POPULATION

Entire population of indian origin upcountry tamil people is currently estimated as 1.5 millian. out of this .75 millian people live outside tea estates and elswhere in the country.only 50% of the people live and work at tea estates and this containes of 3800 families.in 1950 ,six decades ago 90% of above population lived and dependants of tea estates . because of lower wage and poor living conditions people are try to find works outside tea estats and distracted from tea industry.if this tendancy continues in for another five decades there going to be hardley any single workers family going to be left inside in a tea estate.

a tea estate with dwelings

a tea estate with dwelings

it is so cold

it is so cold
there is no way out

sun set pictures near galle

sun set pictures near galle




perspective

perspective
imbulpitiya tea estate near nawalapitiya from the distance

new developments

new developments
after 1972when the parliament passed land ceiling act the hill country border plantations were divided into small portions given to sinhala peasants colonnialising the plantation districts.

workers children.....it is difficult to smile

workers children.....it is difficult to smile

Friday, February 26, 2010

FIRST COFFEE ESTATE

Coffee which had been a peasant crop before the British arrival was a very minor crop in the early years of British rule. Between 1801 and 1804, exports averaged only 1,116 cwts. Cultivation was carried out by peasants in home gardens and the collection and marketing of the output was handled by Muslim traders who often obtained the coffee though barter with cotton goods,trinkets,ect.systematic Cultivation by the British began in 1823,and between 1823 and 1825 exports averaged 10,246cwts.
The brothers Henry and Geory bird, and Governor Barnes,were the pioneers of coffee Cultivation on a plantation basis. Henry bird who was deputy commissary general of H.M.FORCES in Ceylon died at Kandy in 1829 of cholera,but his son Henry C.Bird who also become a Colonel like his father, managed the plantation at Sinnapitiya near Gampola. There had been a quarrel between Henry and his brother Geory, and Henry Bird (jnr)reverted to an earlier spelling of Byrde.
A.M.Ferguson describes Geory Bird as "the real pioneer of coffee planting on a large scale," and says he established the first coffee estate at Gampola in 1824. George was a coffee planter for 33 years but does not seem to have reaped much benefit from his pioneering endeavours. In Ceylon in 1837-1846 Ferguson writes of Goerge Birds singular want of success....having been the measure of conferring singular advantages on others, by the energy of his character, while to himself the pioneer of coffee cultivation, his best efforts served only to prolong his disappointment. Meanwhile Henry Birds son Henry become an important figure in the planters Association in which he served as chairman for four terms and as secretary for seven term.
Barnes had a coffee plantation at Gannoruwa which later become part of the Royal Botanical garden at peradeniya,near Kandy. in order to get the best possible scientific advice,Barnes transferred the botanical garden from slave island in Colombo to peradeniya, and officials to the gardens were told about Barnes interest in the coffee industry. Barnes personal example in cultivating coffee was less important than the measures he took to establish the industry on a firm foundation by providing land for estates; on opening up a network of roads,and abolishing the export duty of five per cent. bird and Barnes were the first to import Indian labour. they got down 150 Indian Tamil workers wages range from 12 to 15 shillings per month but their experiment was a failure as all the workers returned to India within a year.

Wednesday, February 24, 2010

the word COOLY

The words "cooly" and "native" acquired derogatory connotations as the winds of change swept across the world after the second world war but they were not used in a pejorative sense in the last century. Hobson-Jobson has a lengthy description of "cooly". it begins its definition with "A hired labourer or burden carrier and in modern days especially a lobourer induced to emigrate from india or from china to lobour in the plantation of Mauritius,Reunion,or the west indies, sometimes under circumstances, especially in french colonies, very near to slavery...". the long description ends with "The familiar use of cooly has extended to the straits settlements, Java and China, as well as to all tropical and sub-tropical colonies, Whether English or foreign." Among the coffee planters and officials of the last century "cooly" was simply the word for a worker , or lobourer, and there are even affectionate references to coolies in the proceedings of the planters Association which wasthe parliament of the coffee planter and later the tea planters."The coolies (god bless them..., " said Alexander Brown in a speech in which he referred to the pre-railway days when the coolies were not only engaged in the growing, harvesting and processing of coffee but were also beasts of burden in carrying bags of coffee to roads several miles away. It was around the period of the second world war that there was sensitivity over the use of the word "cooly". In 1942 when Mr.justice (later sir Frances) soertsz, a Ceylonese supreme court judge, was presiding at a trial in which six estate workers were charged with the murder of a tea planter, C.A.G.pope, he used the word "cooly" in his address to the jury but immediately apologised for its use and asked them to consider the use of the word as withdrawn. He thereafter referred to the six accunsed as estate labourers. The use of such words however dies hard. As recently as in the late 1970s when the India international centre organized a seminar on overses Indians and their relationship with india, some of thespeakers referred to their fellow countrymen abroad as COOLY

Tuesday, February 23, 2010

கோப்பிக் காலத்திலே...

“டின்னில் அடைத்த புழுக்களைப் போல் கப்பலில் வந்த தொழிலாளர்கள்”

ஹென்றி ஒல்கொட்

1840களைத் தொடர்ந்து இலங்கையின் கோப்பிப் பெருந்தோட்டச் செய்கை பரபரப்பான கட்டத்தையடைந்தது. கோப்பிக்கு நல்ல விலை கிடைத்தபோது அறுவடை செய்வதற்கு தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டதால் தென்னிந்தியாவில் இருந்து வருகை தரும் தொழிலாளரின் தொகையை உத்தரவாதப்படுத்த வேண்டியிருந்தது. வரும் தொழிலாளர்கள் அறுவடை முடிந்ததும் திரும்பிப் போய் விடுவதால் அவர்களை மீண்டும் வரச் செய்ய செலவுகள் மேற்கொள்ள வேண்டியிருந்தது. இதனால் கோப்பித் தோட்ட உரிமையாளர்கள் அரசாங்கத்துக்கு நெருக்குதல் கொடுத்தனர்.

அதன் காரணமாக அரசாங்கம் தொழிலாளர்கள் வந்து போவதை உத்தரவாதப்படுத்துவதற்காக இலவச கப்பற் போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்தது. கப்பல் சேவைகளை ஏற்படுத்தியது. எனினும் இந்த கப்பல் சேவைகள் தொழிலாளர்களுக்கு சிம்ம சொப்பனமாகவே இருந்தன.

இலங்கையின் புகழ்பெற்ற அமெரிக்க மதவாதியான கர்னல் ஹென்றி ஸ்டீல் ஒல்கொட் அவர்களின் கூற்றுப்படி கோப்பித் தொழிலாளர்கள் இலங்கைக்குக் கப்பலில் அழைத்து வரப்பட்டபோது அவர்கள் டின்களில் அடைக்கப்பட்ட புழுக்கள் போன்ற நிலையில் இருந்தனர் என்று கூறியுள்ளார். கடலில் படகுகளுக்கு பல விபத்துக்கள் நடக்கின்றன என்றும் நூற்றுக்கணக்கானவர்கள் இறந்தும் காணாமலும் போயுள்ளனர் என்றும் அவர் (1843) குறிப்பிட்டுள்ளார்.

1840களில் மெட்ராஸ் மானிலத்தில் மிகத் தீவிரமான பஞ்சம் தலைவிரித்தாடியது. ஆயிரக்கணக்கான மக்கள் தமிழ் நாட்டின் கரையோரப் பிரதேசங்களில் வந்து குவிந்து தமது கையிலிருந்த இறுதிக் காசையும் செலவழித்து எப்படியாவது கண்டிச் சீமைக்கு சென்றுவிட வேண்டுமென்று தவியாய்த் தவித்தனர். நிலைமையை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட படகு முதலாளிகள் அதிக கட்டணத்தை அறவிட்டதுடன் அளவுக்கதிகமான தொகையினரை படகுகளில் திணித்துக் கொண்டும் வந்தனர். இதனால் நடுக்கடலில் பல அழிவுகள் ஏற்பட்டன. இந்த நிலைமையைக் கட்டுப்பாட்டில் கொண்டு வர அரசாங்கம் இலவச படகுச் சேவையை ஆரம்பித்தது. எனினும் இச்சேவை நீண்டகாலம் நீடிக்கவில்லை. இச்சேவை 1844ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டதென வரலாற்று ஆய்வாளர் பேராசிரியர் பர்ட்ரம் பஸ்தியாம்பிள்ளை தெரிவிக்கின்றார்.

அதனைத் தொடர்ந்து தனியார் படகுச் சேவைகள் மேலும் அதிகரித்தன. அன்றைய பெறுமதியில் 6 பென்சில் இருந்து 9 பென்ஸ் வரை தலைக்கு கட்டணம் அறவிடப்பட்டது. இது இந்திய ரூபாவில் 12 அனாவாக இருந்தது. தொழிலாளர் தமது கிராமங்களில் இருந்து தொகையாக தமிழக படகுத் துறைகளில் வந்து குவிந்தனர். அவர்கள் மன்னாரிலோ அல்லது வடமேற்குக் கரைகளிலோ அமைந்திருந்த இலங்கை படகுத் துறைகளில் ஒன்றில் இறக்கப்பட்டனர்.

