POPULATION

Entire population of indian origin upcountry tamil people is currently estimated as 1.5 millian. out of this .75 millian people live outside tea estates and elswhere in the country.only 50% of the people live and work at tea estates and this containes of 3800 families.in 1950 ,six decades ago 90% of above population lived and dependants of tea estates . because of lower wage and poor living conditions people are try to find works outside tea estats and distracted from tea industry.if this tendancy continues in for another five decades there going to be hardley any single workers family going to be left inside in a tea estate.

a tea estate with dwelings

a tea estate with dwelings

it is so cold

it is so cold
there is no way out

sun set pictures near galle

sun set pictures near galle




perspective

perspective
imbulpitiya tea estate near nawalapitiya from the distance

new developments

new developments
after 1972when the parliament passed land ceiling act the hill country border plantations were divided into small portions given to sinhala peasants colonnialising the plantation districts.

workers children.....it is difficult to smile

workers children.....it is difficult to smile

Monday, May 12, 2025

பெருந்தோட்ட வரலாற்றில் இருந்து.... (69) இரா.சடகோபன் வயிறு புண்ணாகி வீதிக்கு வந்தனர் மருத்துவமனைகள் கோப்பித் தோட்டத் தொழிலாளர்களின் பிணவறைகள் என்ற அளவுக்கே பணியாற்றுகின்றன என்ற கருத்து தொடர்பில் சட்ட சபையில் சேர்.முத்துக்குமார சுவாமி எடுத்துக் கூறிய கருத்துக்கள் கவனிக்கத்தக்கன. தொழிலாளர்கள் நோய் வாய்ப்பட்டு சாகும் வரையில் வைக்கப்பட்டிருந்து இறுதியிலேயே வைத்தியசாலைக்கு அனுப்பப்படுவதன் பிரதான காரணம் தொழிலாளர் அன்றாடம் பிறட்டுக் கலைக்கும் போது அவர்கள் அங்கு பிரசன்னமாயிராது விடில் கங்காணிக்கு வழங்கும் தலைக்காசு குறைந்து போய் விடும் என்பதாகும் என்று தொழிலாளர் தம்மிடம் தெரிவித்ததாக சேர்.முத்துகுமார சுவாமி தெரிவித்தார். சேர்.முத்துக்குமார சுவாமியின் கூற்றுப்படி சிறு சிறு நோய்களின் போது அவர்கள் தத்தமது இருப்பிடத்திலிருந்தே வைத்தியம் செய்து கொள்ள முடியும் என்றும் அல்லது தோட்டத்துக்குள் அமைக்கப்படும் மருத்துவமனைகளில் வைத்தியம் செய்வது உகந்தது என்றும் அவர்களை தூர இடத்திலுள்ள வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதிக்கும் போது புதிய சூழ்நிலையில் அவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர் என்றும் அவர் அங்கு குறிப்பிட்டார். இத்தகைய ஒரு நிலைமையில் மெட்ராஸ் மாநிலத்தில் 1870 தசாப்தத்தின் மத்திய காலப் பகுதிகளில் ஏற்பட்ட அபரிமிதமான வரண்ட கால நிலைமையும் அதனைத் தொடர்ந்த