POPULATION

Entire population of indian origin upcountry tamil people is currently estimated as 1.5 millian. out of this .75 millian people live outside tea estates and elswhere in the country.only 50% of the people live and work at tea estates and this containes of 3800 families.in 1950 ,six decades ago 90% of above population lived and dependants of tea estates . because of lower wage and poor living conditions people are try to find works outside tea estats and distracted from tea industry.if this tendancy continues in for another five decades there going to be hardley any single workers family going to be left inside in a tea estate.

a tea estate with dwelings

a tea estate with dwelings

it is so cold

it is so cold
there is no way out

sun set pictures near galle

sun set pictures near galle




perspective

perspective
imbulpitiya tea estate near nawalapitiya from the distance

new developments

new developments
after 1972when the parliament passed land ceiling act the hill country border plantations were divided into small portions given to sinhala peasants colonnialising the plantation districts.

workers children.....it is difficult to smile

workers children.....it is difficult to smile

Friday, January 18, 2013



புதிய பண்பாட்டுத்தள கருத்தாடலில் மல்லியப்பு சந்தி திலகர் உரை


புதிய பண்பாட்டுத்தளம் ஏற்பாடு செய்திருக்கக்கூடிய இந்த கருத்தாடல் களம் பலதரப்பு விடயங்களை உள்வாங்கத்தயாராக உள்ள நிலையில் மலையகத்தைச் சார்ந்தவன் என்ற வகையிலும் மலையகத்தைத் தளமாகக் கொண்டு செயற்படுகின்றவன் என்ற வகையிலும் மலையகம் சார்ந்ததாக எனது கருத்துக்களை பதிவு செய்யலாம் என நினைக்கிறேன்.
தலைமையுரை ஆற்றிய கலாநிதி ந.இரவீந்திரன் வடகிழக்கு தீண்டாமை ஒழிப்பு இயக்கம் முதல் பாரதி, காந்தி, மற்றும் அம்பேத்கார் காலம் முதலான சாதிய நிலைமைகளையும் அதற்கெதிரான பேராட்டங்களையும் இந்து மதம் அதற்கு எதிரான அல்லது மாற்றான மதங்கள் குறித்த தெரிவுகள் எவ்வாறு இடம்பெற்று வந்துள்ளன என்பன குறித்த தமது கருத்துக்களை முன்வைத்தார். எனினும் மலையகம் சார்ந்து முன்வைக்கப்படவிருக்கும் எனது கருத்துரையில் அங்கு நிலவக்கூடிய சாதிய நிலைமகளுக்கு அப்பால் தற்போதைய சூழ்நிலையில் ‘மலையக தேசியத்தை’ நிறுவுவதில் உள்ள சவால்கள் குறித்து அதிகம் விபரிக்கலாம் என நினைக்கிறேன்.
