- வடபகுதி இந்திய வம்சாவழி மக்கள்
=================================
இக்கட்டுரை யாழ் பல்கலைக்கழக கலைபீட மாணவர்களால் 1980இல் வெளிக்கொணரப்பட்ட பொதிகை ஆண்டு மலரில் வர்த்தகமானி 1ம் வருட மாணவர் மா. நாகராஜா எழுதிய கட்டுரை.
அண்மைக் காலங்களில் ஏற்பட்டுவரு பல மாற்றங்கள், குறிப்பாகப் பொருளாதார, சமூக, அரசியல் மாற்றங்கள் இலங்கையிலுள்ள பல்வேறினங்களிடையேயும் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. இந்நிலையில் இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளித் தமிழின மக்களையும் ஒரு தேசிய இனமாகக் கணிக்கும் நிலேப்பாடு பலப்படுத்தப்பட்டு வருகின்றது. இவ்வாறு தேசிய இனமாகக் கணிக்கும்பொழுது அது பெரும்பாலும் இலங்கையில் மலையகத்தில் வாழும் பெருந்தோட்டத் தொழில்புரியும் இந்திய வம்சாவளித் தமிழின மக்களையே குறிப்பிடுவதாக அமைகின்றது. அதே சமயத்தில் இலங்கையின் ஏனைய பிரதேசங்களில், குறிப்பாக இலங்கையின் வடபகுதியில் வாழும், இந்திய வம்சாவளித் தமிழின மக்களைப் பற்றிச் சில குறிப்புகளை சுட்டிக்காட்டவேண்டிய சூழ்நிலையொன்று உருவாகியுள்ளது. இவ்வடபகுதியில் இம் மக்கள் எத்தகைய பொருளாதார அடிப்படையையும், எவ்வாறான சமூக இருத்தலையும், அரசியல் அமைப்புக்களையும் இலக்கியப் பரிமாணங்களையும் கொண்டுளனர் என்பதனை ஒரு மேலோட்டமா பார்வையில் இக்கட்டுரை ஆராய்கின்றதுவடபகுதியின் இந்திய வம்சாவளித் தமிழின மக்களை இரு பிரிவுகளின் அடிப்படையில் பிரித்து ஆராய்ந்து பார்க்கலாம் அப்பிரிவினை அவர்களின் குடியேற்ற காலத்தின் அடிப்படையில் பிரிக்கலாம்.1. தென்னிந்தியாவில் ஏற்பட்ட வரட்சியின் பாதிப்பினால் நேரடியாக யாழ்ப்பாணம் போன்ற பிரதேசங்களில் குடியேறிய இந்திய வம்சாவளித் தமிழின மக்கள்.
2. மலையகத்தில் ஏற்படுத்தப்பட்ட, காணிச் சுவீகரிப்புப் போன்றவற்றினுல் பாதிப்படைந்து மலையகத்திலிருந்து இடம் பெயர்ந்து வவுனியா, மன்னர், கிளிநொச்சி போன்ற பிரதேசங்களில் குடியேறிய இந்திய வம்சாவளித் தமிழின மக்கள்.இப்பகுதிகளில் வசிக்கும் இம்மக்களின் வாழ்க்கையினைப் பொருளாதார அடிப்பபடைத் தேவையிலிருந்தே இனம் காண வேண்டியதாகின்றது. உண்மையில் அதுவே அடிப்படையாக அமைகின்றது அத்துடன் இவர்களிடமும் வர்க்க முரண்பாடு காணப்படுகின்றது. இவ்வர்க்க முரண்பாடு இந்தியாவிலிருந்து வரும்போதே உடன் இந்த வர்க்க முரண்பாடாகும். ஏனெனில் இந் தியாவிலிருந்து வந்த ஒரு சாரார் கூலித் தொழிலாளர்களாகவே வந்தனர். இக் கூலித் தொழிலாளர்களில் ஒரு பகுதியினர் மலையகத்துப் பெருந்தோட்டத்திற்கு இடம் பெயர்ந்தனர். ஏனையோர் உதிரிகளாக வடக்கு, கிழக்குப் பகுதிகளில் நகர்ந்தனர். இந்திய மலையாளிகள் தனிநபர்களாகவே இங்கு வந்தனர். இதனுல் இங்குள்ள சமூகங்களுடன் இணேவது அவர்களுக்கு இலகுவானதாக அமைந்தது. ஏனையவர்கள் குடும் பங்களாகவே இங்கு வந்தனர். இவர்களைச் சுரண்டப்படும் வர்க்கத்திற்குள்ளேயே