பஞ்சம் பட்டினியும் இலங்கைக்கான தொழிலாளர் வரவில் பாரிய அதிகரிப்பை ஏற்படுத்தியது. அவ்விதம் இலங்கைக்கு கண்டிச் சீமை நோக்கி வந்தவர்கள் கடுமையான பஞ்சம் பட்டினியால் பாதிக்கப்பட்டு போஷாக்கற்றவர்களாகவும் நலிந்தவர்களாகவுமே வந்து சேர்ந்தனர். அதன் காரணமாக இலங்கையின் கோப்பித் தோட்ட வட்டாரங்களில் மீண்டும் ஒரு முறை சுகாதாரம் மற்றும் மருத்துவத்துறை சார்ந்த நெருக்கடி மற்றும் அவசர காலநிலை ஏற்பட்டது. கண்டியில் ஆபத்தில் உதவும் நண்பன் அமைப்பு மீண்டும் துணைக்கு வந்து கண்டியிலும் சுற்றுப் புறங்களிலும் கஞ்சிப் பந்தல்களை ஏற்படுத்தியது. பசியுடனும் தாகத்துடனும் வந்த தொழிலாளர்களை உண்ணக் கொடுக்க வேண்டியவர்கள் கஞ்சி கொடுக்க வேண்டியவர்கள் தண்ணீர் கொடுக்க வேண்டியவர்கள் என்று பிரித்து பாகுபடுத்தி அவர்களை பாகுபடுத்தி சிகிச்சையளிக்க வேண்டி ஏற்பட்டது. அன்றைய காலகட்டத்தில் கண்டியில் மத்திய மாகாண காலனித்துவ சத்திர சிகிச்சை அதிகாரியாகக் கடமையாற்றிய 30 வீதத்தினர் இறந்து போயினர். த்தகைய நிலையில் நிலைமையை சீராக்க வேண்டுமாயின் மீண்டும் ஒரு முறை மருத்துவத் தேவைகள் சட்டத்தை மீளாய்வு செய்ய வேண்டியதன் தேவை உள்ளதென துரைமார் சங்கத்தின் தலைவர் ஜே.எல்.ஷாண்ட் ஒரு சந்திப்பின் போது தெரிவித்தார். இதனை பிரேரித்த ஜே.எல்.ஷாண்ட் குறிப்பாக மரணங்கள் அதிகரிப்பதற்கு போதுமான மருத்துவர்கள் காணப்படாமையே காரணம் என்று கூறினார். அவர் தனது பரிந்துரையில் மேலும் தெரிவித்ததாவது, இலங்கையின் 22 கோப்பிப் பயிர்ச் செய்கை மாவட்டங்களில் மொத்தம் 350,000 தொழிலாளர்கள் காணப்படுகின்றனர். இவற்றில் மூன்று மாவட்டங்களில் ஒரு மருத்துவ அதிகாரி கூட இல்லை. இதன் பிரகாரம் பார்க்கும் போது 16,000 பேர்களை கவனிக்க சராசரியாக ஒரே ஒரு மருத்துவரே இருக்கின்றார். பிரித்தானியாவுடன் ஒப்பிடும் போது 2000 முதல் 2500 பேர்களுக்கு ஒரு மருத்துவர் உள்ளார். இந்த நிலையை கோப்பிப் பயிர்ச் செய்கை பிரதேசங்களில் அடைய வேண்டுமாயின் கோப்பிப் பயிர் செய்யப்படும் பரப்பின் ஒரு ஏக்கருக்கு மருத்துவ வரியாக ரூ 4 முதல் 5 வரை அறவிட வேண்டியிருக்கும். தோட்ட நிர்வாகத்தைப் பொறுத்தவரையில் இது சாத்தியமான காரியம் அல்ல. இந்தக் காரியத்தை உள்நாட்டு மருத்துவ உதவியாளர்களிடம் ஒப்படைப்பதிலும் ஒரு பிரயோசனமும் இல்லை. அவர்கள் மனோ ரீதியிலும் உடல் ரீதியிலும் அறிவு ரீதியிலும் தராதரம் அற்றவர்களாகவே இருக்கின்றனர். ஆதலால் அத்தகையவர்களை தொடர்ந்தும் இதில் 1878 ஆம் ஆண்டு கண்டிக்கான மருத்துவ அதிகாரி கின்சியின் கூற்றுப்படி புதிதாக வந்து சேரும் தொழிலாளர்கள் வயிற்றில் ஒன்றுமில்லாமல் குடல் சுருங்கிப் போனபடி வருகின்றார்கள். இவர்கள் நாட்கணக்கில் ஒழுங்கான சத்துணவு சாப்பிடாததால் வெறும் வெற்றுடம்புடன் இங்கு வந்து எதைச் சாப்பிடக் கொடுத்தாலும் உடல் ஒத்துக்கொள்ளாமல் கொலராவும் வாந்தி பேதியும் ஏற்பட்டு மிகுந்த மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டு விடுகிறார்கள். இவர்களின் சமிபாட்டுத் தொகுதியும் மிக மோசமான வகையில் சேதமடைந்து வயிறு புணணாகிக் காணப்படுகின்றது. இத்தகைய நலிந்து போனவர்களை கொஞ்சம் குணமாக்கி தோட்டங்களுக்கு அனுப்பினாலும் அங்கும் இவர்கள் வேலைக்கு லாயக்கற்றவர்கள் என விரட்டப்பட்டு வீதிக்கு வந்து விடுகிறார்கள். (தொடரும்...) பெருந்தோட்ட வரலாற்றில் இருந்து..... (70) இரா.