரண என்பவர் அரசியல் யாப்பு விவகாரங்களுக்கான அமைச்சர்) கலாச்சாரப் பேரவை பற்றிய நிபுணர் குழுவின் பரிந்துரையை ஏற்றுக் கொண்டது. அத்துடன் மத்திய அரசியல் இந்திய விவகாரங்களுக்கான ஒரு அமைச்சரும், மூன்று மலையக மாகாணங்கள் ஒவ்வொன்றிலும் இவ்வாறான ஓர் அமைச்சர் நியமிக்கப்படல் வேண்டும் என்றும் பரிந்துரை செய்துள்ளது.

தற்போது இந்திய மக்களின் பிரதான அரசியல் இயக்கங்களான, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸும், மலையக மக்கள் முன்னணியும் இந்திய மக்களுக்கான அதிகார அலகுகள் பற்றிச் சிந்தித்து வருகின்றன. மலையக மக்கள் முன்னணி இவ்வாறான அலகு பற்றி நீண்ட காலமாகக் கூறிவருவது குறிப்பிடத்தக்கது. அதன் துணைத் தலைவர் லோறன்ஸ் இது பற்றிக் கூறியதாவது: மலையகத் தமிழ் மக்கள் ஒரு தனியான தேசிய இனம் என்ற அடிப்படையில் அவர்களுக்கான பிராந்திய சுயாட்சி ஒன்று உருவாக்கப்படல் வேண்டும். இது மத்திய ஊவா, சப்பிரகமுவா மாகாணங்களில் வாழும் மலையகத் தமிழ் மக்கள் ?????????? பகுதிகளை ஒன்றிணைத்து உருவாக்கப்படல் வேண்டும். மலையகத் தமிழ் மக்களுக்கான மாவட்டச் செயலகங்கள், 18 பிரதேச செயலகங்கள், கிட்டத்தட்ட 1000, கிராம அலுவலகர் பிரிவுகள் உருவாக்கப்படல் வேண்டும் (லோறன்ஸ் 2006)

இலங்கையில் வாழும் இந்தியத் தமிழ் மக்களுக்கான பிராந்திய அதிகார அலகு பற்றிய இக்கோரிக்கைகளும் பரிந்துரைகளும் இம்மக்கள் புதிய நூற்றாண்டின் முதலாவது தசாப்தத்தில் எய்தியுள்ள ஒரு புதிய அரசியல் கட்டத்தை குறித்து நிற்கின்றன என்பதில் ஐயமில்லை. நாட்டின் இனப்பிரச்சினைக்கான எதிர்காலத் தீர்வுத் திட்டங்கள் தென்னிலங்கையில் வாழும் இந்தியத் தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளையும் கருத்திற் கொள்ளவேண்டிய ஒரு புதிய நிலமை ஏற்பட்டுள்ளது.

கல்வி

வரலாற்று ரீதியாகப் பெருந்தோட்டப் பிள்ளைகளுக்கான கல்விப் பொறுப்புப் பெருந்தோட்ட முகாமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது. கிட்டத்தட்ட 1977 ஆம் ஆண்டுவரை இப்பிள்ளைகளுக்கான பெருந்தோட்டப் பாடசாலைகள் பெருந்தோட்ட உரிமையாளர்களால் முகாமைத்துவம் செய்யப்பட்டு வந்தன. அரசாங்க மானியங்களும் வழங்கப்பட்டன. இவர்களுக்கான பாடசாலைகளின் தொகை 721 ஆக இருந்தது. இவற்றில் 350 பாடசாலைகள் 1977 இல் அரசாங்கத்தால் பொறுப்பேற்கப்பட்டன. எஞ்சிய பாடசாலைகள் 1981 இல் பொறுப்பேற்றப்பட்டன. ஆயினும் இப்பாடசாலைகளுக்கான வசதிகளையும் கல்வித் தராதரங்களையும் மேம்படுத்துவதில் அதிக அக்கறை செலுத்தப்படவில்லை.