அடக்கப்படவேண்டியதாகும். பிறிதொரு சாரார் சிறு தொகையினராக இருந்தாலும், இலங்கையின் பொருளாதாரத்தைச் சுரண்டுவதற்காக இந்தியாவிலிருந்து நேரடியாகவே மூலதனத்துடன், இங்கு வந்தவர்களாகும். இவர்களைச் சுரண்டும் வர்க்கத்திற்குள் உள்ளடக்கப்படவேண்டியதாகும். எனவே இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளித் தமிழின மக்களிடையேயும் வர்க்க முரண்பாடுகள் தொடக்க காலத்திலிருந்தே இருந்து வந்துள்ளன.இங்கு வடபகுதியில் வசிக்கும் நிரந்தர இந்திய வம்சாவளித் தமிழின மக்களின் அடிப்படை வாழ்க்கை அமைப்பில் வர்க்க முரண்பாட்டுடன், சாதி அமைப்பு முறை யில் சில எச்சங்களும் காணப்படுகின்றன. இங்கு நகர சுத்திகரிப்புப் போன்ற தொழில்களைச் செய்யும் இந்திய வம்சாவளித் தமிழினமக்கள் இந்தியாவிலிருந்துவந்த ஹரிஜன மக்களாவர். இங்கும் அவர்கள் தமது பாரம்பரியத் தொழிலையே செய்கின்றனர். நாடு மாத்திரம், பெயர்ந்துள்ளனர். அத் துடன் இந்தியாவில் எப்படியயன சமூக மட்டத்தில் அடக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு, நசுக்கப்பட்டு, ஏமாற்றப்பட்டு, வஞ்சிக்கப்பட்டு, சுரண்டப்ட்டார்களோ அதிலிருந்து எள்ளளவும் அவர்கள் நிலை வடபகுதியிலும் மாறவில்லை. அதேவிதமான அடக்குமுறை தான் இங்கும் பயன்படுகிறது. அத்துடன் பிராஜா உரிமையற்ற மக்களாக இருப்பதனால் பொருளாதார ரீதியில் அதிகளவில் தாக்கப்படுகின்றனர்.இந்த ஹரிஜன மக்களைவிட, மற்ற இனக் கீழ்மட்ட வகுப்பினர், இங்கு பல் வேறு தொழில்களைச் செய்கின்றனர். அவர்களும் இங்கு கூலித் தொழிலாளர் களாகவே இருப்பதுடன் உதிரிகளாகவே உள்ளனர். நிரந்தரமான இக்கூலித் தொழி லாளர்களின் பொருளாதாரம் அடிப்படைத் தேவையைப் பூர்த்திசெய்யமுடியாத மட்டத்திலேயே காணப்படுகின்றது. அடிப்படைத் தேவையைப் பூர்த்திசெய்துகொள்வதற்கான போராட்டம் முடிந்தபாடில்லை. இதனால் சுரண்டப்படும் தன்மை மிக அதிகளவில் இவர்கள் மீது பிரயோகிக்கப்படுகின்றது.அடிப்படைத் தேவையில் ஒன்றான குடியிருப்புக்கள் நிரந்தரமானவையாகவோ, உரிமையுடையனவாகவோ காணப்படுவதில்லை. அத்துடன் அடிக்கடி இடம்பெயர்ந்து தான் இவ்வம்சாவளி மக்கள் வசிக்கின்றார்கள். மலையகத்து மக்களுடைய வாழ்விடங்கள் எந்த மாதிரியான உள்ளடக்கத்தைக் கொண்டு காணப்படுகின்றனவோ, கிட்டத் தட்ட அதே மாதிரியான நெருக்கமான இடப் பற்றாக்குறை கொண்ட இருண்ட வாழ்விட வசதிகளையே இவர்களும் கொண் டிருக்கிருர்கள். அத்துடன் இவ்வம்சாவளி மக்கள் இப்பிரதேசத்தை நிரந்தரமான வாழ்விடப் பிரதேசமாகக் கொள்ளவில்லை. ஏனெனில், இப்பிரதேசத்தின் இலங்கை வம்சாவளித் தமிழின மக்களுடன் இன்னமும் வேறுபட்டே காணப்படுகின்றனர். இங்கு தமிழ்மொழி பேசப்பட்டாலும் இதனையும் அந்நியப் பிரதேசமாகவே கருதுகின்றனர். அத்துடன் அரசியல் ரீதியிலான இனப் பிரச்சினை, இனக் கலவரங்களினால் வடபகுதியையும் நிரந்தரமற்ற வாழ்விடப் பிரதேசமாகக் கருதி, இந்தியா செல்லவே பலர் விரும்புவதனுல் இலங்கைப் பிரஜாவுரிமை பற்றிய விபரங்களில் அதிக அக்கறை கொள்வதில்லை. இதனால் இங்கிருக்கும் வரை எப்படியாவது எத்தொழிலைச் செய்தாவது இருந்துவிட்டு, இற க் கும் நாளுக்காக இந்தியா செல்வோம் என்னும் மனப்பாங்கு அவர்களின் அடிப்படை வாழ்விடப் போராட்டத்தை இன்னமும் முடிந்தபாடாக இல்லை" இந்நிலையில் சொந்தக் காணி பெற்றுக்கொள்வதை நினைத்துப் பார்க்கமுடியாது.