சடகோபன் செத்தவர்கள் கப்பலில் இருந்து கடலில் வீசப்பட்டனர் கடுமையான வரட்சியால் பஞ்சம் பட்டினியேற்பட்ட போது உயிர்தப்பிப் பிழைப்பது தம் சொந்தக் கிராமங்களிலேயே சாத்தியமற்றதாக இருந்த போது கண்டிச் சீமையில் அரிசியும் தேங்காயும் மலிவாகக் கிடைக்கின்றது என்ற செய்தி தேனாக இனித்தது. மெட்ராஸ் மாநிலத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்தும் இலங்கையின் கோப்பித் தோட்டங்களில் சேர்ந்து கொள்வதற்காக ஆண்களும் பெண்களும் கூட்டம் கூட்டமாகப் புறப்பட்டனர். இலங்கையில் கண்டிச் சீமைக்கு மட்டும் போய்ச் சேர்ந்து அப்புறம் வயிறு நிறைய சாப்பிடலாம் என்பதும் நாளுக்காசு சம்பாதிக்கலாம் என்பதும் தான் அவர்களின் ஒரேயொரு எதிர்ப்பார்ப்பாக இருந்தது. இப்படிக் கூட்டமாக வந்து சேர்ந்தவர்களையெல்லாமே பிடித்து அனுப்பாமல் உடல் ரீதியில் திடகாத்திரமானவர்களை மட்டும் தெரிவு செய்து அனுப்புவது மூலமே இலங்கையில் இவர்கள் வந்து சேர்ந்து பின்னர் நீண்ட தூரப் பயணத்தின் பின் மலை நாட்டின் கோப்பித் தோட்டங்களை அமையக்கூடியதாக இருக்கும் என்றும் இதற்கு ஒரு முறையை கடைப் பிடிக்கப்பட வேண்டும் என்றும் எனினும் தொடர்ந்தும் தொழிலாளர்கள் எவ்விதக் கட்டுப்பாடும் இல்லாமல் தொகை தொகையாக இலங்கையை வந்து சேர்ந்தனர். அவர்கள் வரவின் மிகப் பெரிய பிரச்சினை வாந்தி பேதியும் கொலராவும் உள்நாட்டில் பரவி பெரும் பீதியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியது தான். இது தொடர்பில் ஆளுநர் கிரகரி 1876 ஆம் ஆண்டு செப்டம்பர் 13 ஆம் திகதி சட்ட சபையில் உரை நிகழ்த்தும் போது பின்வருமாறு குறிப்பிட்டார், உண்மையில் எமது கோப்பித் தோட்டங்களில் தொழில் புரிவதற்காக போதுமான அளவு தொழிலாளர்களைத் தந்துதவியமைக்காக நாம் இந்திய அரசாங்கத்துக்குக் கடமைப்பட்டுள்ளோம். ஆனால் அதே சமயம் மேற்படி தொழிலாளர்களே இலங்கையில் கட்டுப்படுத்த முடியாத விதத்தில் கொலரா நோய் பரவுவதற்கான காரணமாக உள்ளனர் என அறிந்தும் அதற்கான கதவை இறுக்கி மூடிவிட எம்மால் முடியாதுள்ளது. ஆதலால் நாம் இது விடயத்தில் மிகக் கவனமுடன் தேடிப்பார்த்து பணி புரிய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார். இத்தகைய நிலையில் கொலரா பாதிப்புக்குற்பட்ட வடக்குப் பாதையை பயன்படுத்தாமல் கடல் மார்க்கமாக தூத்துக்குடியில் இருந்து கொழும்புக்குத் தொழிலாளரை வரச் செய்யலாம் என்றும் கொழும்பில் அவர்களை தடுத்து வைத்து (கிதச்ணூச்ணவடிணழூ இச்ட்ணீ) பரிசோதனைக்கு உட்படுத்திய பின்னர் தோட்டங்களுக்கு