1947 இல் நாடு சுதந்திரம் பெற்றதும், குடியேற்ற ஆட்சிக் காலக் கல்வி முறையின் குறைகளை அகற்றி ஒரு தேசியக் கல்வி முறையை அமைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் பெருந்தோட்டப் பாடசாலைகள் இவ்வாறான தேசியக் கல்வி முறைமைக்கு அப்பால், குறைந்த வசதிகளுடனும் மிகச் சாதாரணமான பாட ஏற்பாட்டைக்கொண்டு தனித்து இயங்கி வந்தன.
சுதந்திரகால இலங்கையின் கல்வி சீர்த்திருத்தங்களின் ஒரு பிரதான அம்சம். நாட்டில் வாழ்ந்த பின்தங்கிய மக்கள் பிரிவினரின் கல்வி நிலைமை மேம்படுத்துவதாகும். இலவச கல்வித்திட்டம் (1945)கிராமப் புறங்களில் இடை நிலைக் கல்வி வழங்கும் மத்திய பாடசாலைகள் (1940 களில்) பல புலமைப்பரிசில் திட்டங்கள், 1960 இல் தனியார் பாடசாøலகளையும் சிறிஸ்தவ மிஷனரிமாரின் பாடசாலைகளையும் அரசாங்கம் பொறுப்பேற்றமை ஆகிய நடவடிக்கைகள், பல்வேறு பின்தங்கிய பிரிவினரின் கல்வி மேம்பாட்டைக் கருத்தில் கொண்டதாக அமைந்தது. இத்தகைய செயற்பாடுகள் தென்னாசிய, தென்கிழக்காசிய பிராந்தியத்தில் பாடசாலைக் கல்வியில் முன்னேறிய ஒரு நாடாக இலங்கை நிலைமாற்றம் பெற வழிவகுத்தன. எழுத்தறிவு, பெண்கல்வி, ஆரம்ப, இடை நிலை பாடசாலை மாணவர் சேர்வு வீதம் என்பன அதிகரித்தன. ஆனால் தேசிய ரீதியாகக் கல்வித் துறையில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் மிக அண்மைக்காலம் வரை பெருந்தோட்ட இந்திய மக்களை சென்றடையவில்லை, மிகப் பிந்தியே (1980 களில்) கல்வி நீரோட்டத்தில் இந்திய மக்கள் இணைக்கப்பட்டமையானது அவர்களுடைய கல்வி அடைவிலும் சித்தியிலும் இன்றும், பல பற்றாக்குறைகளைக் காண முடிகின்றது.
எழுத்தறிவு வீதங்கள் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும் தற்போது ஒரு இடைவெளியைக் காணமுடிகின்றது. தேசிய எழுத்தறிவு வீதம் 94.5 பெருந்தோட்ட ஆண்களின் எழுத்தறிவு வீதம் 88.3% பெருந்தோட்டப் பெண்களின் எழுத்தறிவு வீதம் 74.7% ஆனது தேசிய சராசாரியை விடக் (90.6%) குறைந்து காணப்படுகிறது.

கல்வி அடைவிலும் இவ்வாறான இடைவெளிகளைக் காண முடிகிறது. 26% பெருந்தோட்டப் பெண்கள் பாடசாலைகள், பாடசாலைக் கல்வி பெறாதவர்கள். இவ்வகையைச் சேர்ந்த ஆண்களின் சதவீதம் 13. தேசிய ரீதியாக 26.2 % மாணவர்கள் இடைநிலைக்கல்வி அல்லது பின் இடைநிலைக்கல்வியைப் பெற்றவர்கள். ஆனால் பெருந்தோட்ட மக்களின் 36% மானோரே இத்தகைய கல்வியைப் பயின்றவர்கள். பெருந்தோட்ட மக்களின் 44% மானோர். ஆரம்பக்கல்வி தகுதிகளை மட்டுமே பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
2003 ஆம் ஆண்டில் அரசாங்கப் புள்ளிவிபரங்களின்படி பெருந்தோட்டப் பகுதிகளில் 17.5% மானோர் பாடசாலை செல்லாதவர்கள் (Nணி குஞிடணிணிடூடிணஞ்) 3.7% மானோரே பெருந்தோட்டத் துறையில் 12 ஆம், 13 ஆம் தரங்கள் வரை அல்லது அதற்கு மேலாகப் படித்தவர்கள். இலங்கையின் நகர்புற மக்கள் மற்றும் கிராமப்புற மக்களின் கல்விச் சித்தி இதனைவிடப் பலமடங்கு மேலானது என்பதைப் பின்வரும் அட்டவணை காட்டுகிறது.
அட்டவணை 5: துறைவகைப்படியான கல்விச் சித்திகள்
துறை பாடசாலைசெல்லாதவர் % 13 ஆம் வகுப்பும் அதற்கு மேலும்
நகரம் 03.5 20.6
கிராமம் 11.7 09.1
பெருந்தோட்டம் 26.7 03.7