ஏற்கனவே பல படகுகள் கடலில் மூழ்கி நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் ஒவ்வொரு விபத்திலும் பலியாகி இருந்த போதும் 1853ஆம் ஆண்டு கொழும்பு என்ற பெயர் தாங்கிய கப்பல் கவிழ்ந்து 100 பேர் வரை இறந்து போனமையே முதலாவது கடல் விபத்தாக பத்திரிகைகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது. கொழும்புத் துறைமுகத்தில் இருந்து 150 தொழிலாளர்களுடன் புறப்பட்ட இச் சிறு கப்பல் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே சுழிக்காற்றில் அகப்பட்டு கவிழ்ந்ததென்றும் இதில் 100 பேர் வரை இறந்திருக்கலாம் என்றும் "த ஒப்சேவர்' பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது. இந்த கப்பலில் சென்றவர்கள் கோப்பித் தோட்டங்களில் கொலரா நோய் தீவிரமாகப் பரவியமை காரணமாக அதில் இருந்து தப்பிப் பிழைப்பதற்காகச் சென்றவர்கள்.

இந்த விபத்தைத் தொடர்ந்து இலங்கையிலும் இங்கிலாந்திலும் அரச உயர் மட்டங்களில் சலசலப்பு ஏற்பட்டது. தொழிலாளர்களின் பாதுகாப்பு, எத்தனை பேரை ஒரு கப்பலில் ஏற்றலாம் என்பது தொடர்பில் இங்கிலாந்தில் இருந்த இராணியின் சட்ட நிபுணருடன் (கிதஞுஞுணண் அஞீதிணிஞிச்tஞு) ஆலோசித்து சில சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன என ஆய்வாளர் கே.எம்.டி. சில்வா குறிப்பிட்டுள்ளார். இதனால் தொழிலாளரின் சுதந்திரமான வருகையில் தடைகள் ஏற்பட்டன. தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டது. எனவே 1854 முதல் செயற்பட்டு வந்த இலங்கை தோட்டத் துரைமார் சங்கத்தினர் (கடூச்ணtஞுணூண் அண்ண்ணிஞிடிச்tடிணிண) அப்போது ஆளுனராக இருந்த அன்டர்சன் (அணஞீஞுணூண்ணிண) அவர்களிடம் தொழிலாளரை இறக்குமதி செய்து தருமாறு கோரிக்கை விடுத்தது. ஆனால் அவரிடமிருந்து சாதகமான பதில் கிடைக்கவில்லை.

அன்டர்சனுக்குப் பின் இலங்கையின் ஆளுனராகப் பதவியேற்று வந்த சேர். ஹென்றி வார்ட் (1855 1860) (குடிணூ ஏஞுணஞீணூதூ ஙிச்ணூஞீ) கோப்பிப் பயிர் செய்கையின் வளர்ச்சியில் அதிக அக்கறை எடுத்துக் கொண்டார். அவர் தொழிலாளர்களின் கிடைப்புத்தன்மையை உத்தரவாதப்படுத்துவதற்காக கொழும்பிலும் லண்டனிலும் இருந்த ஆர்வமுள்ள வர்த்தகப் பிரமுகர்களை இணைத்துக் கொண்டு கப்பல் போக்குவரத்து கட்டமைப்பொன்றை ஏற்படுத்தினார். அதன் பிரகாரம் 1856ஆம் ஆண்டு சிலோன் கூலிப் போக்குவரத்து நீராவிக்கப்பல் கம்பனி (இஞுதூடூணிண இணிணிடூதூ கூணூச்ணண்ணீணிணூt ச்ணஞீ குtஞுச்ட் Nச்திடிஞ்ச்tடிணிண இணிட்ணீச்ணதூ) உருவானது. இதற்கான முதலீடான ஸ்டர்லின் பவுண் 25,000ஐப் பெற்றுக் கொள்ள பத்து பவுண் பங்குச் சான்றிதழ்கள் விநியோகிக்கப்பட்டபோது அதற்கு கணிசமான வரவேற்பு கிடைத்தது. 1857ஆம் ஆண்டு இலங்கையின் கோப்பி வர்த்தகத்தின் வளர்ச்சி கருதியும், பொது வேலைகளில் ஈடுபடுத்தவும் என இந்தியத் தொழிலாளரின் வருகையை மேலும் அதிகரிக்கச் செய்ய தான் 10,000 பவுண் வட்டியில்லாக் கடனை கூலிப் போக்குவரத்துக் கம்பனிக்கு வழங்கத் தீர்மானித்திருப்பதாக ஆள்பதி வார்ட் சட்ட சபையில் அறிவித்தார். வருடாந்தம் 50,000 முதல் 100,000 கூலிகளை இலங்கைக்கு அழைத்துவர உத்தரவாதமளிப்பதாக தோட்டத் துரைமார் சங்கத்திடமும் தெரிவித்தார்.

எனினும் அவரது திட்டங்கள் தோல்வியிலேயே போய் முடிந்தன. அவர் எதிர்பார்த்தபடி இலங்கை வர்த்தகர்களும் தோட்டத் துரைமார் சங்கமும் தங்கள் பங்கு ஒத்துழைப்பை வழங்கத் தவறினர். 1858ஆம் ஆண்டு 96,662 ஆக இருந்த தொழிலாளரின் வரவு 1859ஆம் ஆண்டு 40,104ஆகக் குறைந்தது. இதற்கு பல காரணிகள் பங்களிப்புச் செய்தன.

தொழிலாளர்களை ஏற்றி வருவதற்கென பவுண் 5,000 செலவழித்து கொள்வனவு செய்யப்பட்டிருந்த மான்செஸ்டர் (Mச்ணஞிடஞுண்tஞுணூ) என்ற கப்பல் ஒன்றுக்கும் உதவாததென பின்பே ஹென்றி வார்டுக்குத் தெரிந்தது. அதனை பழுது பார்ப்பதாயின் மேலும் 7,500 பவுண்கள் தேவைப்படும் என மதிப்பிடப்பட்டது. எனவே அதனை உடைத்து காயலாங்கடைக்குப் போட்டு விடும்படி காலனித்துவ செயலாளருக்கு வார்ட் விதந்துரை செய்தார்.

ஹென்றி வார்ட் என்னதான் முயற்சித்தாலும் காரியங்கள் அவரது கையை மீறியே நடைபெற்றன. தொழிலாளர்கள் ஸ்டீமர் படகுகளுக்குப் பதில் தனியார் படகுகளில் பிரயாணிப்பதையே அதிகம் விரும்பினர். அரசாங்கக் கெடுபிடிகளே அதற்குக் காரணம். ஆதலால் முழுப் போக்குவரத்தையும் ஒழுங்குபடுத்த இலங்கையிலும் இந்தியாவிலும் பல சட்டங்கள் ஏற்படுத்தப்பட்டன. அதன் பிரகாரம் பின்வரும் ஒழுங்குவிதிகள் கொண்டுவரப்பட்டன.

1. விதிக்கப்பட்டுள்ள அளவுக்கு மேல் படகுகளில் கூலிகளை ஏற்ற முடியாது. அவ்விதம் ஏற்றினால் தலைக்கு 2 பவுண்கள் அபராதம் விதிக்கப்பட்டது.

2. 4 தொன்களுக்கு 1 பிரயாணி என்ற விகிதாசாரம் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.

3. ஒரு பிரயாணிக்கு 6 அடி பரப்பு வழங்கப்பட வேண்டும். இரண்டு டெக்குகளுக்கும் (ஈஞுஞிடுண்) இடையில் 5 அடி இடைவெளி இருக்க வேண்டும்.

4. போதுமான உணவும், குடிநீரும் இருக்க வேண்டும்.

5. குறித்துரைக்கப்பட்ட படகுத் துறைகளிலேயே தொழிலாளரை இறக்க வேண்டும்.

எனினும் இவற்றாலெல்லாம் முறைகேடுகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

ஆள்பறி ஹென்றி வார்ட்டை அடுத்து சேர் சார்ள்ஸ் மெக்கார்த்தி (1860 1863 குடிணூ இடச்ணூடூஞுண் Mஞுஞிஞிச்ணூtடதூ) பதவி பெற்று வந்தார். அவர் வார்ட்டின் நடவடிக்கைகளை செலவுமிக்கது என விமர்சித்து பல சட்டங்களையும் திருத்தினார். ஏற்படுத்தப்பட்டிருந்த குடிவரவு தொழிலாளர் ஆணையாளர் சபையையும் (ஆணிச்ணூஞீ ணிஞூ ஐட்ட்டிஞ்ணூச்tடிணிண ணிஞூ ஃச்ஞணிதணூ இணிட்ட்டிண்ண்டிணிணஞுணூண்) கலைத்துவிட்டார்.

மெக்கார்த்தியின் காலத்தில் ஷாரா ஆர்மிடேஜ் (குச்ணூச்ட அணூட்டிtச்ஞ்ஞு) ஜெரால்டினா (எஞுணூச்டூஞீடிணச்) ஆடி லெட்சுமி (அதஞீதூ ஃஞுtஞிடதட்டிதூ) ஆகிய கப்பல்கள் தொழிலாளர்களை ஏற்றி வந்தன. மெக்கார்த்தி தானே நேரடியாக மன்னார் இறங்குதுறைக்குச் சென்று அங்கு தொழிலாளரின் ஆரோக்கியம் பற்றி அவதானித்தார். அரசாங்கத்தின் குறைந்த கட்டண கப்பற் சேவையால் தனியார் படகுச் சேவை செயலிழந்ததாக அவர் சட்ட சபையில் தெரிவித்தார்.

