கரீபியன் தீவுக்கரையினிலே......
அண்மையில் மேற்கிந்தியத்தீவுகளுக்குப் (கரீபியன் தீவுகள் என்றழைக்கப்படும் மேற்கிந்தியத்தீவுகள்) போன அனுபவத்தை எழுத இயலாமல் போய்விட்டது. அதை ஒரு நூலாக எழுதிக் கொண்டிருப்பதால் அதிகம் முகநூலில் எழுதாமல் வைத்திருக்கிறேன்.
ஆனால் அங்கே வாழும் ஆயிரக்கணக்கானத் தமிழர்களைப் பற்றிய எண்ணம், நீலம் பூசிய அந்தக் கடலைப் போலவே உள்ளுக்குள் நுரை சிந்தியபடி இருக்கிறது. இந்தியாவில் இருந்து ஏறத்தாழ (18000 கிலோ மீட்டர்கள் இருக்கலாம்) பல்லாயிரம் மைகளுக்கு அப்பால் எப்படி அவர்கள் அங்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள் என்பதே பெரிய ஆச்சர்யம் தான். 6 மாதம் கப்பல் பயணம் என்று கேள்வி.
ஏறத்தாழ 250 ஆண்டுகள் ஆகிவிட்டன, நம் தமிழர்கள் அங்கே கால் பதித்து. பாண்டிச்சேரி.கடலூர்,காரைக்கால்,மதராசப்பட்டினத்தைச் சேர்ந்த தமிழர்கள் தான் அதிகம். தங்களின் கரும்பு வயல்களில் கூலிகளாக வேலை செய்ய ஆயிரக்கணக்கானத் தமிழர்களை பிரெஞ்சுக்காரர்கள் அழைத்துப் போனார்கள். அவர்களுக்கு முன்பே அங்கே இருந்தது ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த அடிமைகள். நாமும் கருப்பு, அவர்களும் கருப்பு. வேறென்ன? காலப்போக்கில் ஒன்றாய்ச் சங்கமித்தவர்கள் அதிகம்.
இப்போது அங்கே, சுருண்ட ஆப்பிரிக்கக் கூந்தலும், நம் தமிழ் நிறத்திலும் நிறைய தமிழ்ச்சொந்தங்கள் வாழ்கிறார்கள். அசல் தமிழர்களும் ஆயிரக்கணக்கில் இருக்கிறார்கள். தமிழர்கள் இருக்கிறார்கள்; ஆனால் தமிழ் இல்லை. இத்தனை ஆயிரம் மைல்களுக்கு அப்பால் தமிழை வாழ வைப்பது மிகவும் கடினம் என்பது பார்த்த நொடியிலேயே நமக்கு விளங்கி விடுகிறது.
தமிழ் மொழி தான் இல்லையே தவிர, ஆப்பிரிக்கர்களுடன் கலந்து விட்ட தமிழர்கள் உட்பட அனைத்துத் தமிழர்களும் தமிழ்ப்பண்பாட்டை ஒரு அங்குலம் கூட விட்டுக் கொடுக்காமல் வாழ்வது, நம்மை மிகவும் ஆச்சர்யப்படுத்துகிறது. அங்கே இன்றும் கரும்பு வயல்களுக்கு நடுவில் கம்பீரமாக நிமிர்ந்து நிற்கிறாள் காளி.. பெரும்பாலும் மதுரைவீரன், பொம்மி, வெள்ளையம்மாள் இல்லாத கோயில்களே இல்லை. கடாவெட்டு, கத்தி, வெட்டவெளி சூலம் எல்லாம் தமிழகத்திலேயே தொலைந்து விட்டது. ஆனால் நீளமும் பச்சை நிறங்களில் பளிங்காய்த் தண்ணீர் அலையும் அந்தக் கடல்புரத்தில் அச்சு அசலாக வாழ்கிறது.
மாரியம்மன் தாலாட்டைப் பாடும் பூசாரிகள் எல்லாக் கோயில்களிலும் உண்டு. தமிழ்ப்பாட்டு தான் ஆனால் ஆங்கில ரோமன் வடிவத்தில் எழுதி வைத்துக் கொண்டு, தலைமுறை தலைமுறையாகப் பாடி வருகிறார்கள்.