(ஆதாரம்: இலங்கைக் குடிசன மதிப்பீட்டு அறிக்கைகளும் க்ணடிஞிஞுஞூ ஆவணங்களும்)

எடுத்துக்காட்டாக நகர்புற மக்களில் 20.6 சதவீதமானவர்களும் பாடசாலைக் கல்வியை முழுமையாகக் கற்று முடித்தவர்கள் ( 13 ஆம் வகுப்புவரை)அல்லது அதற்கு மேலும் படித்தவர்கள்; ஆனால் பெருந்தோட்டப் பகுதியில் இந்தியர்களில் 3.7 சதவீதமானவர்களே இவ்வாறான கல்விச் சித்திகளைப் பெற்றவர்கள். அத்துடன் அவர்களில் 26.7 சதவீதமானவர்கள் பாடசாலை செல்லாதவர்கள். ஏனையவர்களில் (நகர்புற கிராமப்புற மக்களில்) இப்படிப்பட்டவர்கள் குறைவு (முறையே 03.5%,11.7%)

பெருந்தோட்ட மாவட்டங்களில் இம்மக்களுக்குரிய 811 பாடசாலைகள் பெரும் பாலும் ஆரம்பப் பாடசாலைகளாக இருந்தன. எட்டு தசாப்தங்களாக போதிய அடிப்படை வசதிகளற்று இயங்கி வந்த இப்பாடசாலைகளில் 420 பாடசாலைகள் சுவீடன் அரசாங்க உதவியுடன் புனரமைக்கப்பட்டன. வேறு செயற் திட்டங்களினூடாக மேலும் 141 பாடசாலைகள் புனரமைக்கப்பட்டன. தொடர்ந்து 270 பாடசாலைகள் இன்னும் அடிப்படை வசதிகளற்ற நிலையிலேயே உள்ளன. இப்பாடசாலைகளில் 512 பாடசாலைகள் ஆரம்பப் பாடசாலைகள் மட்டுமேயாகும். ஆரம்ப இடைநிலைக் கல்வி வசதிகள் கொண்ட பாடசாலைகள் 17. அதற்கு அடுத்த நிலையில் வசதிகள் கொண்ட பாடசாலைகள் 77. இப் பாடசாலைகளின் மற்றொரு பிரதான பிரச்சினை ஆசிரியர் பற்றாக்குறையாகும். அண்மைக் காலங்களில் இப்பாற்றாக்குறை 3200 ஆக உயர்ந்துள்ளது.

இலங்கையில் 15 பல்கலைக்கழகங்களில் 60,000 பட்டதாரி மாணவர்கள் பயிலுகின்றனர். 1942 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட பல்கலைக்கழக அமைப்பில் ஆரம்பம் முதல் இந்தியர்களின் பங்கேற்பு 1 சதவீதத்துக்கும் குறைவாகவே இருந்து வருகின்றது. 1960 களின் பின்னரே இம்மக்களுக்கான பல்கலைக்கழகப் புகுமுக வகுப்புகள் பாடசாலைகளில் ஆரம்பிக்கப்பட்டன. தற்போது இவ்வகுப்புகளைக் கொண்ட 90 பாடசாலைகள் மலையகத்திலே காணப்படுகின்றன. ஆயினும் மிகப்பிந்தியே உயர், இடை நிலைக் கல்வியைக் கற்கும் வாய்ப்புக்களை பெற்றமையால் உயர் கல்வியில் காலங்காலமாக ஈடுபட்டு வரும் ஏனைய சமூகத்தவருடன் போட்டியிட்டு சித்தி பெறுவதும், பல்கலைக்கழக அனுமதியைப் பெறுவதும் மிகச் சிரமமானதாகும். (பல்கலைக்கழக அனுமதிப் பரீட்சைக்கு (எ.இ.உ அ/ஃ) அமரும் 20,000 இலங்கை மாணவர்களில் 17000 பேருக்கு மட்டுமே பல்கலைக்கழக அனுமதி கிட்டும்).