மேலும் வடபகுதியில் இந்திய வம்சாவளித் தமிழின மக்கள் தொழில் ரீதியில் இழிவுக் கூலி மட்டத்திலும் பார்க்கக் குறைவான கூலியையே பெற்றுக்கொள்கின்றனர். ஒரு சாரார் ஒரளவு வருமானம் பெற்றாலும் அப்படைத் தேவைகளும் போதுமானதாகவில்லை. வரத்தக நிறுவனங்களில் வேலைசெய்யும் கணக்குப்பிள்ளை, தச்சுவேலை செய்வோர். நகைத் தொழிலாளர் போன்ருேர் இம்மட்டத்தவர்களாவர். இதனைவிடக் கடைகளில் சிப்பந்திகளாகவும், வீடுகளில் வேலைக்காரர்களாகவும் தொழில்புரியும் நபர்கள், மலையகத்திலிருந்து வந்த இந்திய வம்சாவளித் தமிழின மக்களாவர். இவர்கள் ஏனைய தொழில் புரியும் வடபகுதியில் வாழும் நிரந்தரமான இந்திய வம்சாவளி மக்களிலும் பார்க்க வேறுபட்ட நிலைப்பாடுகளைக் கொண்டுள்ளனர். அதாவது நிரந்தரமான இந்திய வம்சாவளித் தமிழின மக்கள் இப்பிரதேசத்தின் மக்களுடன் தொழில் ரீதியில் சார்ந்திருக்கும் தன்மை காணப்பட சிப்பந்தி ஊழியர்கள், வீட்டு வேலைக்காரர்கள் இப் பிரதேசத்தின் மக்களுக்குக் கீழ்ப்பட்டு அடிமைகளாக வாழும் துர்ப்பாக்கியம் காணப்படுகின்றது. அதே சமயத்தில் இந்திய வம்சாவளிப் பிராமணர்கள் இப்பிரதேசத்தின் மதிப்பிற்குரிய மக்களாக இங்குள்ள பிராமணர்களிலும் பார்க்க மேம்பாடுடையவர்கள் எனப் போற்றப்படுகிறர்கள். இதில் வியப்படைவதற்கு ஒன்றுமில்லை. இதற்குக் காரணம் இங்குள்ள சாதிக் கருத்துக்களே. அரசாங்கத் தொழில்களைப் பொறுத்தவரையில் பிரஜாவுரிமையற்ற காரணத்தினுல் புறக்கணிக்கப்படுகின்றனர்.மொத்தத்தில் வடபகுதியில் வாழும் இந்திய வம்சாவளித் தமிழின் மக்கள், அடிப்படையில் போதியளவு உணவு, நிரந்தர இருப்பிட, உடை, வசதிகனையோ, கொண்டிருக்கவில்லை. தொழில் ரீதியிலும், சாதி அமைப்பிலும் மிகவும் அடிமட்டங் களைக் கொண்டிருப்பதனல் அவர்களில் பெரும்பாலோரின் வாழ்ககை இன்னமும் அடிமட்டத்து உயிர் வாழ் தற்கான போராட்டமாகவே உள்ளது. இதற்குப் பிரஜாவுரிமையற்றவர்கள் என்பதும், பிரதேச மக்களுடன் இன்னமும் ஒரு மட்டத்திலானவர்கள் என்ற நிலைப்பாடும் இல்லாதவர்களாகும்.இவ்வம்சாவளி மக்களின் சமூகவுணர்வு இவர்களின் பொருளாதார நிலைப்பாடுகளி ஞலும், பிரதேசத் தமிழ் இன மக்களின் செயற்பாடுகளினலும் உருவாக்கப்படுகின்றது. இவ்வடிப்படைப் பொருளாதார அமைப்பு இலங்கையிலும், இந்தியாவிலேயும் ஒரேமாதிரியாகக் காணப்படுகின்றது. ஏனெனில் சர்வதேச ரீதியில் முதலாளித் துவ ஏகாதிபத்தியமும், அதனுடைய கால னித்துவக் கொள்கையும், இவர்களின் சமூக உணர்வுகளில் பாதிப்பை ஏற்படுத்தின. பின்னர் ஏற்படும் மாற்றங்களுக்குப் பிரதேச மக்களின் செயற்பாடும் காரணமாக அமைகின்றது.