எனினும் கப்பற் சேவைகளில் மீண்டும் பிரச்சினை ஏற்பட்டது. 1864ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் ஒரு நாள் மன்னார் வங்காலையில் இருந்து 150 தொன் பாரத்துடன் தொழிலாளரை ஏற்றிச் சென்ற ஆடி லெட்சுமி என்ற கப்பல் நடுக்கடலில் விபத்தில் சிக்கித் தூக்கியெரியப்பட்டது. இதில் பயணித்த 120 தொழிலாளர்களில் 7 தொழிலாளர்ளும் கப்பல் சேவையாளர் 14 பேரும் மட்டுமே தப்பிப் பிழைத்தனரென டைம்ஸ் ஒப் சிலோன் பத்திரிகை செய்தி வெளியிட்டது.

இந்நிகழ்வு பற்றி அப்பத்திரிகை பின்வருமாறு தெரிவித்திருந்தது.

பெப்ரவரி 5ஆம் திகதி காலை 7 மணி அளவில் கப்பல் நடுக்கடலில் சென்று கொண்டிருக்கும் போது கப்பல் ஊழியர் தலைவன் கப்பலுக்கு வட கிழக்குப் பக்கமாக கடல் நீர் வானம் வரை எழுந்து வேகமாக சுழன்று நகர்வதைக் கவனித்தான். எனினும் கப்பல் வடமேற்குத் திசையில் சென்று கொண்டிருந்ததால் அவன் அது தொடர்பில் அதிக அக்கறை கொள்ளவில்லை. ஆனால் அந்த சுழலும் நீர்த்தாரை கப்பலை நோக்கி வந்தபோது அவர்களால் கப்பலை அப்பால் நகர்த்திச் செல்ல முடியவில்லை. காற்றுடன் வேகமாக சுழன்ற நீர்த்தாரை நீரிலிருந்து சுமார் மூன்றடிக்கு மேல் கப்பலைத் தூக்கி எரிந்தது. அநேகமான தொழிலாளர்கள் கப்பலின் அடித்தளத்திலேயே இருந்தார்கள். கப்பல் உடைந்து சிதறியபோது அதன் துண்டுகளை பிடித்துக் கொண்டு மிதந்தவர்களை அவ்வழியால் வந்த மற்றுமொரு கப்பலில் இருந்தவர்கள் பி.ப. 2 மணியளவில் காப்பாற்றினர்.

இவ்விபத்து தொடர்பில் விசாரணை ஒன்று இடம்பெற்றபோதும் யார் மீதும் குற்றம் சுமத்தப்படவில்லை. எனினும் இது கவனக்குறைவால் நிகழ்ந்தது என பின்னர் விமர்சிக்கப்பட்டது.

அதே ஆண்டு சாரா ஆர்மிப்பேஜ் என்ற கப்பலும் சிலாபத்துக்கருகில் பேரலையில் மோதி விபத்துக்குள்ளானது. அதில் 60 கூலித் தொழிலாளர் உயிரிழந்தனர் என்று செய்தி வெளிவந்தது. என்றபோதும் பின்னர் இரண்டு உடல்கள் மட்டுமே மீட்கப்பட்டன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விதம் அரசாங்கக் கப்பல்கள் மூழ்கிய போது செய்திகள் வந்தபோதும் பல தனியார் படகுகள் மூழ்கி நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தபோது அந்நிகழ்வுகள் யாரது கண்ணிலும் படாமல் போயின என்று ஆள்பதி ஹென்றி வார்டின் சுய சரிதத்தை எழுதிய எஸ்.வி. பாலசிங்கம் தெரிவித்திருப்பதாக ஆய்வாளர் டெனோவன் மொல்ட்ரிச் தனது பிட்டர் பெரி பொண்டேஜ் (ஆடிttஞுணூ ஆஞுணூணூதூ ஆணிணஞீச்ஞ்ஞு) என்ற நூலில் தெரிவித்துள்ளார்.


இரா.சடகோபன்

Monday, February 22, 2010

மலையக மக்கள்

மலையக மக்களும் அவர்களுக்கான

சுய பொருளாதாரமொன்றின் அவசியமும்

சட்டத்தரணி இரா. சடகோபன் பி.ஏ.

தலைவர்

மலையக மக்கள் அபிவிருத்தி ஆய்வு மன்றம்

 மலையக மக்கள் என்போர் யார்?


வரலாற்றுப் பின்னணி

இலங்கையில் இந்திய வம்சாவழி மலையக மக்கள் என்போரின் தோற்றம் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பிருந்து ஆரம்பிக்கின்றது. சிலர் இவர்களின் தோற்றத்தினை கோப்பிப் பயிர்ச்செய்கையின் ஆரம்பத்துடன் ஆரம்பிக்கின்றனர். எனினும் இலங்கையில் இந்திய வம்சாவழித் தமிழரின் பிரசன்னம் முதலாம் ராஜசிங்கன் காலத்திலும் (சீதாவாக்கை மன்னன்) அதன் பின்னர் ஒல்லாந்தர் காலத்திலும் (1638 1796) இருந்துள்ளது. பின்னர் 2ஆம் ராஜசிங்கன் மன்னன் காலத்தில் மதுரை நாயக்க அரச வம்சத்தில் இருந்து மணப் பெண்களை அழைத்து கண்டி மன்னர்கள் திருமணம் செய்து கொள்ளும் வழக்கம் ஆரம்ம்பமாயிற்று. பல காலங்களில் பரிவாரமாக இலங்கை வந்த இந்திய வம்சாவழியினர் மீண்டும் இந்தியாவுக்குச் சென்றுவிட்டதற்கு ஆதாரமில்லை. இக்காலத்தில் இலங்கையின் கரையோரப் பகுதியில் கொழும்பு முதல் களுத்துறை வரையில் காணப்பட்ட கறுவாப்பயிர்ச் செய்கையில் இந்தியத் தமிழர் பெருந்தொகையில் அழைத்து வரப்பட்டு ஈடுபடுத்தப்பட்டனர். இவர்கள் பின்னர் முற்றிலும் சிங்களவர்களாக மாறிப் போய்விட்டனர்.

அடுத்த கட்டத்தில் பிரித்தானிய கவனித்துவ அரசு காலத்தில் நிர்வாகக் கட்டமைப்புக்கள் பலப்படுத்தப்பட்டபோது கொழும்பை மையமாகக் கொண்டு இந்திய வம்சாவழி மக்களின் சனத்தொகை அதிகரித்தது. இதன் முதற்கட்டமாக இலங்கையின் பிரித்தானிய ஆளுனராக பிரடரிக் நோர்த் என்பவர் கடமையாற்றிய போது 1804 ஆண்டு முதன் முறையாக தென்னிந்திய தொழிலாளர்களை உள்ளடக்கியதான முன்னோடிப் படைப்பிரிவு (கடிணிணஞுஞுணூ இணிணூணீண்) ஒன்றை அமைத்தார். இலங்கையின் கடைசி சிங்கள அரசான கண்டி ராச்சியத்தை 1815ஆம் ஆண்டு கைப்பற்றும் போதும் அதன் பின்னர் 1818ஆம் ஆண்டு கண்டிக் கிளர்ச்சியை அடக்கும் போதும் இராணுவத் துணைப் படையில் 5000 இந்தியத் தொழிலாளர் தொழில் புரிந்தனர் என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. இந்த அரை இராணுவ துணைப்படைப்பிரிவு பின்பு மேலும் விஸ்தரிக்கப்பட்டு பொது வேலைப் படைப்பிரிவாக மாற்றப்பட்டது. பின்னர் இவர்களே கொழும்பு கண்டிப் பாதை, கொழும்பு காலி பாதை, கொழும்பு திருகோணமலைப் பாதைகளையும் அவற்றில் காணப்படுகின்ற பாலங்களையும் (களனி ஆற்றின் மேல் அமைக்கப்பட்ட விக்டோரியா பாலம் முதலாவது பாலம்) சுரங்கங்களையும் அமைத்தனர்.மேலும் ஒரு தொகையினர் பட்டிண, நகரசபை சுத்திகரிப்பு தொழிலாளர்களாக அமர்த்தப்பட்டனர்.

இலங்கையில் பெருந்தோட்டத்துக்கென அழைத்து வரப்பட்ட முதலாவது தொழிலாளர் பிரிவில் 1800 பேர் இருந்தனர். 1818ஆம் ஆண்டு பிரித்தானிய தேசாதிபதியாக இருந்த எட்வர்ட் பார்ண்ஸ் (உஞீதீச்ணூஞீ ஆச்ணூணண்) என்பவரும் கோப்பிப் பெருந்தோட்டம் அமைக்கும் முதல் முயற்சியில் கம்பளை சின்னப்பட்டி என்ற இடத்தில் (தற்போது சிங்ஹபிட்டி) இவர்களைக் கொண்டு கோப்பித் தோட்டம் அமைத்தனர். அதன் பின்னரான கோப்பிப் பெருந்தோட்டத்தையும் அது வீழ்ச்சியடைந்தமையும் பின்னர் தேயிலை பெருந்தோட்டமும், றப்பர் நடுகையும், கொக்கோ பற்றியம் நமக்குத் தெரியும். இப் பெருந்தோட்டங்கள் நன்கு வளர்ச்சி பெற்று இலங்கையின் பொருளாதாரத்தில் பிரிக்க முடியாத அளவு இணைந்து போய்விட்டன.

இலங்கையின் கோப்பி மற்றும் தேயிலைப் பெருந்தோட்ட பொருளாதார வளர்ச்சியுடன் கொழும்புத் துறைமுக வளர்ச்சிக்கும் இலங்கையின் ரெயில்வே மற்றும் பெருந்தெருக்கள் போக்குவரத்து வலைபின்னல் அமைப்பு வளர்ச்சிக்கும் தென்னிந்தி தமிழ்த் தொழிலாளர்களே அடிமரமும் ஆணிவேருமாக இருந்தனர்.

சனத்தொகையும் பரம்பலும்

மலையக இந்திய வம்சாவழித் தமிழ் மக்களின் சனத் தொகைக் கணிப்பீடுக்ள இவர்களின் உண்மையான சனத்தொகையை பிரதிபலிக்கவில்லை என்பது மிக வெளிப்படையான உண்மையாகும். பல்வேறு சமூக, பொருளாதார, அரசியல் காரணிகளின் நிமித்தம் இவர்கள் தம்மை இந்திய வம்சாவழித் தமிழர்கள் என்று சனத்தொகை கணிப்பீடுகளின் போது பதியத் தவறியதால் இம் மக்களின் மொத்த சனத்தொகையை சரியாக அறிய முடியாதுள்ளது. உத்தியோகபூர்வமற்ற தகவல்களின்படி இவர்களின் மொத்த சனத்தொகை சுமார் 1,500,000 (பதினைந்து இலட்சம்)மாக இருக்கும் என்று கருதப்பட்ட போதும் 2001 ஆண்டின் உத்தியோகபூர்வமான சனத்தொகை புள்ளிவிபரக் கணக்கெடுப்பின் படி இவர்களின் மொத்த சனத்தொகை 855,891 மட்டுமே. (கணக்கெடுப்பு இடம்பெற்ற 18 மாவட்டங்களில் மட்டும்) 1981 ஆண்டின் சனத்தொகை புள்ளிவிபரக் கணக்கெடுப்புகளின் பிரகாரம் இவர்களின் சனத்தொகை 818,665 ஆக இருந்தது. இதன்படி பார்த்தால் உத்தியோகபூர்வ புள்ளி விபரங்கள் வெறும் 37,235 பேர்களிலான (20 வருடங்களில்) அதிகரிப்பையே காட்டுகிறது.

இது இப்படி இருக்க தனிப்பட்ட ஆய்வாளர்களின் கணிப்பீட்டின்படி இலங்கை முழுவதுக்குமான மொத்த இந்திய வம்சாவழி மலையகத் தமிழரின் சனத்தொகை 1,202,349 ஆகும். இலங்கையின் எல்லா மாவட்டங்களிலும் இவர்களது சனத்தொகை பரவலாக சிதறிக் காணப்பட்டாலும் மதிப்பிடப்பட்ட புள்ளிவிபரங்களின்படி கொழும்பு மாவட்டத்திலும் (155,411), நுவரெலியா (370,747), கண்டி (132,214), பதுளை (164,016), இரத்தினபுரி (101,624), கம்பஹா (63,878), மாத்தளை (40,214), கேகாலை (53,329) முதலான மாவட்டங்களிலும் கணிசமான அளவு செறிந்து காணப்படுகின்றனர்.


தனியான தேசிய இனம்


கிடைக்கப்பெற்றுள்ள புள்ளிவிபரங்களின் படி இலங்கையின் இரண்டாவது பெரிய மக்கள் கூட்டத்தினராக மலையக தமிழ் மக்கள் இருக்கின்றனர். பெருந்தோட்டத் துறையில் தொழிலாளர்களாக வேலை செய்வதற்கென அழைப்பு வரப்பட்ட இம்மக்கள் இன்று அத்துறையின் நெகிழ்ச்சியற்ற சமூக உயர்ச்சி காரணமாக மிக மிக மெதுவாக அத்துறையில் இருந்து படிப்படியாக வெளியேறி இலங்கையின் ஏனைய சமூக பொருளாதார அரசியல் துறைகளில் இணைந்து கொண்டுள்ளனர். இன்று இம் மக்களின் 50% மாணவர்கள் மட்டுமே பெருந்தோட்டத்துறையில் தங்கி இருக்கின்றனர். 1995ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வின்படி பெருந்தோட்டத்துறையில் மொத்தம் 750,000 பேர் வதிவிடத் தொழிலாளர்களாக உள்ளனர். இவர்களையே மலையக பெருந்தோட்ட வதிவிடத் தொழிலாளர்கள் என்ற நிலையில் இருந்து தம்மை விடுவித்துக் கொண்டு இப்பிரதேசங்களுக்கு அண்டிய பகுதிகளில் குடிபெயர்ந்து சொந்தமான நிலத்திலோ அல்லது வாடகைக்கு வசிப்பவர்களாகவோ இருந்து கொண்டு வேறு தொழில் பார்ப்பவர்களாக உள்ளனர். எனினும் இவர்கள் அனைவருமே 1000 சமவுயரக் கோட்டுக்கு மேலான மலையகப் பிரதேசத்தில் வாழ்கின்றவர்கள் என்ற அடிப்படையில் மலையக மக்கள் என்ற வரையறைக்குள் வருபவர்கள். ஏனையோர் கொழும்பு போன்ற ஓர் இடத்தில் வசித்தாலும் மலையகத்தை தமது மூலவேராகக் கொண்டவர்கள் (கீணிணிt) என்ற அடிப்படையில் மலையக தமிழ் மக்கள் என்றே பார்க்கப்பட வேண்டும். எனவே இம்மக்கள் கூட்டத்தினரின் பெரும்பான்மையினமானவர்கள் மலையக மக்கள் என்ற வரையறைக்குள் வருவதால் இம் மக்களை மலையகத் தமிழ் தேசிய இனம் என்ற வரையறைக்குள் கொண்டு வரலாம். ஏனையோர் தம்மையும் இம்மக்களுடன் இணைத்துக் கொண்டு இவ்வரையறைக்குள் வர வேண்டும்.

இம் மக்கள் தம்மை இத்தகைய தேசிய இனம் என்ற ஒரு வரையறைக்குள் கொண்டு வர விரும்புகிறார்களா? என்ற கருத்தே இங்கு முக்கியம் பெறுகிறது. தேசிய இனக் கோட்பாட்டின் அண்மைக்கால அபிவிருத்தியின் படி ஒரு தேசிய இனம் தம்மை அவ்வாறு அழைத்துக் கொள்ள விரும்புகின்றது என்ற ஒரு அம்சமே அவ்வினத்தை தேசிய இனமாக அங்கீகரிக்கப் போதுமானதாகும் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. ஆதலினால் மலையக தமிழ் மக்களின் எதிர்கால நலன் கருதி அவர்கள் ஒரு தனியான தேசிய இனம் என்ற கருத்தை தொடர்ச்சியாக வலியுறுத்த வேண்டியதன் தேவை அவசியமாக எழுந்துள்ளது. எனவே இவர்கள் தொடர்பான பொருளாதார கட்டமைப்புக்களும் இக்கருத்தை அபிவிருத்தி செய்யும் விதத்திலேயே அமைய வேண்டும்.

மலையகத்தின் இட அமைவும் புவியியல் அம்சங்களும்


இட அமைவு

மலைநாட்டின் புவியியல் இட அமைவை பின்வருமாறு வரையறுக்கலாம். இலங்கையின் பல்வேறு புவியியல் பிரதேசங்களும் அவற்றுக்கேயுரிய சிறப்பம்சங்களின் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் மலைநாட்டுக்கேயுரிய தனியான சிறப்பம்சங்கள் உண்டு. அவற்றைப் பின்வருமாறு குறிப்பிடலாம்.

1. கடல் மட்டத்தில் இருந்து 1000 அடி அல்லது 300 மீற்றர் சம உயரக் கோட்டுக்கு மேல் உயரத்தில் அமைந்துள்ள பிரதேசம்.

2. புல்கொடை இறக்வானை குன்று தனியாகக் காணப்படுகின்றது

3. சிவனொளிபாதமலை, அப்புத்தளை, நமுனுகுல, நக்கிள்ஸ் மலைத்தொடர் ஆகிய நான்கு மலைத் தொடர்கள்.

4. மகாவலி, களுகங்கை, களனி, வளவை முதலான பெரிய ஆறுகள் இங்கு உற்பத்தியாவதுடன் பெரும் பள்ளத்தாக்குகளும், நீர்வீழ்ச்சிகளும் இங்குள்ளன.

5. சீரான வெப்பநிலையையும் (25 பாகை செல்சியஸ் 17 பாகை செல்சியஸ்) அதிக ஈரலிப்பான மழைக்கால நிலையையும் கொண்டு செழிப்பான பிரதேசமாக இது உள்ளது.