இலங்கையின் பல்கலைக்கழக அனுமதிக் கொள்கையின்படி, 40 சதவீதமான மாணவர்கள் தேசிய ரீதியான திறமை சித்தியின் (Mஞுணூடிt) அடிப்படையிலும் ஏனைய 60 சதவீதமானவர்கள் மாவட்ட ரீதியாகவும் (ஞீடிண்tணூஞிt ணுதணிtச்) அனுமதிக்கப்படுகின்றனர்., பின் தங்கிய மாவட்டங்களுக்குச் சாதாகமான இவ்வனுமதிக் கொள்கை கல்வியில் பின்தங்கிய இம்மக்கட் பிரிவினருக்கு உதவுவதாய் இல்லை.

கடந்த ஏழு தசாப்த காலமாக இப்பிரிவினரின் பின்தங்கிய உயர்கல்வி நிலைமை காரணமாக இவர்கள் மத்தியில் மேல் நோக்கிய சமூக நகர்வு ஏற்படாது. தொடர்ந்து பெருந்தோட்டங்களைச் சார்ந்து வாழும் நிலையே இவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. எவ்வாறாயினும் இவர்கள் மத்தியில் எழுந்துள்ள சிறு தொகையான பல்கலைக்கழகப் பேராசிரியர்களும் சமூக நோக்குடைய கற்றறிவாளர்களும் இம்மக்களின் சமூக, கலாசார, உயர் கல்வி மேம்பாட்டுக்காக இவர்களுக்கெனத் தனியாக மலையகப் பல்கலைக்கழகம் ஒன்றை ஏற்படுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இம்மக்களின் பாடசாலைக் கல்வி ஏற்பாட்டில் குறிப்பிட்டுக் கூற வேண்டிய ஒரு முக்கிய அம்சம். பாடசாலைக் கல்வியின் சகல நிலைகளிலும் இறுதி வரை தமிழ்மொழி பயிற்று மொழியாக இருப்பதாகும். அத்துடன் அவர்களுக்கென்றுள்ள தமிழ்மொழிப் பாடசாலைகளின் இன, மொழி தொடர்பான பாரபட்சங்களை எதிர்நோக்காது சுயாதீனமாகப் பயிலும் வாயப்புண்டு. இலங்கையில் பெரும்பாலான பாடசாலைகள் ஒரு மொழிப் பாடசாலைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
அட்டவணை 6: மொழிவகைப்படி இலங்கையின் அரசாங்கப் பாடசாலைகள் 2006

1. சிங்கள மொழிப் பாடசாலைகள் 6500
2. தமிழ்மொழிப் பாடசாலைகள் 2825 இவை வடக்கிழங்கிலும் தென்னிலங்கையிலும் உள்ளவை.)
3. சிங்களம் தமிழ்மொழியையும் பயிற்று மொழியாகக் கொண்ட பாடசாலைகள் 40.
4. சிங்களத்தையும், ஆங்கிலத்தையும் பயிற்றுமொழியாகக் கொண்ட பாடசாலைகள் 249.
5. தமிழையும், ஆங்கிலத்தையும் பயிற்று மொழியாகக் கொண்ட பாடசாலைகள் 86
6. மும்மொழியாகக் கொண்ட பாடசாலைகள் 27.
(ஆதாரம் :கல்வி அமைச்சின் புள்ளி விபரங்கள்)

குறிப்புகள்: இலங்கையில் அரசாங்கப் பாடசாலைகள் 9727; தனியார் பாடசாலைகள் 85

அண்மைக் காலங்களில் சில பாடசாலைகளில் ஆங்கில மொழியும் ஒரு பயிற்று மொழியாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