இலங்கைக்கு 200 வருடங்களுக்கு முன்பாக கூலிகளாக வந்த மக்கள் இன்று தங்களை ‘மலையக’ மக்கள் எனும் சொல்லாடல் கொண்டு அழைக்கும் நிலைமைகளை உருவாக்கியுள்ளனர். இந்திய வம்சாவளி தமிழர்  என்பதே பதிவாக உள்ளபோதும் கூட ‘மலையக மக்கள்’ என்போர் இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி தமிழர்களைத்தான் குறிக்கின்றது என தனியாக யாரும் விவரணப்படுத்தத் தேவையில்லை. இந்திய வம்சாவளியினர் என்று விரும்பியே தம்மை பதிவு செய்துகொள்பவர்கள்கூட பொது உரையாடல்களின்போது ‘மலையகம்’ எனும் சொல்லாடலை பிரயோகிக்கின்ற நிலைமைகளை அவதானிக்கலாம். இந்த ‘மலையகம்’ என்ற கருத்துருவாக்கத்தில் அரசியலைக்காட்டிலும் சமூக, இலக்கிய செய்பாடுகளே அதிக பங்கினை வகித்துள்ளது. ஈழத்து இலக்கியத்தின் ஒரு கூறாக ‘மலையக இலக்கியம்’ நோக்கப்படும் அளவுக்கு அது தனித்துவத்தைக் கொண்டுள்ளது. ஊடகத்துறையும் மலையகம், மலையகத்தமிழர்கள் என்ற சொல்லாடலை பயன்படுத்தி அந்த மக்களை சுட்டிக்காட்டுகின்ற நிலைமை பரவலாகவே வந்துவிட்டது. இத்தகைய செய்பாடுகளின் விளைவுகளாக ஆரம்ப காலங்களில் ‘தொழிலாளர்’ என்ற சொல்லாடலோடு இயங்கிய அரசியல், தொழிற்சங்க இயக்கங்கள் கூட மலையகம் என்ற சொல்லைப் பயன்படுத்த (உதாரணம்: மலையக மக்கள் முன்னணி) அது இன்னும் புதிய அர்த்தத்தையும்; புதிய எல்லைகளையும் அடையத்தொடங்கியது. இது இயல்பாகவே நடைபெற்று வந்திருக்கக்கூடிய ஒன்று.
தற்போது மலையகம் சார்ந்த உரையாடல்கள் இடம்பெறும் வெளிகளில் எல்லாமே அவர்கள் மலையகத்தமிழ்கள் என்று அழைப்பதா அல்லது இந்திய வம்சாவளி தமிழர்  என்று அழைப்பதா எனும் வாதப்பிரதிவாதங்கள் கிளம்பிவிடுகின்றன. அது பெரும் சர்ச்சைக்குரிய விடயமாகவும் விவாதமாகவும் பல சந்தர்ப்பங்களில் அமைந்து விடுகின்றன. இதற்கான காரணம் தம்மை மலையக மக்கள் என அழைத்துக்கொள்ளும் இந்த மக்கள் அவ்வாறு மலையக மக்களாகவே தம்மை பதிவு செய்து கொள்ளும் ஏற்பாடுகள் எதுவும் இல்லை. ஆட்பதிவின்போதோ, சனத்தொகை கணக்கெடுப்பின்போதோ மலையகத்தமிழர்கள் எனத்தம்மை பதிவு செய்தகொள்ளும் நிலைமை இல்லை. எனவே தம்மை இந்திய வம்சாவளியினர் என அழைத்துக்கொள்வதில் அல்லது பதிந்துகொள்வதில் நாட்டமில்லாத மலையக மக்கள் அவர்களை ‘இலங்கைத் தமிழர்’ என பதிவு செய்து வருகின்றனர். இலஙகைத் தமிழர்கள் என்பதற்கு உள்ள உண்மையான அர்த்தம் அவர்கள் பூர்வீக தமிழர்கள் (வடக்கு கிழக்கு வாழ்) என்பதாகும். எனவே புள்ளிவிபரங்கள் அடிப்படையில் இலங்கையில் வாழ்கின்ற மலையக மக்களின் அளவு தொடர்பான குறிகாட்டி மாற்றமடைகின்றது. இந்த நிலை இலங்கைத்தமிழர்கள் எனும் அளவிலும் மாற்றத்தை எற்படுத்துகின்றது. எனவே உத்தியோகபூர்வமாக இலங்கையில் கிடைக்கப்;பெறுகின்ற புள்ளிவிபரங்களுக்கும் உண்மையான மலையக மக்களின் எண்ணிக்கைக்கும் ஒரு பாரிய இடைவெளி காணப்படுகின்றது. 