இலங்கையின் பொருளாதாரமும் தேயிலைப் பெருந்தோட்டக் கைத்தொழிலும்

தேயிலைப் பொருளாதாரத்தின் முக்கியத்துவம்

இலங்கையின் பொருளாதாரத்தில் தேயிலை பெருந்தோட்டக் கைத்தொழில் எந்தளவுக்கு முக்கியத்துவம் வகிக்கின்றது என்பதனை விளங்கப்படுத்தத் தேவையில்லை. மத்திய மலைநாட்டின் பயன்படுத்தத்தக்க அனைத்து நிலமும் தேயிலைப் பெருந்தோட்டங்களே காணப்படுகின்றன. இத் தோட்டங்களில் 99% தினர் இந்திய வம்சாவழி தமிழ் மக்களே தொழிலாளர்களாக தொழில் செய்த போதும் இவர்கள் இன்றும் இத்தோட்டங்களில் வெறுமனே வதிவிடத் தொழிலாளர் என்ற நிலையிலேயே உள்ளனர். முழு நாட்டினதும் தேசிய வருமானத்துக்கும் அந்நிய செலாவணி உழைப்புக்கும் பெரும் பங்காற்றும் இவர்களுக்கு இன்று சுதந்திரமாக குடியிருக்கும் ஒரு சிறு துண்டு நிலம் தானும் இல்லை என்பது தொடர்பில் நாம் எந்தளவுக்கு குரல் கொடுத்து உள்ளோம்.

இன்று தேயிலை பயிரிடப்படும் மொத்த நிலப்பரப்பு 188,000 ஹெக்டேயர்கள் ஆகும். இது 1981ஆம் ஆண்டு 245,000 ஹெக்டேயராக இருந்தது. இவ்விதம் தேயிலை நிலப்பரப்பு வீழ்ச்சியடைந்தமைக்கான காரணம் பல்வேறு காரணிகளுக்காக (வீடமைப்புக் கொலனியாக்கம், பல பயிராக்கல்) இவை கையளிக்கப்பட்டமைவாகும். எனினும் தேயிலையால் பெறப்படும் மொத்த உற்பத்தி வருமானம் தேசிய வருமானத்துக்கான பங்களிப்பு, அந்நிய செலாவணி உழைப்பு என்பன அதிகரித்துள்ளனவே தவிர குறையவில்லை. எனினும் நாடு சுதந்திரமடைந்த போது இலங்கையின் தேசிய வருமானத்திலும் மொத்த உள்நாட்டு உற்பத்தியிலும் அந்நிய செலாவணி உழைப்பு ஆகியவற்றில் தேயிலை, றப்பர், தெங்கு, கொக்கோ மற்றும் வாசனைத் திரவிங்களே முதன்மை ஸ்தானத்தில் இருந்தன. எனினும் 1948ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் மலையக இந்திய வம்சாவழி மக்கள் தேர்தல் வெற்றியாலும் அவர்கள் ஒரு ஸ்தாபனப்படுத்தப்பட்ட தொழிற்சங்க சக்தியாக உருவாகி இருந்தமையாலும் அவர்கள் எதிர்காலத்தில் இலங்கையின் பொருளாதாரத்தில் பாரிய சக்தியாக உருவாகக் கூடும் என்ற பயத்தால் தேசிய முதலாளித்துவ கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சி, கு.ஙி.கீ.ஈ. பண்டாரநாயக்க தலைமையிலான மக்கள் ஐக்கிய முன்னணி, பின்னர் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி என்பன இலங்கையின் தேயிலைப் பொருளாதாரத்தை பலவீனப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டன. இதன் காரணமாக மலையகத் தமிழரின் பிரஜா உரிமையும் வாக்குரிமையும் கூட பறிக்கப்பட்டது. இதனைப் புரிந்து கொண்டு 1948ஆம் ஆண்டு சாத்வீகப் போராட்டத்தைக் கைவிட்டு தொடர்ச்சியான வேலை நிறுத்தப் போராட்டத்திலும் வீதிமறியல் மற்றும் ஏனைய பகிஷ்கரிப்புப் போராட்டத்திலும் ஈடுபட்டிருந்தால் இலங்கையின் பொருளாதாரத்தையே ஸ்தம்பிதமடையச் செய்து பிரஜா உரிமை கோரிக்கையில் வெற்றிபெற்றிருக்கலாம். இப்படிச் செய்யாமல் விட்டமை அன்றைய இலங்கை இந்திய காங்கிரஸின் மாபெரும் அரசியல் தவறாகும். இதன் காரணமாக நாம் 50 ஆண்டுகால சமூகப் பின்னடைவை அடைந்துவிட்டோம்.

1948ஆம் ஆண்டு 136 மில். கிராமாக இருந்த இலங்கையின் தேயிலை உற்பத்தி 1996ஆம் ஆண்டு 258 மில்.கி. அதிகரித்துள்ளது.

1950ஆம் ஆண்டு தேயிலை மொத்த விளை நிலப்பரப்பு 225,000 ஹெக்டேயரில் இருந்து 1996ஆம் ஆண்டில் 188,000 ஹெக்டேயராக வீழ்ச்சியடைந்தது.

1996ஆம் ஆண்டு பெருந்தோட்ட மீள் கட்டமைப்பு அபிவிருத்திக்கென 100 மில். யு.எஸ். டொலர் நிதியுதவி தனியார் மயமாக்கப்பட்ட தோட்டக் கம்பனிகளின் நிருவாகத்துக்கு வழங்கப்பட்டன. இதன் பலன் தொழிலாளரை சென்றடையவில்லை.

தேயிலையின் உற்பத்தித்திறன் 1950ஆம் ஆண்டு ஹெக்டேயருக்கு 650 கி.கி. மாத்திரமே இருந்தது. இது 1996ஆம் ஆண்டு 1500 கி.கி. ஆக அதிகரித்திருந்தது.

1948ஆம் ஆண்டின் மொத்த தேயிலை உற்பத்தியான 136 மில். கி. கிராமில் 134 மில்.கி.கி. ஏற்றுமதி செய்யப்பட்டது. இது மொத்த உற்பத்தியின் 99%மாகும். 1996ஆம் ஆண்டு மொத்த உற்பத்தியான 258 மில்.கி.கிராம்களில் 244 மில்.கி.கி. ஏற்றுமதி செய்யப்பட்டது. இது மொத்த உற்பத்தியின் 96% ஆகும். (எனவே வேறு உற்பத்திப் பொருட்களின் ஏற்றுமதி முக்கியத்துவம் அதிகரித்திருந்தனவே தவிர தேயிலை உற்பத்தியின் முக்கியத்துவம் அதன் முதன்மை ஸ்தானத்தில் இருந்து குறையவில்லை. மாறாக அதன் உற்பத்தி அளவும் ஏற்றுமதி அளவும் படிப்படியாக அதிகரித்து வந்துள்ளது)

தேயிலைத் தொழிலின் ஏற்றுமதி முக்கியத்துவம் கருதி அதன் மீதான வரிவிதிப்பு பெரிதும் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. எனினும் 1970களில் இருந்து அது வரிவிதிப்புக்குட்பட்டது. 1978ஆம் ஆண்டு இத் தொழிலின் மீதான மறைமுக வரிவிதிப்புக்களில் இருந்து ரூபா 3,462 மில். அரசிறையாக (மொத்த வரி வருமானத்தின் 29%) பெறப்பட்டது. அதன் பின் இது மட்டுப்படுத்தப்பட்டதுடன் அறவிடப்பட்ட வரி அத்துறையின் அபிவிருத்திக்கே செலவிடப்பட்டது. 1996ஆம் ஆண்டு இவ்விதம் வரிவிதிப்பின் மூலம் சேகரிக்கப்பட்ட தொகை ரூபா 492 மில். ஆகும். ஆனால் தொழிலாளரை இந்நலன் சென்றடைந்ததா? என்பது கேள்விக்குறி.

தேயிலையின் விலை 1948 1950 காலத்தில் 1.13 யு.எல். டொலராக இருந்தது. 1992 1996 காலத்தில் இது 2.04ஆக இருந்தது. இது வருடாந்தம் சராசரி 1.6% தால் அதிகரித்து வந்துள்ளது.

தொழிலாளரின் சம்பளம் (கூலி) 1948ஆம் ஆண்டு ரூபா 1.44 ஆகவும் 1970ஆம் ஆண்டு ரூபா 3.10 ஆகவும் 1996ஆம் ஆண்டு ரூபா 83 ஆகவும் 2003ஆம் ஆண்டு ரூபா 121 ஆகவும் மட்டுமே அதிகரித்துள்ளது.

சுதந்திரத்துக்குப் பின் அரசுகளின் மலையக
தமிழ் மக்கள் விரோத பொருளாதாரக்கொள்கைகள்

1948ஆம் ஆண்டுக்குப் பின்னரான சுதந்திர இலங்கையின் அரசுகள் மலையகத் தமிழ் மக்களுக்கெதிரான பொருளாதாரக் கொள்கைகளையே கடைப்பிடித்து வந்துள்ளன. பிரஜா உரிமை பறிப்புச் சட்டத்தையும் வாக்குரிமை பறிப்புச் சட்டத்தையும் கொண்டு வந்து அரசியல் சக்தியாக இவர்கள் உருவாவதை வெற்றிகரமாகத் தடுத்துவிட்ட இவ்வரசுகள் இவர்கள் தொடர்ந்தும் தொழிற்சங்க ரீதியில் இணைந்து தொழிற் சங்க போராட்டங்கள் வாயிலாக நாட்டின் பொருளாதாரத்துக்கு அச்சுறுத்தலாக உருவாவதாகக் கருதினர்.