வீட்டு வசதிகள்

மொரிசியஸ்,மெக்சிக்கோ, மலேசியா ஆகிய நாடுகளில் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் வீட்டு வசதிகளில் பெரிய அளவிலான முன்னேற்றங் காணப்பட்டவிடத்து, இலங்கையில் வாழும் இந்தியத் தோட்டத் தொழிலாளர்களில் 80 சதவீதமானவர்கள் 19 ஆம் நூற்றாண்டுப் பாணியிலான லைன் வீடுகளிலேயே (ஞச்ணூணூச்ஞிடு tதூணீஞு டூடிணஞுண்) வாழ்ந்து வருகின்றனர். (ஊணிதணஞீச்tடிணிண ஞூணிணூ இணி உதுண்டிண்tஞுணஞிஞு, தணஞீச்tஞுஞீ). 1992 ஆம் ஆண்டின் வீட்டுத்தராதர மதிப்பீட்டு அறிக்கையின்படி, 45 சதவீதமான தோட்டக் குடியிருப்புகளில் மிதமிஞ்சிய தொகையினர் (Oதிஞுணூ ஞிணூணிதீஞீடிணஞ்) வசிக்கின்றனர். 25 சதவீதமான குடியிருப்புகளில் வசிப்போர் தொகை ஓரளவுக்கு (ட்ச்ணூஞ்டிணச்டூடூதூ) மிதமிஞ்சிக் காணப்படுகின்றது. 42 சதவீதமான குடியிருப்புகள் தரம் உயர்த்தப்படல் வேண்டும். 52 சதவீதமான குடியிருப்புக்களும் ஓரளவு திருத்தப்பட வேண்டியவை. 88 சதவீதமான குடியிருப்புக்களில் மின்சார வசதியும், 46 சதவீதமானவற்றில் குடிநீர்வசதிகளும் இல்லை(Mடிணடிண்tணூதூ ணிஞூ உண்tச்tஞு ஐணஞூணூச்ண்tணூதஞிtதணூஞு 2006). வெளிநாட்டு நிதியீட்டத்துடனும் சுய உதவித் திட்டங்களினூடாகவும் பல வீட்டு வசதிச் செயற்றிட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

சுகாதாரம்

பல்வேறு மதிப்பீடுகளின்படி 53.7 சதவீதமான இந்தியப் பெருந்தோட்ட மக்களுக்கே மருத்துவ வசதிகள் கிட்டுகின்றன. 11.7 சதவீதமானவர்களுக்கே வைத்தியாலை வசதிகள் உள்ளன. இதனால் அவர்ளுடைய பௌதீக வாழ்க்கைத் தராதரம் வீழ்ச்சிடைந்து காணப்படுகின்றது. சிறந்த வீட்டச் சூழலை வழங்குவதன் மூலம் இம்மக்களின் 25 சதவீதமான நோய்களைக் குறைக்க முடியும் என ஆய்வுகள் கூறுகின்றன.
சுதந்திரத்திற்கு (1947) முன்னர் பெருந்தோட்ட மக்களின் சுகாதாரக் குறிக்காட்டிகள் தேசிய சராசரியை விட உயர்ந்து காணப்பட்டன. ஆயினும் இம்மக்கள் குடியுரிமையை இழந்தவுடன் சுகாதாரக் குறிக்காட்டிகள் வீழ்ச்சிடையத் தொடங்கின. இறப்புவீதம், சிசு இறப்பு வீதம் என்பன எப்போதுமே தேசிய சராசரியுடன் ஒத்துச் செல்லவில்லை.

அட்டவணை.7: பெருந்தோட்டங்களின் இறப்பு வீதம் மற்றும் சிசு மரணவீதம்

1.இறப்புவீதம் தேசியக் குறிகாட்டி பெருந்தோட்டக் குறிகாட்டி
1944 21.8 16.6
1955 11.0 13.3
1970 7.5 11.9

2.சிசுமரணம் வீதம்
1944 13.5 129
1955 71 115
1970 48 97
1985 49
1990 38
1997 24

3. பிறப்பின்போது தாய் மரணவீதம்
1985 36.0
1990 25
1992 13.0 20.7
1995 12.5 19.9

ஆதாரம்: (ஊணிதணஞீச்tடிணிண ஞூணிணூ இணி உதுடிண்tஞுணஞிஞு ச்ணஞீ Mடிணடிண்tணூதூ ணிஞூ ஐணஞூணூச்ண்tணூதஞிtதணூஞு ஈணிஞிதட்ஞுணtண்)

வீட்டு வசதிக் குறைவு,மோசமான காலநிலை, அவ்வாறான காலநிலையில் இம்மக்கள் உடல் உழைப்பில் ஈடுபடுதல், குறைந்த ஊட்டச்சத்துள்ள உணவு குறைந்த வருமான நிலைகள், தோட்டங்களில் பயன்படுத்தப்படும் இரசாயன உரங்கள் ஏற்படுத்தும் தாக்கம் போன்ற காரணங்களால் பெருந்தோட்ட இந்தியத் தமிழர்களின் சுகாதாரக் குறிகாட்டிகள் தேசிய சராசரியைவிடக் குறைந்து காணப்படுகின்றன.
பெருந்தோட்டச் சுகாதாரத்துறையைத் தேசியத் துறையுடன் இணைத்துக்கொள்ளும் கொள்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு, 50 பெருந்தோட்ட வைத்தியசலைகள் சுகாதாரச் சேவைத் திணைக்களத்தால் பொறுப்பேற்கப்பட்டுள்ளன. ஆயினும் இக்கொள்கை துரித கதியில் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