மலையக மக்களை இந்திய வம்சாவளியினர் என்று அழைக்கவேண்டும் என வாதிட்டு நிற்போர் பாரம்பரிய விடயதானங்களை சுட்டிக்காட்டி அவர்களது அரசியல் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்கு அதுவே சிறந்தது என்றும் கருத்துக்களை முன்வைக்கின்றனர். இந்தியாவின் (தமிழகத்தின்) கலாசாரம் பண்பாட்டோடு தாம் இரண்டரக் கலந்திருப்பதாகவும் பரம்பரை வழியாக வந்த மரபினை மாற்ற முடியாது என்பதும் அவர்களது வாதம். 
மறுபுறம் தமிழகத்தில் (இந்தியாவில்) இருந்து இலங்கைக்கு பிரித்தானியர் அந்த மக்களை அழைத்துவந்தபோது இந்தியா காட்டிய பொறுப்புடைமை அதேபோல ஸ்ரீமா - சாஷ்திரி ஒப்பந்தம் உள்ளடங்களாக பல்வேறு சந்தர்ப்பங்களில் அந்த மக்களை திரும்பவும் இந்தியாவுக்கு (தமிழகத்துக்கு) பெற்றுக்கொண்டபோதும் அவர்களின் மறுவாழ்வுக்காக இன்றுவரை எடுத்த முயற்சிகள் தொடர்பிலும் இந்தியா காட்டிய, காட்டிவரும் பொறுப்புடமை தொடர்பிலும் நாம் சிந்திக்க வேண்டியுள்ளது. 
ஒரு புறம் இலங்கையில் இன்றுவரை சட்டரீதியாக இந்த மக்கள் ‘இந்திய வம்சாவளி மக்கள்’ என அழைக்கப்படும் அதே வேளை இந்தியாவுக்கு திருப்பியழைக்கப்பட்ட (சட்டரீதியான ஒப்பந்தப்படி இந்தியா ஏற்றுக்கொண்ட) மக்கள் இன்றும் தமிழ்நாட்டில் ‘சிலோன்காரர்கள்’ என்று அழைக்கப்படுகின்ற அவலநிலை காணப்படுகின்றது. அவர்கள் இன்னும் இந்தியர்களாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. சாதாரண இந்திய குடிமகனுக்கு உள்ள உரிமைகள் இந்த திருப்பிபெறப்பட்ட இலங்கை மலையக மக்களுக்கு இல்லை என்பதை பல ஆய்வுகள் காலத்துக்கு காலம் எடுத்துக்காட்டியுள்ளன. அண்மைக்கால எனது ஆய்வு முயற்சிகளும் இந்த ‘தமிழ்நாட்டின் சிலோன்காரர்கள்’ நிலைமை அப்படியே தொடர்வதையே உறுதிபடுத்துகிறது.
இந்த நிலையில் தங்களை ‘இந்திய வம்சாவளி மக்கள்’ என்றா அல்லது ‘மலையக மக்கள்;’ என்றா தாங்கள் அழைத்துக்கொள்வது என்கின்ற வினாவுக்கு விடையாக அந்த மக்கள் தாமாகவே மலையக மக்கள் என அழைத்துக்கொள்வதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை என்றே எண்ணத் தோன்றுகிறது. (எல்லோரம் தமிழர்கள்தான் இதில் வேறுபாடு தேவையில்லை என்ற ‘முற்போக்கான’ கருத்துக்கள் பதியப்படும். அது குறித்து தனியாக விவாதிக்கலாம்)
அண்மைக்காலமாக இந்த மலையக தேசியம் குறித்த கருத்தாடல்கள் பல்வேறு மட்டங்களில் நடைபெற்றுவருகின்றன. அதில் முதன்மையாக மலையக இளம் சமூகத்தினரிடையே இந்த கருத்தாடல் மலையகத்திலும் தலைநகரிலும் இடம் பெற்றுவருகின்றமையை சொல்லவேண்டும். இரண்டாவதாக தமிழ்நாட்டில் ‘சிலோன்காரர்களாக’ப்பார்க்கப்படும் தாயகம் திரும்பிய மக்களிடையேயும் உள்நாட்டு யுத்தத்தினால் தமிழகத்துக்கு அகதிகளாகச் சென்று தற்காலிக முகாம்களில் வசிக்கும் மலையக