இவர்கள், இங்கே வடபகுதியில் அநாதரவான நிலைமையையே அடிப்படையாகக் கொண்டுள்ளனர். இச்சமூகம், பல்வேறு சாதி, தொழில், குழுக்களாகப் பிரிந்து, பிரதேச மக்களுடன் சேரமுடியாத சமூகப் பிரிவுணர்வுகளுடன், அரசியல் ரீதியில் பிரஜாவுரிமை அற்றவர்களாக, நாடு அற் றவர்களாகத் தவறுசெய்த கைதி போன்ற குற்றவுணர்வுடனும், தாழ்வு மனப்பான்மையுடனும் இருப்பதைக் காணலாம். இவ்வுணர்வுகள் பிரதேச மக்களிலிருந்து பிரிந்து வாழும் மனப்போக்கையே பிரதிபலிக்கின் றன. உதாரணமாக, ஒரு சம்பவத்தில் அவன் குற்றவாளியாயிருந்து, பிரதேச மக் களிற் பல ரா ல் தாக்கப்படும்பொழுது தான் நாடற்றவன் என்பதினல், "அடித்தால் யாரும் தட்டிக்கேட்பதற்கு முடியாது, அதுதான் பலர் சேர்ந்து அடிக்கிறார்கள்" எனக் கருதுகின்ருன். உண்மையில் அச்சம் பவத்தித்கு யார் பொறுப்பாக, குற்றவாளி யாக இருந்தாலும், இவ்வாறே தாக்கப்படுவார்கள் என்பதனை அவன் உணர்வதில்லை. இது அவனிடமுள்ள தாழ்வுமனப்பான்மை யினுல் ஏற்பட்டதாகும்.இத்தாழ்வு மனப்பான்மை மாத்திர மல்ல, அவர்களிடமுள்ள மரபு ரீதியிலான புழக்கவழக்கங்கள்கூட அருகிவருகின்றன, ன்கவிடப்படுகின்றன. இதற்குக் காரணம் விருப்பமின்மை என்பதல்ல. அவர்களின் அடிப்படைத் தேவையின் உக்கிரமான போராட்டமும், பிரதேசச் சூழலும் மரபுகளைப் போற்றுவதற்கோ அல்லது பின் பற்றுவதற்கோ இடமளிப்பதில்லை. அத்துடன் அவற்றைக் கைக்கொண்டாலும் பல பிரதேசப் பழக்கவழக்கங்களையும் கையாண்டிருப்பதைக் காணலாம்.இம்மக்களின் குடும்ப உறவுகள் சிதைவடைந்தே காணப்படுகின்றன. இந்தியாவிலிருந்து வரும்யொழுதே கணவனைப் பிரிந்து வந்த மனைவி, மனைவியைப் பிரிந்துவந்த கணவன், சகோதரர்களைப் பிரிந்து வந்தவர்கள், உறவினர்களைப் பிரிந்து வந்தவர்கள் என்ற நிலைதான் காணப்பட்டது. இங்கு வந்த பின்னர், இங்கு வந்த சாதி உறவுகளுக்குள் புதிய உறவுகள் ஏற்படுத்தப்ப டன. அவ்வுறவுகளின் சேர்க்கைகள் பின் னர் மீண்டும் உடைந்து, குடும்ப நபர்கள் தனித்தனியாகப் பிரிந்து வாழும் தன்மை ஏற்பட்டது. இதனல் அவர்களின் குடும்ப உறவுகள் இறுக்கமான பாசப் பிணைப்புகளைக் கொண்டிருக்கவில்லை. திருமண உறவுகளின் எதிர்பார்ப்புக்கள் இவர்களிடம் அதிகளவு ஆர்வத்திற்குரியதாக, இலட்சியமானதாக, கனவு காணக்கூடியதாக அமைந்திருக்கவில்லை. ஆண் பெண் திருமண உறவுகளை அவதானிக்கும்போது பல வேறுபாடுகளைக் காண முடியும் வயோதிபமடைந்த ஆண், வயது குறைந்த பெண்ணைத் திருமணம் செய்யும்போது அவனுடைய முதல் மனைவி பிறிதொரு நபருடன் வாழும்பொழுதும் மூத்த மகனே அல்லது மகளோ தன்னுடைய குழந்தைகளுடன் தகப்பனின் இத்திருமணத்தை நடத்திவை பார்கள். அது மாத்திரமல்ல, சாதியை பாதுகாக்கப் பெண்களுக்கு இளம் வயதிலும் திருமணம் செய்யப்படும், சிறுவர்களும் இதற்கு விதிவிலக்கல்ல. பெரும்பாலும் வாலிபப் பருவம் வந்தவுடன் திருமணங்கள் முடிந்துவிடும். அவை காதல் திருமணங்கள் என்றோ பெற்றோர்கள் பார்த்தவை என்றே, சீதனம் பெற்றுக்கொண்டோ நடைபெறுபவையல்ல. மாறாக அப்போதிருந்த சூழ்நிலையின் வசதியில் இவை முடித்துவிடப்படுகின்றன. இதனுல் திருமணம் என்ற சொல்லின் அர்த்தமும், அவற் றுக்கான விளக்கங்களும் இவர்களின் திரு மண விடயங்களில் இவர்களினால் ஆராயப்படுவதில்லை. அவை பற்றி அக்கறை செலுத்தப்படுவதுமில்லை. இத்துரதிர்ஷ்டங்களுக்கு யார் பொறுப்பாளிகள்? அத்துடன் இந்திய வம்சாவளித் தமிழின மக்கள், இப் பிரதேச மக்களுடன் மேற்கொள்ளுகின்ற திருமண உறவுகளும் ஒருபக்கச் சார்புடை யதே ஆகும். அதாவது இவ்வம்சாவளி மக் களின் ஆண்கள் தான் இலங்கை வம்சாவளிப் பெண்களைத் திருமணம் செய்கின்றனர். பிரதேச இலங்கை வம்சாவளி ஆண் கள் இந்திய வம்சாவளிப் பெண்களைத் திருமணம் செய்துகொள்வதில்லை. ஏனெனில் இங்கு நிலப்பிரபுத்துவத்தின், சொத்துடைமையின் எச்ச சொச்சங்கள் பெண்களுக்குச் சீதனப் பொருளாகக் காணப்படுகின்றது. இதனால் இந்திய வம்சாவளித் தமிழினத்தின் ஆண்கள் பிரதேசத்தின் இலங்கை வம்சாவளிப் பெண்களைச் சீதனம் இன்றி, அல்லது குறைந்தளவில் சீதனம் பெற்றுத் திருமணம் செய்கின்றனர். இவை இலங்கைப் பிரஜை உரிமை பெறுவதற்காகவும் நடைபெறலாம். ஆனால் இத்திருமணங்கனை எடுத்துப்பார்த்தாலும் அ வை சிதைந்து போன உறவுகளிலிருந்தே ஏற்படுகின்றன. பொருளாதார வசதி குறைந்த குடும்பங்கள் ஆண் துணையற்ற குடும்பங்கள், விதவைகள், கீழ்மட்டத்துப் பெண்களாகவே அமைந்திருக்கின்றன. அதே சமயத்தில் பிரதேச இலங்கை வம்சாவளி ஆண்கள் இந்திய வம்சாவளிப் பெண்களைத திருமணம் செய்துகொள்ளாமைக்கு அவையே காரணங்களாகவுள்ளன. திருமணம் செய்வதாக இருந்தால் சீதனம் இவர்களால் கொடுக்க முடியாது. அத்துடன் திருமணம் நடை பெற்றாலும் அடிமட்ட இலங்கை வம்சாவளி ஆண்களுக்கும், மனைவி அற்றவர்களுக்கும் வயோதிபம் அடைந்தவர்களுக்கும் மட்டுமே நடைபெறும். ஆகவே, இல்வினத்தைப் பொறுத்தமட்டில் திருமணம், விருப்பங்களையோ, ஆசைகளையோ பொறுத்ததல்ல. மாறாகப் பொருளாதாரங்களைப் பொறுத்ததாகும்.மேலும் இம்மக்களுக்கு எவ்வித பாதுகாப்பும் இல்லாமையினல் குடும்பத்தில் உள்ள சகலரும் தொழில்களில் ஈடுபடும் நிலை உள்ளது. சிறுவர்கள் தங்களுக்குரிய குணவியல்புகளைக் கொண்டிருப்பதில்லை. மாறாகச் சிறு வயதில் சமூகப் பாதுகாப்பின்மையினல் வெம்பி முதியவர்கள் ஆகிவிடு கின்றனர். அவர்களுக்குரிய கல்வி வசதி கிடைப்பதில்லை. பெற்றோர்கள் அக்கறை செலுத்துவதில்லை. சில பாடசாலைகள் இவர்களுக்கு அனுமதி வழங்குவதில்லை. படித்தும் பயன் இல்லை என்பதனல் சிறு வயதிலேயே தொழிலுக்கு அனுப்பப்படுகின் றனர். அத்துடன் ஆண்களுக்கு நிகராகப் பெண்களும் தொழிலுக்குப் போகின்றனர், எனவே பொருளாதாரத் தேவை அவர்கள்எல்லோரையும் உழைக்கும் நிர்ப்பந்தத்திற் குள் தள்ளிவிடுகிறது. இதனல் இவ் இந்திய வம்சாவளி மக்களின் சமூக உணர்வானது இந்தப் பிரதேசத்தைத் தனக்குச் சொந்த மானது என்னும் மனப்பான்மையை