தொழில் வாய்ப்புகள்

இந்திய வம்சாவழித் தமிழர்களில் 58% மானவர்கள், பெருந்தோட்டத்துறையிலும் 24% மானவர்கள் கிராமத்துறையிலும் வாழ்பவர்கள், எஞ்சியோர் நகரப்புறங்களில் வாழ்பவர்கள். அரசாங்கத்துறையில் 8 இலட்சம் இலங்கையர்கள் வேலை வாய்ப்புப் பெற்ற போதிலும் அத்துறையில் இந்திய வம்சாவழியினரின் பங்கேற்பு 1 சதவீதம் கூட இல்லை. பாடசாலைகளில் பயிற்றுமொழி தமிழாக இருப்பதால், 4535 பேர் ஆசிரியர் பதவிகளைப் பெற்றுள்ளனர் (2002) இவ்வாண்டு மேலும் 3200 பேர் நியமிக்கப்படவுள்ளனர். அரசாங்க உயர் பதவிகளில் உள்ளோர் தொகை பல்கலைக்கழக விரிவுரையாளர் தொகை மற்றும் மருத்துவர், வழக்கறிஞர் (60 பேர்) கணக்காய்வாளர் ஆகியோர் தொகைகளை இலகுவாக எண்ணிவிட முடியும்.

பெருந்தோட்டங்களில் வாழும் 9 இலட்சம் மக்களில் 88 சதவீதமானவர்கள் இந்தியத் தமிழர்கள். நாட்டில் வாழும் மொத்த இந்தியத் தமிழர்களில் 80 சதவீதமானவர் பெருந்தோட்டங்களில் வாழ்கின்றனர். அதாவது இந்தியத் தமிழ்ர்கள் ஊழியர் தொகுதியில் (டூச்ஞணிதணூ ஞூணிணூஞிஞு) பெரும்பாலானவர்கள் பெருந்தோட்டத் தொழிலாளர்களாக விளங்குகின்றனர்.
சுதந்திரத்திற்கு முற்பட்ட காலங்களில் வயது வந்த அனைவரும் பெருந்தோட்டத் தொழிலாளர்களாகப் பதிவு செய்யப்பட்டனர். 1960 களின் பின்னர் தேயிலையின் விலைகள் உலகச் சந்தையில் வீழ்ச்சியடையத் தொடங்கியதும் வேலையின்மைப் பிரச்சினையும் எழத்தொடங்கியது. 1996/ 1997 இல் பெருந்தோட்ட மக்களில் 88 சதவீதமானவர்கள் பெருந்தோட்ட விவசாயத்தில் ஈடுபட்டிருந்தனர். தற்போது இது 78% ஆகக் குறைந்துள்ளது. பெருந்தோட்டங்களுக்கு வெளியே உள்ள வேலை வாய்ப்பு 8% இருந்து 14% ஆக அதிகரித்துள்ளது. அதிக திறன்களும் கல்வித் தகமைகளும் தேவைப்படாத தோட்டங்களுக்கு வெளியே உள்ள வேலை வாய்ப்புக்கள் பெரிதும் நடத்தப்படுகின்றன. பெண்கள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வீட்டு வேலையாட்களாகச் செல்கின்றனர். நகர்ப் புறக் கடைகளிலும் ஆடைத் தொழிற்சாலைகளிலும் பெண்கள் வேலை செய்கின்றனர். கடந்த காலங்களுடன் ஒப்பிடும்போது பெருந்தோட்டத் தொழிலாளர்களின் தொகை குறைந்து வருகின்றது.

பெருந்தோட்டங்களில் வாழும் 9 இலட்சம் மக்களும் தோட்டத் தொழிலாளர்கள் அல்லர். தொழிலாளர்களின் தொகை ஏறத்தாழ 250,000 மற்றவர்கள் இவர்களுடைய குடும்ப உறுப்பினர்களாவர்.