. முக்கியமாகத் தெருக்கூத்துக்கலையை விடாமல் நடத்தி வருகிறார்கள். தமிழே தெரியாது. ஆனால் தமிழ்க்கூத்து நடக்கிறது. 10 வயது 15 வயது சிறுவர்கள் சிறுமிகள் எல்லாம் தமிழ்ப்பாட்டுக்களை வழிவழியாகப் பாடி அப்படி நடிக்கிறார்கள். நாங்கள் போனபோது எங்களுக்கு நல்லத்தங்காள் கதையைக் கூத்தாக நடித்தனர். எனக்குப் பன்னாட்டு மாநாட்டில் தாள் வாசிக்கப் போனதெல்லாம் ரொம்ப சாதாரணமாகி விட்டது. நம்மூர் நல்லத்தங்காளை 18,000 கிலோமீட்டருக்கு அப்பால் உட்கார்ந்து கேட்டால் மெய்சிலிர்க்காதோ?

அப்புறம் இன்னொரு நாள் ஒரு வீட்டில் முன்னோர் வழிபாடு என்று அழைத்தார்கள். முதல்நாள் அவர்கள் வீட்டுக்குப் போயிருந்தபோதே எங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு விட்டது. எனக்குப் புத்தி எல்லாம் அங்கே இருந்த கரும்பு வயல்கள், அதிலே மேய்ந்து கொண்டிருந்த வளமான ஆடுகள், விழித்து நோக்கி நம்மைப் பார்ப்பது போலிருந்த மாரியம்மன் சிலை இதிலெல்லாம் மனம் லயித்துப் போயிருந்தேன்.
மறுநாள், வெட்டவெளியில் ஏழெட்டு இலைகள் போட்டு அதில் கள், சாராயம், சீமைச்சரக்கு எல்லாம் அடுக்கி அடுத்து, மாமிசங்களை அடுக்கினார்கள்... ஈரல், தொடைக்கறி, என்று வகைவகையாக இலையில் குவிந்து கொண்டே இருந்தது. சட்டென்று நினைப்பு வந்தாற்போல், திரும்பிக் கரும்பு வயலைப் பார்த்தேன். அந்த இரண்டு ஆடுகளும் காணவில்லை. வீட்டின் தலைவர் தான் பூசாரி... எல்லாவற்றையும் இலையில் அடுக்கி, சாம்பிராணியைப் போட்டு, வானத்தைப் பார்த்து அம்மா வாங்க! அப்பா வாங்க! தாத்தா-பாட்டி வாங்க என்று தமிழில் கூப்பிட்டார் பாருங்கள். இப்படி அன்றைக்கு அந்தத் தீவு முழுக்க எல்லா வீடுகளிலும் சாம்பிராணி தான். முடித்தவுடன் விருந்து.. வாழை இலை விருந்து...
கடைசியில் கட்டிப் பிடித்து, கண்ணீர் மல்க வழியனுப்பி வைத்தார்கள். அதில் பாண்டிச்சேரி என்பதால் எனக்கு எல்லா இடங்களிலும் சிறப்பான கவனிப்பு. ( நான் உள்ளுக்குள் உலகமைந்தனாக இருந்தாலும்,) பிரெஞ்சு தெரியாமலேயே , பாண்டிச்சேரி மைந்தனாக மாறி எல்லாக் கவனிப்புகளையும் வெட்கத்தோடு ஏற்றுக் கொண்டேன். பூமியின் எங்கோ ஒரு மூலையில் இருக்கும் தமிழனைப் பார்த்த ஆச்சர்யத்தில் இருந்து ஒரு மாதம் கழிந்த பின்பும் கூட இன்னும் விடுபடவில்லை. வயதான தமிழ்க் கூத்துக்கலைஞர் ஒருவர், எங்களுக்காக கரீபியன் கடல்புரத்தில் பாடிய நல்லத்தங்காள் பாட்டு மட்டும், ஒவ்வொரு இரவும் என்னைத் துயில் எழுப்பிக் கொண்டே இருக்கிறது.
அன்புடன்
குறிஞ்சிவேந்தன்