ஏற் படுத்தவில்லை. அத்துடன் இவர்களிடம் எம் பொழுதுமே விரக்தி மனப்பான்மையே காணப்படுடுறது. தாங்கள் தனிமைப்பட்டவர்கள் என்பதாகவும், தாங்கள் பின்தங்கியவர்கள் என்பதாகவும் கருதுகின்றனர். இவர்களைச் சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் வாழும் இந்திய வம்சாவளியின ருடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, அந் நாடுகளின் இந்திய வம்சாவளியினர், அந் நாட்டின் பிரஜாவுரிமை பெற்றிருப்பதுடன் தொழில் வாய்ப்பு, கல்வி வாய்ப்பு என்பன கிடைப்பதஞல் அந்நாடுகளைத் தங்களுடைய சொந்த நாடாகவே கருதுகின்றனர். அவர்கள் பொருளாதார நிலையும் உயர்வானது. ஆனல் அவ்வுணைர்வு வடபகுதியில் வாழும் இந்திய வம்சாமளியினரிடம் இல்லாதிருப்பதைக் குறித்து வியப்படைவதற்கொன்றுமில்லை.இவ்வின மக்களிடமிருந்து கலையுணர்வுகளையும் செயற்பாடுகளையும் எதிர்பார்க்கமுடியாது. இற்றைவரைக்கும் வடபகுதி இந்திய வம்சாவளி மக்களால் படைக்கப்பட்ட எந்தவித நாவ்லகளேயோ, சிறுகதைகளையோ, வேறு இலக்கிய வடிவங்களையோ இனங்காணமுடியாது. ஆனால் மலையகத்து இந்திய வம்சாவளி மக்களிடமிருந்து பல்வேறு இலக்கிய வடிவங்கள் தோன்றியிருப்பதை அறிந்துகொள்ளமுடியும். ஏனெனில் அவர்களும் பிரஜரவுரிமை அற்றவர்களாக இருந்தாலும், பொருளா தார ரீதியில் ஓர் அடிப்படையான அமைப்பையும், தங்களுக்கிடையில் தங்களையே அங்கீகரித்துக்கொள்ளும் பலமான சமூக அமைப்பையும் கொண்டுள்ளதால் கலை, இலக்கிய வடிவங்கள் உருவெடுக்கின்றன. ஆனால் வடபகுதி இந்திய வம்சாவளித் தமிழின மக்கள் ஓர் அடிப்படையான பொருளாதாரத்தையோ தங்களுக்குள் தங்களையே அங்கீகரிக்கும் செயற்பாட்டையோ கொண் டிருக்கமுடியாத அளவில் உதிரிகளாகக் காணப்படுவதே அதற்குக் காரணமாகும்வடபகுதியின் இந்திய வம்சாவளித் தமிழின மக்களின் அரசியல் ரீதியான நடவடிக்கைகள் மிகவும் பின்தங்கியதான ஒரு செயற்பாட்டையே கொண்டிருக்கின்றது. பொருளாதார ரீதியிலான போராட்டங்களை அரசியல் ரீதியிலான போராட்டங்களாக மாற்றுவதற்கான எந்தவொரு நடவடிக்கையும் இவர்களால் நடாத்தப்படவில்லை. இங்கு தோற்றுவிக்கப்பட்ட சில அமைப்புக்கள் கூட அரசியல் ரீதியான நடவடிக்கைகளைக் கைக்கொள்ளவில்லை. மாறாகப் பொருளாதார நலன்களைக் குறுகிய வட்டத்திற்குள், குறித்த சமூகத்திற்கு மாத்திரம் நிறைவேற்றிக்கொள்வதற்கு உருவாக்கப்பட்டவையாகும். இதனால் இவ்வகை அமைப்புக்கள்கூட வெற்றிகரமாக இயங்கவில்லை. அத்துடன் அரசியல் ரீதியிலான சில நடவடிக்கைகளை இந்திய வம்சாவளித் தமிழின மக்களின் சில தனிப்பட்ட நபர்கள் பல்வேறு கொள்கைகளையுடைய பிரதேச ரீதியிலான கட்சிகளின் அடிமட் டத்து ஊழியர்களாகவே செயற்பட்டனர். குறிப்பாக இளைஞர்கள் சில அரசின் நிறுவனங்களில் மேல்மட்டச் செயற்பாடுகளி லும் அதிகளவு அக்கறையுடன் செயற்பட்டனர், நாடற்றவர்கள் என்பதனால் அரசியலில் பிரவேசிக்க முடியாத தன்மையினுல் பிரதேசத்தின் எந்தவொரு அரசியல் கட்சிகளும் இம்மக்கள் பால் எள்ளளவும் கவனம் செலுத்தவில்லை. அதே சமயத்தில் இவ் இந்திய வம்சாவளித் தமிழின மக்கள் இந்நாட்டின் அரசியலின் பாலும், இப்பிரதேச அரசியல் கட்சிகளின் பாலும், இங்குள்ள அரசியல் சூழ்நிலையிலும் அக்கறை செலுத்தாது, தென்னிந்திய7வின் பிரதேச ரீதியிலமைந்த கட்சிகளின் மீது அக்கறை கொண்டிருந்தனர். அங்குள்ள சூழ்நிலைகளிலேயே தங்களது கவனத்தைச் செலுத்தினர்.