மறுபுறத்தில் ஏனைய பிரஜைகள் அனுபவித்த உரிமைகள் இவர்களுக்கு மறுக்கப்பட்டு இந்நாட்டுக்குரிய மக்கள் அல்லாத விதத்திலேயே நடத்தப்பட்டனர். குறிப்பாக நிலங்கள், வீடமைப்புக்கள் நாட்டு மக்களுக்கு வழங்கப்பட்ட போது இம்மக்களுக்கு அவை மறுக்கப்பட்டன. கொலனிகள் உருவாக்கப்பட்டபோது அவற்றில் இம்மக்களுக்கு இடம் வழங்கப்படவில்லை. இம்மக்கள் 200 ஆண்டுகளுக்குப் பின்னரும் தோட்டங்களில் தற்காலிக குடியிருப்பாளர்களாகவும் நிலமற்றவர்களாகவும் வீடற்றவர்களாகவும் உள்ளனர்.

இன்று தேயிலை ஏற்றுமதி 4ஆவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. இதன் இடத்தை ஆடை உற்பத்தித் தொழில், ஏனைய கைத்தொழில் உற்பத்திப் பொருட்கள், வெளிநாடுகளில் தொழில் புரிவோர் அனுப்பும் பணம் என்பன பிடித்துக் கொண்டுள்ளன.

எனினும் ஏற்றுமதி வருமானத்தைப் பொறுத்தவரையில் தேயிலை 4ஆவது இடத்தில் உள்ளது என்பதனை பொருளாதார ரீதியில் ஏற்றுக்கொள்ள முடியாது. இவர்கள் வெறுமனே மேலோட்டமான புள்ளிவிபரங்களைக் காட்டி சகலரையும் ஏமாற்றப் பார்க்கிறார்கள். இதனை பின்வரும் புள்ளிவிபரங்களை உண்ணிப்பாக அவதானித்தால் தெரிய வரும்.

இப்புள்ளிவிபரங்களின் பின்னிணைப்பு இக்கட்டுரையில் இணைக்கப்பட்டுள்ளது. 1995ஆம் ஆண்டின் இப்புள்ளி விபரங்களை இலங்கை வர்த்தக சங்கம் வெளியிட்டுள்ளது.

1995ஆம் ஆண்டின் மொத்த ஏற்றுமதி 195,258 ரூ. மில்

ஆடை உற்பத்தி ஏற்றுமதி 84,806 ரூ. மில்

வெளிநாட்டில் பணிபுரிவோர் அனுப்பும் நிதி 40,806 ரூ. மில்

ஏனைய கைத்தொழில் உற்பத்திகள்

(றப்பர், இயந்திராதிகள், பெற்றோலியம், தோற்பொருள், மற்பாண்டங்கள், ஆபரணம், மரப்பொருட்கள், பிளாஸ்டிக் முதலான கைத்தொழில் பொருட்கள்) 36,181 ரூ. மில்.

தேயிலை 24,638 ரூ. மில்.

இப்புள்ளிவிபரங்களின் படி
தேயிலை நான்காவது ஏற்றுமதிப் பொருளாகவே உள்ளது. இவ்வுற்பத்திப் பொருட்களை உற்பத்தி செய்வதற்காக இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் பெருமானங்களைப் பார்ப்போம்.

பருத்தி, வெற்றுத்துணி, அச்சிடப்பட்ட துணி, இயந்திரங்கள், மின்சாரம் சம்பந்தப்பட்டது 63,777

இயந்திராதிகள் 32,186

பெற்றோலியம் 19,830

பிளாஸ்டிக் மூலப்பொருள் 7,886

இரசாயணங்கள் 7,329

உரம் 4,436

இதனை ஏற்றுமதிகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தோமாயின் ஆடை உற்பத்தித் தொழிலுக்கு அதன் 70% உள்ளீடுகள் இறக்குமதி செய்யப்படுகிறது என்று கூறப்படுகிறது. எனவே அதன் ஏற்றுமதிப் பெறுமானத்தில் 30% மட்டுமே உண்மையான ஏற்றுமதி வருமானமாகும். அதேபோல் ஏனைய கைத்தொழில் ஏற்றுமதிகளிலும் (உதாரணம் பெற்றோலிய உற்பத்தி, தோற்பொருள், பிளாஸ்டிக்) அதிக அளவில் வெளிநாட்டு இறக்குமதி செய்யப்பட்ட மூலப் பொருட்களே பயன்படுத்தப்படுகின்றன. எனவே ஆடை உற்பத்தித் தொழில் உற்பத்தி ஏற்றுமதி வருமானமும், கைத்தொழில் உற்பத்திப் பொருள் வருமானமும் தேயிலை ஏற்றுமதி வருமானத்துக்கு பின்னரே வைத்துப் பார்க்கப்பட வேண்டும். ஆதலால் வெளிநாட்டில் பணிபுரிவோர் அனுப்பும் பணத்துக்கு அடுத்ததாக இப்போதும் அதிக அந்நிய செலாவணி பெற்றுத் தரும் துறையாக தேயிலையே உள்ளது. இந்த நிலைமை அண்மைய எதிர்காலங்களில் மாற்றப்படுவதற்கான சூழ்நிலை இல்லை. இதனை வைத்துப் பார்க்கும் போது இப்போதும் மலையகத் தமிழர்கள் இலங்கையின் பொருளாதாரத்தில் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக உள்ளனர் என்பது புலனாகும்.

எனினும் இந்த உபாயத்துவ முக்கியத்துவம் வாய்ந்த பொருளாதார நிலைமையினை மலையக அரசியல் தலைவர்களும், தொழிற் சங்கத் தலைவர்களும் பயன்படுத்தத் தவறுவதால் அரசாங்கத்துடனும், தொழில் கொள்வோருடனும் சம்பளம் மற்றும் அரசியல் பிரச்சினைகளின் போது பேரம் பேசுவதில் தோல்வியடைகின்றனர். இந்த மக்கள் ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்தால் அதனால் எத்தனை கிலோ தேயிலை இழக்கப்படுகின்றது. எத்தனை மில்லியன் டொலர் அந்நிய செலாவணி இழக்கப்படுகின்றது? என்பதனை சுட்டிக்காட்டும் திராணி ஏன் நம் மக்கள் தலைவர்களுக்கில்லை? இதனை ஒரு கேள்வியாகவே முன்வைக்கிறேன்.

ஏனெனில் தேயிலைத் தோட்டங்கள் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் தமக்கு தொழிலாளர் பிரச்சினைகளுக்கும் எதுவித சம்பந்தமும் இல்லை எனவும் அவற்றை தனியார் நிறுவனங்களும் தொழிலாளர்களுமே தீர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் பெருந்தோட்ட அமைச்சர்கள் கூறி வருகின்றனர். ஆனால் தேசிய வருமானத்திலும் அந்நிய செலாவணி உழைப்பிலும் இத்தகைய பங்கு வகிக்கும் ஒருதுறை மீது அரசுக்கு எந்தவித பொறுப்பும் இல்லை என்று கூறுவது மிகவும் போலித்தனமானதும் இம்மக்களை ஏமாற்றுவதும் ஆகும். தகுந்த புள்ளி விபரங்களுடன் இப்பாரிய பொறுப்பினை அரசுக்கு சுட்டிக்காட்டி இம் மக்களின் பிரச்சினைகளின் போது அரசாங்கத்தின் பொறுப்பை உணர்த்த வேண்டிய பணியையும் மலையக மக்களின் தலைவர்கள் செய்கிறார்கள் இல்லை.
மலையக மக்களுக்கான வாழிடக் கொள்கையும்
பொருளாதார முக்கியத்துவமும்


நிரந்தர வாழிடம் இல்லாமை

மலையக மக்களின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகப் பெரிய பாதகமாக இருப்பது இவர்கள் தொடர்ந்து நிலமற்றவர்களாக இருப்பதும் தற்காலிக வதிவிடக் கூலிகளாக இருப்பதும், நிரந்தரமான வாழிடங்களைக் கொண்டிராமல் இருப்பதுமாகும். இவர்களுக்கான ஒரு சுயபொருளாதாரம் வளர்த்தெடுக்கப்பட வேண்டுமாயின் அதற்கான முதல் நிபந்தனையாக இம்மக்கள் இந்நாட்டின் நிரந்தரக் குடிமக்களாகவும் அவர்களுக்கென நிரந்தரக் குடியிருப்புக்களும் நிரந்தரமான வாழிடமும் இருக்க வேண்டியதவசியம். அப்போதுதான் இம்மக்கள் இந்நாட்டின் ஏனைய குடிமக்களுக்கு சமமானவர்களாக இருப்பார்கள். சொந்த நிலத்திலும் சொந்த வீட்டிலும் சொந்த வாழிடத்திலும் குடியிருக்கும் போதுதான் "இந்த மண் நமக்குச் சொந்தமானது' என்ற சுயசிந்தனையும் நாம் சுதந்திரமானவர்கள் என்ற சிந்தனையும் தோன்றும். அப்போதுதான் நமக்கு சொந்த மண்ணில் அவர்கள் சுய பொருளாதார முயற்சிகளில் ஈடுபடுவார்கள். இன்று இவர்கள் இவ்வித தற்காலிக கூலிகள் என்று நிராகரிக்கப்பட்டு தோட்டங்களில் வேலை இழக்கும் போதும் தோட்டங்கள் மூடப்படும்போதும் வீதிக்கு வர வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்படுகின்றனர். இன்றைய பத்திரிகை செய்திகளின்படி 35 ஆயிரம் தொழிலாளர் இத்தகைய நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

1995ஆம் ஆண்டின் ஆய்வொன்றின்படி தேயிலைப் பெருந்தோட்டங்களில் மாத்திரம் 750,000 தொழிலாளர்கள் தற்காலிக வதிவிடங்களான "லைன்' காம்புறாக்களில் குடியிருந்து வந்தனர். இவர்கள் அனைவரும் தோட்டத்தின் பிடியில் அகப்பட்டு கொத்தடிமைகளாக இருக்கின்றனரே தவிர தமது நாளாந்த வாழ்க்கைத் தேவைப்பாடுகளை தாமே சுதந்திரமாக தீர்மானிக்க அனுமதிக்கப்படவில்லை. இதற்கு முக்கிய காரணம் இவர்கள் அரசின் நேரடி நிர்வாகத்தின் கீழ் வராமையாகும். இந்த நிலைமையில் இருந்து இவர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்.