அனுப்பலாம் என்றும் தான் ஆல்பதி கிரகரியைச் சந்தித்து ஆலோசனை தெரிவித்ததாக அப்போது துரைமார் அங்கத்தின் தலைவராக இருந்த ஜோர்ஜ்வோல் துரைமார்களிடம் எடுத்துக்கூறினார். எனினும் கவர்னர் கிரகரி இந்த யோசனையை ஏற்றுக்கொள்ளவில்லை. அதற்கு அவர் கூறிய காரணம் கொழும்பு என்பது மிகவும் சனத்தொகை அடர்த்தியான ஒரு நெரிசல் மிக்க நகரம். இத்தகைய மிக விரைந்து பரவும் தொற்றுக் கிருமிகளைத் தம் வசம் கொண்டு வரும் மனிதப் போக்குவரத்தினை கொழும்புக்குக் கொண்டுவருவது மிகவும் ஆபத்தானது என்றும் அவர் கருதினார். எனினும் 1875 ஆம் ஆண்டு கொழும்புத் துறைமுகத்தில் மிதக்கும் வைத்தியசாலை ஒன்று ஒரு கப்பலில் ஏற்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து துறைமுகத் தொழிலாளர் மத்தியில் மேற்படி தொற்று நோய்க் கப்பலின் நடமாட்டம் தொடர்பில் பீதியும் பதற்றமும் ஏற்படத் தொடங்கியது. மேற்படி தொற்றும் நோய் துறைமுகத்தில் உள்ளவர்களையும் பீடிக்கலாம் என வதந்தி ஏற்பட்டது. மறுபுறத்தில் கொழும்பு நோக்கி கப்பலில் கொண்டு வரப்பட்ட தொழிலாளர்கள் கொலரா காரணமாகவோ அல்லது வேறு நோய்கள் காரணமாகவோ இறந்து போனால் அவர்களின் உடல்கள் கடலில் தூக்கி எரியப்பட்டன என்ற செய்தியும் பரவியது. கப்பல் மாலுமிகள் இப்படி செய்வதற்குக் காரணம் இவ்விதம் தொற்று நோய் உள்ளவர்களை ஏற்றி வந்தமை என்ற காரணத்தின் பேரின் கப்பலை தடுத்து வைக்கும் ஏற்பாடு சட்டத்தில் காணப்பட்டமையாகும் என்று தெரிவிக்கப்பட்டது. இதனால் மேற்படி கப்பல் போக்குவரத்தும் மிதக்கும் வைத்தியசாலைத் திட்டமும் கைவிடப்பட்டது. தனைத் தவிர கோப்பித் தோட்டத் தொழிலாளர்கள் சுயமாக கப்பலில் பிரயாணம் செய்து வந்தவர்கள் கொழும்பில் தாம் தடுத்து வைக்கப்படலாம் என்பதற்குப் பயந்து அவர்கள் வர்த்தகர்கள் போல் பாவனை பண்ணியும் மாறு வேடமிட்டும் வந்துள்ளமையும் பின்னர் தெரிய வந்துள்ளது என மருத்துவ அதிகாரி கின்சி சுட்டிக்காட்டியுள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது, காழும்புத் துறைமுகத்துக்கு அண்டிய பகுதிகளிலேயே கொலராவால் பீடிக்கப்பட்டு மரணமடைந்தவர்களின் உடல்கள் கடலில் வீசப்பட்டுள்ளன. இவ்விதம் கப்பலில் பயணித்தவர்களின் மரணம் குறித்து பதிவு செய்யப்படவுமில்லை புள்ளி விபரங்களும் இல்லை இதில் கவலைப்பட வேண்டிய விடயம் என்னவென்றால் இத்தகைய உடல்கள் கரையொதுங்கி கொழும்பிலும் கொழும்பு மாவட்டத்திலும் கொலரா பரவும் அபாயத்தினை மிக அதிகப்படுத்தியமை தான். இத்தகைய அபாயம் அதிகரித்த நிலையில் ஆளுநர் கிரகரியைத் தொடர்ந்து பதவி பெற்று வந்த சேர் ஜேம்ஸ் லோங்கடன் (குடிணூ.ஒச்ட்ழூண் ஃணிணஞ்ஞீணிண 1877 1878) காலத்தில் இந்தியாவில் இருந்து இடம்பெறுகின்ற இத்தகைய தொழிலாளர்கள் இடப்பெயர்வினை முற்றாக நிறுத்தவேண்டும் அல்லது இடை நிறுத்தம் செய்ய வேண்டுமென கோரிக்கை சட்ட சபையில் முன்வைக்கப்பட்டது. இதற்கு பதிலளித்த லோங்டன் இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கும் அந்நிய செலாவணி வருமானத்துக்கும் கோப்பி ஏற்றுமதி வருவாய் மிக அத்தியவசியம் என்றும் தற்போது மிக அதிகரித்த தொழிலாளரின் வரவு அவசியமானதாகவும் இருப்பதால் அவர்களின் வரவை நிறுத்துவது என்பது சாத்தியமானதல்ல என்றும் கூறினார். (தொடரும்) பெருந்தோட்ட வரலாற்றிலிருந்து (71) சேர்.