மேற்கூறிய நிலைமைகள், வடபிரதேசத் தில் (யாழ்க் குடாநாட்டில்) வாழும் இந் திய வம்சாவளித் தமிழின மக்களின் போக்குகளாகும். அதே சமயத்தில் இப்பிரதேசத்தின் ஏனைய இடங்களில் வாழும், குறிப்பாக வவுனியா, மன்னர், கிளிநொச்சி போன்ற இடங்களிலுள்ள இந்திய வம்சாவளித் தமிழின மக்கள் மலையகத்திலிருந்து குடியேறிய மக்களாகும். இம்மக்கள் பெருந்தோட்டத்தில் கூலிவேலை செய்தவர்கள் இங்கு விவசாயத் தொழிலைச் செய்கின்னர். அத்துடன் அத்துமீறிய காணிகளிலேயே பெருமளவு குடியேறியுள்ளனர். இங்கும் இம்மலையகத்து இந்திய வம்சாவளி மக்கள் குறிப்பிட்ட பிரதேசத்தின் இலங்கை மக்களுக்குக் கீழ்ப்பட்டவர்களாகே தொழில் செய்கின்றனர். இம்மலையக இந்திய வம்சாவளித் தமிழின மக்கள் கடின உழைப்பாளிகள் என்பதனலும், கல்வியறிவு அற்றவர்கள் என்பதனாலும், சொத்துடைமை அற்றவர்கள் என்பதனாலும் இவர்களை வடபகுதியின் வன்னிப்பகுதி செறிந்து கொண்டது. இவர்களினல் எந்தவிதமான பிரச்சினைகளும் தமக்கு ஏற்படாது என்பதனால் இப்பிரதேசங்களின் விவசாய நிலங்களில் கூலித் தொழிலாளர்களாக இவர்களைப் பயன்படுத்தப்பட்டனர். இங்கும் இம்மக்கள் அடிமட்டத் தேவைக்கான உயிர் போராட்டத்தையே நடத்துகின்றனர் இவர்களின் சமூக உணர்வும், செயற்ப பாடும் நிரந்தரமற்ற பாதுகாப்பின்மையை அடிப்படையாகக் கொண்டே காணப்படுகின்றது. ஆனால் யாழ்ப்பாணம் போன்ற பகுதிகளில் உதிரிகளாக வாழும் இந் இந்திய வம்சாவளித் தமிழினத்தவர்களை விட வன்னிப் பகுதிகளில் வாழும் இந்திய வம்சாவளித் தமிழின மக்கள் பயன்லயகத்தின் எவ்வாறு தொழில் ரீதியில் ஒன்றிணைந்திருந்தனரோ அதே போன்று இங்கேயும் விவசாயத்தின் கூலித் தொழிலாளர்களாக ஒன்றிணைந்துள்ளனர். இதனால் சில நடவடிக்கைகளை இவர்கள் துணிந்து மேற்கொள்ளமுடிகின்றது. இதனாற் தான் ,மலையகத்தில் வேரூன்றிய பெருந்தோட்ட தொழிற்சங்கங்கள் இப்பகுதிகளிலும் இம் மக்களினூடாகத் தொழிற்சங்க அமைப்புக்களை ஏற்படுத்தி அவை ஊடாக இப்பிரதேச மக்களின் வாழ்க்கையில் ஒரளவு அக் கறை செலுத்தும் செயற்பாடு அதிகரித்து வருகின்றது. இது நிரந்தரமான இந்திய வம்சாவளித் தமிழினத்திற்குள்ள நிலை மையைவிடச் சா த க ம ன ஒரம்சமாகும்.