மலையக தோட்டத் தொழிலாளர்களுக்கான பெருந்தோட்ட குடியிருப்புக்கள்

மலையகப் பெருந்தோட்டங்களின் கைத்தொழில் தன்மை கருதியும், அதன் உற்பத்திகளை ஏற்றுமதிக்கென கொழும்புத் துறைமுகத்துக்கு இலகுவாக கொண்டு செல்ல வேண்டிய தேவை கருதியும் இப்பிரதேசம் எங்கும் பெருந்தெருக்களும் புகையிரதப் போக்குவரத்தும் அமைக்கப்பட்டன. அநேகமான தேயிலைத் தோட்டங்களும், தொழிலாளர் குடியிருப்புகளும் பெருந்தெருக்களுக்கு அருகாமையிலோ அல்லது பிரதான பாதைகளுக்கு அண்மியதாகவோ உள்ளன. மற்றும் பல தோட்டங்களின் எல்லைகளாக இத்தகைய தெருக்களே உள்ளன. எனவே இத்தகைய பெருந்தெருக்களை இணைத்து சுதந்திரமான பெருந்தோட்ட குடியிருப்புக்கள் (கடூச்ணtச்tடிணிண கூணிதீண குடடிணீண்) அமைத்துக் கொடுக்கப்பட வேண்டும்.

இத்தகைய குடியிருப்புக்களுக்கும் தோட்ட நிர்வாகத்துக்கும் எதுவித தொடர்புகளோ தலையீடுகளோ இருக்கக் கூடாது. இவை தொடர்பான அபிவிருத்தி நடவடிக்கைகளும் பொது வசதிகளும், கிராமசபையூடாகவோ, பிரதேச சபையூடாகவோ நடைபெற வேண்டும். இவை தமக்கென போக்குவரத்து, குடிநீர், மின்சாரம், தொலைத்தொடர்பு முதலான உள்ளகக் கட்டமைப்புக்கள் மற்றும் பொது வசதிகளான பாடசாலை, வணக்கத் தளங்கள், தபாற்கந்தோர், கடைத்தெருக்கள், பஸ் நிலையம், மருத்துவமனை, கூட்டுறவு விற்பனை நிலையம், பொதுச் சந்தை, நூல்நிலையம், கலாசார நிலையம், விளையாட்டு மைதானம், பொது ஒன்று கூட்டலுக்கான பிரதேசம் முதலானவையும் அமைந்திருத்தல் வேண்டும். சிலவேளை இத்தகைய ஒரு திட்டத்தை மலையகமெங்கும் ஒன்றுசேர ஏற்படுத்துவது கடினமானதாக இருக்கலாம். எனினும் எங்காவது ஒரு பொருத்தமான இடம் இனம் காணப்பட்டு மிகச் சிறிய அளவிலாவது ஆரம்பிக்கப்பட வேண்டும். உதாரணமாக மலையகத்தமிழ் மக்கள் பெரும்பான்மைச் சமூகமாக இருக்கும். நுவரெலியா மாவட்டத்தில் இது ஆரம்பிக்கப்படலாம்.

மலையக மக்களுக்கான சுய பொருளாதாரம்

தேயிலைப் பொருளாதாரமும் மலையக மக்களும்

கடந்த 2 நூற்றாண்டு காலமாக மலையகத் தமிழ்மக்கள் இந்த நாட்டு பெருந்தோட்ட பொருளாதாரத்துடன் மிகக் கலந்து போய்விட்டார்கள். இந்த நாட்டில் பொருளாதாரத்தின் முகுகெலும்பாக இருந்து நாட்டு மக்கள் அனைவருக்கும் சுகவாழ்வு அளித்தது அவர்ளக் தான். மிக அண்மைக் காலம் வரை அவர்கள் உழைத்த அந்நியச் செலாவணியில் இருந்துதான் நாட்டின் இறக்குமதித் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டன என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். ஏற்றுமதியில்லாமல் வெளிநாடுகளில் இருந்து எந்த பொருளையும் இறக்குமதி செய்ய முடியாது. அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த அந்நிய செலாவணியை உழைத்துத் தந்த இவர்களுக்கு அதன் மூலம் நாட்டுக்கு கிடைத்த நலனில் சிறிதளவுகூட போய்ச் சேரவில்லை.

(அ) ஆதலால் இந்த நாடு அவர்களுக்கு பாரிய கடன்பட்டிருக்கின்றது. அதன் ஒரு அங்கமாக தற்போது இலாபமீட்டாமல் செயற்படும் அரசுக்கு சொந்தமான பெருந்தோட்டங்கள் தொழிலாளர் மத்தியில் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். அதனை அவர்கள் தனித்தனியாகவோ கூட்டுறவு முறையிலோ பயிர் செய்யலாம். இத்தகைய கோரிக்கை ஒன்று ஏற்கனவே விடுவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மேலும் அழுத்தங்கள் கொண்டு வரப்பட வேண்டும். (ஆ) அண்மைக் காலத்தில் செயற்கை உணவுப் பொருட்கள் மீதும் பானங்கள் மீதும் மக்களின் அக்கறை குறைந்து வருகின்றது என்றும் மூலிகை பானங்கள் மீதான (ஏஞுணூஞச்டூ ஈணூடிணடுண்) அக்கறை அதிகரித்து வருவதாகவும் ஒரு ஆய்வு கூறுகிறது. எனவே எதிர்காலத்தில் தேயிலை பானத்தின் முக்கியத்துவம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆதலால் வெறுமனே "பெருந்தோட்ட கூலிகள்' என்ற நிலைமை மாற்றப்பட்டு சிறுசிறு தோட்ட உரிமையாளர்களாக இவர்கள் மாற்றப்பட ÷வ்டும். மொத்த தேயிலை நில உடமையின் கணிசமான பங்கு இப்போதும் சிற்றுடைமையாளர்களிடமே உள்ளது. 1975ஆம் ஆண்டின் நிலச் சீர்திருத்த சட்ட அமுலாக்கலை அடுத்து 366,184 ஏக்கர் நிலம் (61.6 வீதம்) அரசுடமையாகவும் 228,277 ஏக்கர் நிலம் (38.4 வீதம்) தனியாருக்கும் சொந்தமாக இருந்தது. இந்த நிலங்கள் இன்று நூற்றுக்கணக்கான தனியார் உடமைகளாக உள்ளன. இத்தகைய தேயிலைத் தோட்டங்கள் விலைக்கு விற்கப்படும் போது அவற்றை கொள்வனவு செய்து லி, லீ, 1 ஏக்கர் என இம் மக்களிடையே பகிரப்படுவது வாயிலாக அவர்களை நில உடமையாளர்களாக்கலாம். இதற்கென மலையக மக்கள் அபிவிருத்தி நிதி ஒன்று உருவாக்கப்பட்டு உலகளாவிய பங்களிப்பினை பெற வேண்டும்.

ஏனைய சுயபொருளாதார முயற்சிகள்

மலையக இந்திய வம்சாவழித் தமிழர்கள் பூர்வீகத்தில் விவசாயிகளே. எனவே இவர்கள் தோட்டத் தொழிலாளி என்ற கொத்தடிமைச் சிறையில் இருந்து படிப்படியாக வெளியேறி தாம் வாழ்கின்ற பிரதேசத்திலேயே காணித்துண்டொன்றை பெற்று அதில் சுதந்திரமாக வாழவும் தம்மால் இயன்ற அளவு சிங்கள நாட்டுக் கிராமத்தவர்கள் போல வாழப் பழகிக் கொள்ளவும் வேண்டும். அதற்கு இவர்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும்.