வில்லியம் கிரகரி பதவி விலகிய போது....! இலங்கையில் கோப்பியில் பெருந்தோட்ட செய்கை ஆரம்பித்ததிலிருந்து இந்திய தொழிலாளர்கள் பெருந்தொகையாக வரத்தொடங்கியதால் தான் நாட்டின் சுகாதாரம் மற்றும் மருத்துவத் துறை மிகச் சீரழிந்து போனது என ஒரு சாரார் வாதிட்ட போது இன்னுமொரு சாரார் இல்லை பெருந்தோட்ட பொருளாதாரத்தின் வளர்ச்சியே இலங்கையின் சீரான மருத்துவம் மற்றும் சுகாதார துறையின் வளர்ச்சிக்கும் காரணமாக இருந்ததென எதிர்வாதிட்டனர். இந்த இரண்டு வாதங்களும் வெறும் தர்க்கரீதியானவை என்ற போதும் ஒரு குறித்த காலப்பகுதியில் ஒரு குறித்த இடத்தில் பெருந்திரளான மக்கள் கூட்டம் கூடி பெருகிய போது அங்கு இயற்கையாகவே சுகாதார கேடுகள் இடம்பெறுவதை அக்காலத்தில் தடுக்க முடியாமலிருந்தது என்பதும் உண்மை தான். இவ்விதம் பெருந்திரளான மக்கள் கூடுமிடமாகவும் அதே போல் பெரும் நோய்களான கொலரா, அம்மை, லைசூரி மற்றும் இத்தகைய விரைந்து பரவும் நோய்களின் தொற்றுவையாக இருந்த இடம் தான் கதிர்காமம் என அக்காலத்தில் இனம்காணப்பட்டது. ஒவ்வொரு வருடமும் ஆடி மாதத்தில் கதிர்காம கந்தனை தரிசிக்க யாத்திரீகள் கூட்டமாக கூடி தங்கியிருந்த பிரதேசங்களை சுகாதார சீர்கேடு காரணமாக இத்தகைய நோய்கள் பரவியதால் நூற்றுக்கணக்கானோர் இறந்து போய்விடுவது வழக்கமாகவிருந்தது. இதன் காரணமாக இப்பிரதேசத்துக்கு விஜயம் செய்வோரின் சுகாதாரத்தினை உறுதி செய்வதற்காக அரசாங்கம் சுகாதார மற்றும் மருத்துவ சேவைகளை முன்னெடுப்பதற்காக ஒரு தொகை பணத்தை செலவிட வேண்டியுள்ளதென முன்பு ஆளுநராக கடமையாற்றிய சேர்.வில்லியம் கிரகரி தெரிவித்திருந்தார். கதிர்காமத்துக்கு வருடந்தோறும் செல்லும் யாத்திரியர்களை கட்டுப்படுத்துவதற்காக ஒரு சட்டம் கொண்டு வரவேண்டும் என்று விதந்துரைத்த போதே அவர் அவ்விதம் தெரிவித்தார். எனினும் அதற்கு பதிலளித்த அரசாங்க பிரதம மருத்துவ அதிகாரி இது தொடர்பில் அரசாங்கம் கரிசனம் கொண்டு பெருந்தொகை பணத்தை விரயம் செய்வதையும் பார்க்க இவ்விதம் மரணமடைவோரை வீதிகளில் சாக அனுமதிப்பதே மேல் என்று குறிப்பிட்டமை பலரதும் கவனிப்புக்கு உள்ளõனமை குறிப்பிடத்தக்கது. என்ற போதும் 1880 ஆம் ஆண்டிலிருந்து கதிர்காமத்துக்கு யாத்திரீகம் செய்வோர் அனுமதி பத்திரமொன்றை வைத்திருக்க வேண்டுமென சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆரம்ப காலத்தில் 150 பேர் வரையிலேயே ஒரு நேரத்தில் செல்ல அனுமதிக்கப்பட்டனர். இத்தகைய அனுமதிப்பத்திர முறைமையும் ஏற்படுத்தப்பட்ட சுகாதார வேலைத்திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்ட பின்பு இங்கு நிகழும் மரணங்கள் படிப்படியாக குறைந்து போனதை தொடர்ந்து வழங்கப்படும் அனுமதிப்பத்திரத்தின் தொகைகள் காலத்துக்குக் காலம் அதிகரிக்கப்பட்டது. 