பெருந்தோட்ட மக்களின் 9.2% மானவர்கள் வேலையற்றவர்கள். நகர் புறத்தையும் (8.8%) கிராமப்புறத்தையும் (7.7%) விட இது சற்று அதிகமாகும். எவ்வாறாயினும் அண்மைக்காலக் கல்வி வளர்சசியின் காரணமாக, பெருந்தோட்டப் பகுதிகளில் கற்றோரின் வேலையின்மை சதவீதம் இதனைவிட (9.2) அதிகமாகும். மத்திய வங்கியின் மதிப்பீடுகளின்படி (2003/2004) பெருந்தோட்ட இளைஞர்களின் (1519) வயது 33% ஆனவர்களே. பெருந்தோட்ட வேலையின்மைப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் தற்போது இடைநிலைக் கல்வியை முடித்தவர்கள். இவர்கள் தமது மூத்த தலைமுறையினரைப் பின்பற்ற விரும்பவில்லை. அரசாங்கத்துறைகளையோ அல்லது ஏனைய கண்ணியமான தொழில்களையோ விரும்புகின்றனர். பெருந்தோட்ட இளைஞர்கள், பெருந்தோட்டங்களுக்கு அப்பால் சென்று தொழில் பெறுவதில் பல இடையூறுகள் உண்டு. அவையாவன

1. அரசாங்கதுறை வேலைவாய்ப்புக்கள் அண்மைக்காலங்களில் குறைந்துள்ளமை (15% வேலைவாய்ப்புக்களே அரசாங்கத்துறையிலும் உண்டு)
2. வேலை வழங்குவதில் காட்டப்படும் இனப் பாராபட்சம்.
3. முறையான ஆவணங்கள் (பிறப்புச் சான்றிதழ், தேசிய அடையாள அட்டை என்பன) இல்லாமை.
4.சந்தைப்படுத்தக்கூடிய கல்வித் தகைமைகள், திறன்கள் இல்லாமை (தனியார் துறையினர் விரும்பும் ஆங்கில அறிவு கணினி அறிவு தொடர்பாடல் திறன் என்பன).
5. பிறமொழி அறிவின்மை (சிங்களம், ஆங்கிலம்)
6. தற்போது நாட்டில் இன உறவுகள் சீர்குலைந்துள்ள நிலையில் இளைஞர்களின் நடமாட்டம் கட்டுப்பாட்டுக்குள்ளாகி உள்ளமை.
இவ்விளைஞர்கள் வேலைக்காகக் காத்திருக்கும் காலமும் தற்போது நீண்டு செல்வதாக கூறப்படுகின்றது. 20 சதவீதமானவர்கள் இரு ஆண்டுகளாகக் காத்திருப்பதாகவும் 80 சதவீதமானவர்கள் தமது முதலாவது தொழிலைத் தோட்டஞ்சாராத ஏனைய துறைகளை நாடுவதாகவும் கூறப்படுகின்றது.
மறுபுறம் பெருந்தோட்டங்களில் தொழிலாளர் பற்றாக்குறை காணப்படுவதாகக் கம்பனிகள் முறைப்பாடு செய்கின்றன. ஒரு புறம் இளைஞரின் வேலையின்மைப் பிரச்சினை. மறுபுறம் பெருந்தோட்டங்களில் தொழிலாளர் பற்றாக்குறை. இவ்வாறான நிலைமை பெருந்தோட்டங்களில் ஒரு நெருக்கடி நிலையை ஏற்படுத்தும் சாத்தியமும் உண்டு.