இவ்வடபகுதியின் இந்திய வம்சாவளித் தமிழின மக்களின் மத்தியில் இன்று இளைஞர்களின் செபற்பாட்டினூடாகப் புதிய தொரு விழிப்புணர்வு ஏற்பட்டுவருகின்றது. ஏனெனில் இல்விளைஞர்கள் இந்நாட்டில் பிறந்தவர்களினுதலினல் இந்நாட்டையே தங்களுடைய சொந்த நாடாகக் கருதுவதுடன் தங்களை ஒதுக்கிவைத்திருக்கும் நாடற்றவர்கள் என்னும் பிரச்சினையைத் தீர்ப்பதற்குப் பிரஜாவுரிமை பெற்ற இந்திய வம்சாவளி மக்களுடன் சேர்ந்து தங்களுக்குரிய பொருளாதாரச் செயற்பாடு களை மேற்கொள்வதற்கும், அதனை அரசியல் ரீதியான போராட்டமாக முன்வைத்துச் செல்வதுடன் மாத்திரம் இந்த நாட்டில் புதியதொரு சமுதாய மாற்றத்திற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவும். ஸ்தாபன ரீதியிலான அமைப்பு முறையை ஏற்படுத்த விழைகின்றனர். ஏனெனில் ஸ்தாபன அமைப்பே பிரதேச மக்களுடன் இணைவதற்கும், உறவுகளைப் பலப்படுத்துவதற்கும் ஒரு பாலமாக அமையும். இந்த ரீதியிலான மாற்ற உணர்வுகளே இன்று வளர்ந்துவரும் பேர்க்காகும். எனவே வட பகுதியின் இந்திய வம்சாவளித் தமிழினத்தின் விடிவும், மலையகத்து இந்திய வம்சாவளியினரின் விடிவும், பிரதேசத்தின் இலங்கை வம்சாவளியினரின் விடிவும், ஏன் இலங்கையில் வாழும் சுரண்டப்படும் வர்க் கங்களின் விடிவும் இளைய தலைமுறையின ரிடயே விடப்பட்டுள்ளது எனலாம்."தமிழ் ஐக்கிய முண்ணணி ஆதரவாளர்கள் எல்லோருமே வகுப்புவாதிகள் அல்ல. ஆகவே வகுப்பு வாதிகள் மிகச் சிறுபான்மையினரே என்பது உறுதியாகவில்லையr ? இது மகிழ்ச்சிக்குரிய விடயமில்லையா” - சி. சிவசேகரம்.
யாழ்ப்பாண வளாக 1977-ம் ஆண்டு 1 மாணவர் சங்க மாணவர்சங்க தேர்தலும் மலையகத் தமிழ் மாணவர்களும் (ஆவணங்களிலிருந்து).
தொகுப்பு- மூக்கையா நடராஜா.
Expose the problems of srilankan upcountry tamil people to the world.Currently this population is under privileged and denied basic human rights.Even being permanent residents for a period of 175 years, very resantly only (in 1985) they had given citizenship and voting rights.This people needs to be helped.Since 1992 the entire population re gained citizenship and voting rights,but,they are not govern by parliament or other local government authorities..
Pages
POPULATION
Entire population of indian origin upcountry tamil people is currently estimated as 1.5 millian. out of this .75 millian people live outside tea estates and elswhere in the country.only 50% of the people live and work at tea estates and this containes of 3800 families.in 1950 ,six decades ago 90% of above population lived and dependants of tea estates . because of lower wage and poor living conditions people are try to find works outside tea estats and distracted from tea industry.if this tendancy continues in for another five decades there going to be hardley any single workers family going to be left inside in a tea estate.
a tea estate with dwelings
it is so cold
sun set pictures near galle
perspective
workers children.....it is difficult to smile
Monday, March 30, 2020
Subscribe to:
Posts (Atom)
Add a comment