1975ஆம் ஆண்டுகளை அடுத்து வந்த காலப்பகுதியில் தேயிலை உடமை தேசிய மயமாக்களின் பொது ஜனவசம, உசவசம, அ.பெ.தோ.யா. ஆகிய நிறுவனங்களுக்கு மேலதிகமாக நாட்சா (பல் பயிராக்கல் அமைப்பு) என்ற அமைப்பு ஒன்றும் தோற்றுவிக்கப்பட்டது. இவ்வமைப்பு இலாபம் பெறாத பெருந்தோட்டங்களை கையேற்று அவற்றை பல பயிராக்கல் திட்டத்தின் கீழ் சிறு ஏற்றுமதிப் பயிர்களை ஊக்குவிப்பதற்காகவும் கிராமத்தவரிடையே குடியிருக்கவும் பகிர்ந்தளித்தது. இத்திட்டத்தின் கீழும் மலையகத் தமிழர்கள் ஒதுக்கப்பட்டனர். இத்திட்டத்தின் கீழ் காணிகள் பகிர்ந்தளிக்கும் போது மலையகத் தமிழர்களுக்கு அவை பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும்.

இவற்றைத்தவிர நுவரெலியா, வெளிமடை முதலான இடங்களில் மரக்கறி, கிழங்கு மற்றும் சிறுவியாபார பண்னைச் செய்கை, பாற்பண்ணை, கோழிப்பண்ணை போன்ற வியாபார முயற்சிகளும் இம் மக்களிடை ஊக்குவிக்கப்பட வேண்டும்.

முடிவுரை

மலையக தமிழ் தேசிய இனத்தினை ஒரு தனியான தேசிய இனம் என்று வலுவுடன் வரையறை செய்து கொள்வதற்கு தடையாக முதலாளித்துவ பொருளாதார சிந்தனைவாதிகள் சுட்டிக்காட்டும் முதன்மைக் காரணிகள் இம் மக்களுக்கு ஒரு உறுதியான பொருளாதாரம் இல்லாதிருப்பதும் அவர்கள் புவியியல் ரீதியில் ஒரு தொடர்ச்சியான நிலப்பரப்பில் நிரந்தரமாக வதியாதிருப்பதும் ஆகும் என்று கூறுகின்றனர். ஒரு தேசிய இனம் என்று இவர்களை அழைக்க இத்தகைய காரணிகளை அவர்கள் கொண்டிருக்க வேண்டிய அவசியமற்றது என்று மார்க்ஸிய சிந்தனைவாதிகள் வலியுறுத்துகின்றனர். இதனைத் தீர்மானிப்பதற்கு இவர்கள் சுயமான மனப் பிரக்ஞைகளுடன் தம்மை ஒரு தேசிய இனமாக அங்கீகரிக்குமாறு கோருவதனை அடிப்படையாகக் கொண்டு மாத்திரம் இவர்கள் ஒரு தேசிய இனமாக அங்கீகரிக்குமாறு கோருவதனை அடிப்படையாகக் கொண்டு மாத்திரம் இவர்கள் ஒரு தேசிய இனமா? இல்லையா? என்பது தீர்மானிக்கப்பட வேண்டும். அப்படியாயின் இப்போது அவ்வித ஒரு கோரிக்கை இம் மக்களிடம் இருந்து வலுவாக எழுந்துள்ளது என்று கூறலாம். இக்கோரிக்கைகளுக்கு மேலும் அழுத்தம் கொடுக்கப்பட வேண்டியதன் தேவை இப்போது அவசியமாக எழுந்துள்ளது.

எனினும் இம்மக்கள் தம்மை மேலும் வலுவுடையவர்களாக ஆக்கிக் கொள்ள வேண்டுமாயின் சுயமான பொருளாதாரத்தையும், மலையகத்தில் தொடர்ச்சியான பூமிப்பிரதேசத்தில் நிரந்தரமான வதிவிடங்களையும், வாழிடங்களையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இவர்கள் மத்தியில் இருந்து ஒரு சக்திவாய்ந்த படித்த மத்திய தர வர்க்கம் ஒன்று உருவாக வேண்டும். அப்போதுதான் மலையக தமிழ் மக்களின் எதிர்கால அரசியல் செல்நெறிகள் சரியான திசைநோக்கி நகருதல் சாத்தியமாகும்.

UPCOUNTRY PEOPLE DEVELOPMENT RESEARCH FOUNDATION

UPCOUNTRY PEOPLE DEVELOPMENT RESEARCH FOUNDATION

Tuesday, February 16, 2010

the labor movement in the planttation sector

The cooly's lot is not an enviable one.Being poor, ignorant and helpless, he is unable to protect himself against the cupidity and tyranny of unscrupulous recruiters and bad employers.
                                                              
                                                                                      ponnambalam arunachalam, 1916

No apology is required for having started a labour Federation in the planting districts... After a century of suffering the labourer has come to realize that self-help alone can save him... He has found from sad experience that none can help him in the way in which he wishes to be helped.


                        K.Natesa Aiyar, 1931


  Capitalist forms of production had first made inroads into Ceylon in the plantations, but the relationship between worker and employer on plantations retained nonetheless certain feudal features. This was the basic reason for the lack of political or trade-union organizations among plantation workers until 1931.The process of unionization on the plantations developed in isolation from the very active urban movement.The leaders of urban labor were aware of the grievances of the vast mass of unorganized workers on the tea and rubber plantations, but they made no attempt to introduce trade unionism on the plantation or to link the urban and plantation workers in joint action.Although the estate labor force had become more rooted in Ceylon by the late 1920"s, urban politicians and labor leaders regarded the Indian workers as transient aliens with no permanent interest in Ceylon. moreover,when strikes and serious labor trouble  occurred in Colombo, the planters, who were alert to the possibility of labor agitation spreading to the plantations, took great care to isolate their workers from the urban labor movement for example, during the 1923 general strike in Colombo, the planters prevented their workers coming to the city for fear that they might become "infected with the strikers" attitude of mind."
SOURCE : THE RISE OF THE LABOR MOVEMENT IN CEYLON
DR.V.KUMARI JAYAWARDENA

Thursday, February 11, 2010

தோட்டக் கவிதைகள் -

1. ஆ கண்டி கருப்பாயி
என் கம்பளத்து மீனாட்சி
கண்ணே ஒத்தக்கட ராமாயி
உங்க ஒறவு விருந்தால் போதுமடி

2. கண்டி கண்டி என்காதீங்க
கண்டி பேச்சு பேசாதீங்க
சாதி கெட்ட கண்டியில
சக்கிலியன் கங்காணி

3. அட்டை ரத்தம் குடிக்கிறதும்
அரிய பெருநடையும்
கட்டை எரடுறதும்
அங்கே காணலாம் கண்டியிலே

4. வாடை அடிக்குதடி
வாடை காத்து வீசுதடி
சென்னல் அடிக்குதடி
நம்ம சேந்து வந்த கப்பலிலே

5. நாளோட நாளா கோடாலி சத்தம்
குமுறுதங்கே காட்டுக்குள்ளே
உறுமுமது கேட்டா உறுமும் புலி சத்தம்
நரி ஊலை எல்லாம் காட்டோட அழிஞ்சதடி

6. கூனி அடிச்ச மலை
கோப்பி கண்ணு போட்ட மலை
அண்ணனைத் தோத்தமலை
அந்தா தெரியுதடி

7. இடுப்புலயும் சாயச்சீலை
இரு புறமும் கோப்பி மரம்
அவசரமா புடுங்கும் கையே
அவ சாக்கை நெறப்ப வல்லோ

8. கோப்பி குடிச்சிட்டாராம்
குதிரை மேல ஏறிட்டாராம்
பச்சைக்காடு சுத்திவர
பத்தே நிமிஷம் செல்லும்

9. ஆரடி தான் பங்களாவாம்
அறுபதடி பூந்தோட்டம்
பூஞ்செடிக்குத் தண்ணி போடும்
புண்ணியராய் என் பொறுப்பு

10. கலுச்சட்டை மேற்ச்சட்டை
உள் கமுசு வாசு கோட்டு
அந்த தங்க உலோகம்
என் அங்கம் பறிக்குதடி

11. கொய்யா பழம் பழுக்கும்
கொடை மல்லிகை பூப்பூக்கும்
சீத்தாப் பழம் பழுக்கும்
நம்ம சின்ன தொரை வாசலிலே

12. ஒன்னை விட்டுப் போரமுன்னு
தொயரங்களை வைக்காதேடி
காலம் திரும்பயிலே நான்
கட்டாயம் வந்திடுவேன்

13. எண்ணிக் குழி வெட்டி
இடுப் பொடிஞ்சி நிக்கயிலே
வெட்டு வெட்டு என்கிறாரே
வெளக்கென்ன கங்காணி

14. அந்த மலை வேலை செய்ய
ஆசையாத்தான் நானிருந்தேன்
ஒரு மூட்டை தூக்கச் சொல்லி
உதைக்கிறாரே கண்டாக்கையா

இளம் பெண்களுக்குஅழைப்பு

1. நம்ம தொரைந ல்ல தொரை
நடராஜ கோட்டு தொரை
கோட்டு தொரை பொல்லாதவன்
ரோட்டை விட்டு கீழிறங்கு

2. செடியே செடிக் கொழுந்தே!
சின்னத் தொரை டீ கொழுந்தே!
வர்ண செடிக் கொழுந்தே!
வந்திட்டாரே நம்ம தொரை

3. கட்ட தொரை பட்டியிலே
கருத்த குட்டி ரெண்டு பேரு
கிட்ட கிட்ட நெரை புடுச்சி
சிட்டுப் போல் பறக்குறாளே?