முடிவுரை

இந்திய வம்சாவளித் தமிழர்களைப் பொறுத்தவரையில் அண்மைக் காலங்களில் அவர்களுக்கெதிராக இனவன்முறைச் சம்பவங்களும், காவல்துறையினரின், பாதுகாப்புப் படைகளுடைய கெடுபிடிகளும் அதிக அளவிலான பாதுகாப்பின்மை உணர்வினை ஏற்படுத்தியுள்ளன. வர்த்தகச் சமூகத்தினர் கடத்தப்படுகின்றனர். அவர்களிடமிருந்து கப்பப் பணமும் அறவிடப்பட்டது. பலர் தொழில் ஈடுபாட்டைக் குறைத்துவிட்டு இந்தியா சென்றுவிட்டனர். இவர்கள் தவிர்ந்த தோட்டத் தொழிலாளர்களும் இனவாதிகளின் தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றனர். அவர்கள் செறிந்து வாழாத தென்மலை நாட்டுப் பகுதிகளில் இதுபோன்ற ஏராளமான சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. இம்மக்கள் மீதான இன வன்முறைக்கு 1950 கள் தொடக்கம் ஆறு தசாப்த கால வரலாறு உண்டு. இது தனியாக ஆராயப்படவேண்டிய விடயம். இந்திய வம்சாவளித் தமிழர்கள், சிற்சில முன்னேற்றங்களைக் கண்டிருந்தாலும், அரசியல் பங்கேற்பு, தொழில் வாய்ப்பு, கல்வி, சுகாதாரம், வீட்டு வசதி எனப் பல்வேறு குறிகாட்டிகளைப் பொறுத்தவரையில் உலளாவிய பெருந்தோட்டச் சமூகங்களோடும் இலங்கையில் வாழுகின்ற ஏனைய சமூகங்களோடும் ஒப்பிடும்போது பின்தங்கிய சமூகத்தினராகவே வாழ்ந்து வருகின்றனர். வறுமை பற்றிய இலங்கை ஆய்வுகள் பெருந் தோட்டத்துறையில் அண்மைக்காலங்களில் வறுமை அதிகரித்து வருவதாகவே எடுத்து கூறுகின்றன.(நகர் புறங்களில் வறுமையான குடும்பங்கள் 06.2% கிராமப்புறங்களில் 20.8%“ பெருந்தோட்டங்களில் 24.3% இலங்கைக் குடிசன மதிப்பீட்டு அறிக்கை) இப்பின்புலத்தில் இம்மக்கள் சமூகத்துக்கான தனியான அபிவிருத்தித் திட்டம் ஒன்று தேவைப்படுகிறது. அத்தகைய பத்தாண்டுத் திட்டமொன்று (2006 2015) தற்போது பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சினால் தயாரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Saturday, June 12, 2010

WHAT BROUGHT INDIAN LOBOUR TO SRILANKA

Almost every governor in the British period commented on the laziness of the natives even before the question of a regular supply of labour for the coffee plantations arose. The first British governor, lord north (1798-1805) obtained labour from south India for a pioneer corps which functioned as auxiliaries to the British army in an unsuccessful invasion of the kingdom of Kandy. North had a poor opinion of Sinhalese civilian workers who “desert even before they reach the frontiers” (of the kandyan kingdom).

He praised the south Indian pioneers and stated that it was probably their good example that “contributed to the extraordinary and good behavior of the cingalese (Sinhalese) coolies who went with them”. Earlier however north had defended the Sinhalese against charges of indolence in a dispatch to Lord Hobart, the governor of madras when he wrote:
The cingalese like every other people had rather be poor and idle than work for nothing; and during the Dutch government they had no other alternative. The enjoyment of security and prosperity for a certain time is undoubtedly necessary to give them a correct idea of the relative value of labour and acquisition. But in the neighborhood of the great towns and even in the interior of the country they are every day acquiring that knowledge with a rapidity which astonishes me.

Governor sir Thomas Maitland (1805-1811) criticized north for having incurred expenditure in importing south Indian labour but he too criticiesd the Sinhalese, saying “there is not an inhabitant in this island that would not sit down and starve out the year under the shade of two or three cocoa nut trees, the whole of his property, the whole of his subsistence, rather than increase his income and his comforts by his manual labour.”

Governor Barnes (1824-1831) would have tried Sinhalese labour before he experimented with Indian labour in which, as seen earlier he was unsuccessful. That he held a poor opinion of the Sinhalese is seen in a letter to Bathurst in which he wrote that the coconut tree “supplies all their wants, which appear to be extremely small, for generally speaking they are, with a very small exception of covering round their waist in a perfect state of nudity…” Barnes was unsuccessful in getting the Sinhalese to join the pioneer corps despite offered of high wages. While ordinary workers were offered 71/2 d a day, artificers were offered 91/4 d and in both cases the wives of the men were also offered rations in kind, or cash. Despite these terms less than a dozen men enlisted according to Calvin r. De Silva. De Silva says Barnes regarded the Sinhalese as “innately prone to idleness” but the Tamils were not brought under this accusation “their industry being always considered exemplary.”

As the coffee industry grew in importance the question of a regular supply of labour also grew in importance and none of Barnes’ successors had any doubts that this supply should come from south India.