1925 ஆம் ஆண்டு வரை நடைமுறையிலிருந்த இந்த திட்டம் அதன் பின்னர் தேவையில்லை என நிறுத்தப்பட்டது. அநேகமாக சுகாதார சீர்கேடுகளுக்கான காரணி முறையான நீர் வழங்கல் இல்லாமையே என முன்பே சுட்டிக்காட்டப்பட்டிருந்தமைக்கமைய 1877 ஆம் ஆண்டு கொழும்àபு நகரத்துக்கும் 1878ஆம் ஆண்டு கண்டி நகரத்துக்கும் முதன்முதலாக நீர் வழங்கல் முறைமையொன்று அறிமுகம் செய்யப்பட்டது. இத்தகைய நீர் வழங்கல் முறைமை ஒன்றின் ஆரம்பம் சுகாதார சேவையை மேம்படுத்துவதுடன் பல்வேறு தொற்று நோய்களையும் குறைத்து சுத்தத்தை பேணக்கூடியதாக இருந்தது என தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில் கொலரா மற்றும் ஏனைய தொற்று நோய்கள் பரவா வண்ணம் தடுக்க பல்வேறு நடைமுறைகள் பின்பற்றப்பட்டன. அவற்றில் ஒன்று மன்னாரில் இருந்து மலைநாடு நோக்கி தொழிலாளர் பயணித்த வடக்கு பாதை மூடப்பட்டமையாகும். தொழிலாளர் நேரடியாக கொழும்பு வந்து மலையக பகுதிக்கு சென்ற போதும் றாகமையில் வைத்து அவர்கள் தடுத்து வைத்து தொற்று நோய் பரிசோதனைக்கு (கீச்ஞ்ச்ட்ச் ஞீழூவழூணவடிணிண ஞிச்ட்ணீ) உட்படுத்தப்பட்டனர். மன்னார் ஊடாக ஏற்படுத்தப்பட்டிருந்த வடக்கு பாதை மூடப்பட்டது தொடர்பில் கருத்துத் தெரிவித்த அப்போது ஆள்பதியாகக் கடமையாற்றிய சேர்.ஜோசப் வெஸ்ட் ரிச்வே (குடிணூ.ஒணிண்ழூணீட ஙிழூண்வ கீடிஞீஞ்ழூதீச்தூ 1895 1903) ""இத்தகைய நடவடிக்கையின் மூலம் இந்த பாதையில் வசித்த கிராமவாசிகள் பலியிடப்படுவதிலிருந்து காப்பாற்றப்பட்டனர் என்று குறிப்பிட்டார். 1891 ஆம் ஆண்டும், 1898 ஆம் ஆண்டிலும் மாத்திரம் மன்னார் மாவட்டத்தில் ஐநூறு விவசாயிகள் கொலராவிற்கு பலியாகியுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்தார். 899 ஆம் ஆண்டில் ஒரு கொலரா மரணம் கூட ஏற்படவில்லை என்றும் அதற்கு காரணம் கடைபிடிக்கப்பட்ட உயர் சுகாதார முறைகளே என்றும் அப்போது பிரதம குடியியல் மருத்துவ அதிகாரியாக கடமையாற்றிய டொக்டர் அலன் பெர்ரி (431 ஆகும் என கணக்கிடப்பட்டிருந்தது. இது ஒரு மிகப்பாரிய தொகையாகும் என கருதப்பட்டது. இலங்கையின் கோப்பி பயிர் செய்கை வரலாற்றின் போது தோட்டத் தொழிலாளர்களின் சுகாதார சேவை மேம்படுத்தி அவர்கள் மத்தியில் காணப்பட்ட அதிகரித்த மரண வீதத்தை குøறக்க வேண்டுமென இதய சுத்தியுடன் செயற்பட்டவர்களில் ஆளுநர் சேர்.வில்லியம் கிரகரி குறிப்பிடத்தக்கவர். இவரால் ஏற்படுத்தப்பட்ட மருத்துவ சேவைகள் கட்டளை சட்டம் பல விமர்சனங்களுக்கு உட்பட்ட போதும் அதன் தேவையை பலராலும் புறக்கணிக்க முடியவில்லை. 1877 ஆம் ஆண்டு மே மாதம் 07 ஆம் திகதி தான் பதவி விலகி செல்வதையொட்டி சட்டசபையில் அவர் நிகழ்த்திய இறுதி சொற்பொழிவிலும் கூட மேற்படி சட்டம் தொழிலாளர்களின் நன்மை கருதி ஏற்படுத்தப்பட்டதன்றி அது துரைமார்களின் வசதிக்காக ஏற்படுத்தப்பட்ட ஒன்றல்ல என்று அவர் குறிப்பிட்டார். (தொடரும்...)