மக்களிடையேயும்  இது குறித்த தேடல்கள் இடம்பெறுவதை அவதானிக்க முடிகின்றது. கருத்தரங்குகள், குறுந்திரைப்படங்கள், ஆய்வு மாநாடுகள் என அவர்கள் தங்களைப்பற்றிய தேடல்களையும் ஆய்வுகளையும் விசாலப்படுத்தியுள்ளனர். மூன்றாவதாக புலம்பெயரந்துவாழும் மலையகத் தமிழ் மக்களிடையே இந்த உணர்வு தற்போது மேல் எழும்பி வருவதனை அவதானிக்கலாம். ஐரோப்பா, கனடா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் இந்த கருத்தாடல்கள் இடம்பெறத்தொடங்கியுள்ளன. அண்மையில் லன்டனிலே இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் ‘மலையக மக்கள் - ஒரு நூற்றாண்டு துயர்’, ‘மலையக மக்கள் அங்கும்-இங்கும்’ (இலங்கையிலும் இந்தியாவிலும்) எனும் தலைப்புக்களில் பேராசிரியர் மு.நித்தியானந்தன் அவர்கள் ஆற்றிய உரைகள் குறிப்பிடத்தக்கன.
இத்தகைய வெளிகளில் கலந்தரையாடப்படும் மலையக மக்கள் தங்களை மலையக தேசியமாக நிறுவிக்கொள்வதில் உள்ள சவால்கள் குறித்தே இப்போது பார்க்கப்படுகின்றது. இந்த சவால்களை பொருளியல் மற்றும் புவியியல் கண்ணோட்டத்தோடு ஒப்பு நோக்குவது பொருத்தப்பாடுடையது. பொருளியல் ரீதியாக ‘தேயிலை’ மற்றும் ‘இறப்பர்’ பயிர்ச்செய்கைகளுக்காக தமிழகத்தில் இருந்து அழைத்துவரப்பட்ட இந்த மக்கள் ‘கூலிகள்’ என்றே அழைக்கப்பட்டனர். (கள்ளத் தோணிகள், வடக்கத்தியான் என்றும் அழைக்கப்பட்டனர்) பின்னர், பெருந்தோட்டத்தொழிலாளர்கள், இந்தியதமிழர்கள், இந்திய வம்சாவளி தமிழர் என மாற்றம் கண்டு இன்று மலையக மக்கள் என்று அழைக்கப்படுகின்றனர். மலையக மக்கள் என்ற சொல்லில் வரும் ‘மலை’யை புவியில் சார்பு அடிப்படையில் பார்த்து பெரும்பாலும் மலைப்பாங்கான பகுதிகளில் வாழ்ந்த மக்களை மட்டும் சுட்டுவதாக பொருட்கொள்ளப்பட்டதோர் நிலைமையை அவதானிக்க முடிகின்றது. (தமிழகத்தில் இதனை இலங்கையில் மலைவாழ் மக்கள் என அர்த்தம் கொள்ளும் நிலைமை காணப்படுகிறது. இது முற்றிலும் தவறான ஒரு பார்வை).
 அதே நேரம் பொருளாதார ரீதியாக இலங்கையில் ‘இறப்பர்’ பயிர்ச்செய்கை ஒரு வீழ்ச்சிப்போக்கை பதிவ செய்ய அந்த தொழில் தறை சார்ந்து வாழ்ந்த மக்களும் ‘மலையக மக்கள்’ என்பதற்குள் உள்வாங்குவதில் ஒரு வீழ்ச்சிப்போக்கை அவதானிக்ககக்கூடியதாகவுள்ளது. அதனை இரண்டுவிதமாகப் பார்க்கலாம். ஒன்று, தேயிலைத்தொழில்தறைசார்ந்த பிரதேசங்களில் வாழும் மக்கள் தாழ்நிலப்பிரதேசங்களில் (அண்சமவெளிப் பிரதேசம்) வாழும் இந்திய வம்சாவளி மக்களை மலையக மக்களாக கணக்கிலெடுத்துக்கொண்டபோதும் ‘இறப்பர்’ தொழில் சார் நிலப்பரப்பில் இருந்து தாம் ‘மலையக மக்கள்’ என்கின்ற குரல் பலமாக ஒலிக்காமை. இரண்டாவது, ‘மலையகம்’ என விளிப்பதில் முன்னிற்கும் மலையக இலக்கிய பரப்;பில் இருந்து ‘இறப்பர்’ துiறாசர் இலக்கிய படைப்புகள் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவுக்கேனும் வெளிவராமை. இது மலையக இலக்கிய செல்நெறியில் காணப்படுகின்ற ஒரு குறைபாடாகக்கூட கொள்ளமுடியும். தேயிலை மற்றும் இறப்பர் இரண்டு துறைகளிலுமே தொழிலாளர்கள் அல்லது பாட்டாளிவர்க்கத்தினரே உள்வாங்கப்பட்டுள்ளபோதும் தேயிலை தொழில் சார் தொழிலாளர்களின் பிரச்சினைகளை பேசிய அள்வுக்கு இறப்பர் தொழில் சார் பாட்டாளிமக்களின் பிரச்சினைகளை மலையக இலக்கியம் பதிவு செய்யவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது. இதற்கான காரணங்களை கண்டறியவும் மலையகத்தேசியத்துக்குள் அவர்கள் அகப்படாமல் செல்வதை தவிர்ப்பதற்கும் தனியான ஆய்வு முயற்சிகள் அவசியமாகின்றன. 
ஏற்கனவே கூறியபடி புவியியல் அடிப்படையில் பார்க்குமிடத்து தற்போது நுவரெலியா பதுளை  மாவட்டங்கள் மாத்திரமே ‘மலையகம்’ என்றதும் மனக்கண் முன் விரியும் ஒரு தன்மை காணப்படுகின்றது. காரணம் தற்போது ‘இறப்பர்’ தொழில் துறை அனுபவித்த அதே வீழ்ச்சிப்போக்கை தேயிலைத் தொழில் துறையும் அடையத்தொடங்கியுள்ளது. பயிர்ச்செய்கைக்கு பயன்படாத நிலங்கள் ‘பகிர்ந்தளிக்கும்’ ‘வேலைத்திட்டம்’ தற்போது ஆரம்பித்தாயிற்று. ஏற்கனவே, இறப்பர் தொழில் சார் மாவட்டங்களான களுத்துறை, கேகாலை மலையக கருத்துருவாக்கத்தில் பின்தள்ளப்பட்டு தற்போது தேயிலை மருவிவரும் மாத்தளை, கண்டி, மொனராகலை, இரத்தினபுரி என மலையகம் என்பதற்குள் அடங்ககக்கூடிய பரப்பெல்லை குறைந்து வருவதனை அவதானிக்கலாம். அரசியல் ரீதியாக மலையக மக்களின் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் இன்றைய நிலையில் நுவரெலியா மாவட்டத்துக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதை அவதானிக்கலாம்.
ஒரு புறம் ‘இந்திய வம்சாவளி’ என்றே பதியவேண்டும் என்போர் முன்னெடுக்கும் அதற்கான நிகழ்ச்சி நிரலோடு ஒப்பிடும்போது ‘மலையகம்’ என்பதனை நிறுவிக்கொள்வதில் உள்ள சவால்கள் மிகப்பெரியதாகவே தெரிகிறது. ஏனெனில் சட்டரீதியாக தற்போதும் ‘இந்திய வம்சாவளி’ (இந்தியான தெமள) என்றே பதிவு செய்துகொள்ளும் சந்தர்ப்பமே உள்ளது. ஒருவர் ‘மலையகத்தமிழர்’ என தன்னை இலங்கையில் பதிவு செய்துகொள்ள விரும்பினால் கூட அதற்கான ஏற்பாடுகள் எதுவுமில்லை. அந்த எற்பாட்டினைச் செய்யும் பாரிய பொறுப்பு மலையக தேசிய  முன்னெடுப்பாளர்களால் கையில் உள்ளது. அதனைத்தொடர்ந்து புவியியல் பார்வையைக் கடந்து ‘மலையகம்’ என்பது ‘மலையை’ மாத்திரம் குறித்து நிற்கும் சொல்லாக அல்லாமல் அது கருத்தியல் ரீதியாக தற்போது மாற்றம் பெற்றுவரும் இந்திய வம்சாவளி தமிழ் மக்களை குறிக்கும் சொல்லாக உள்ளமையை பரப்புரை செய்யவேண்டியள்ளது. அரசியல், தொழிற்சங்க சமூக, கலை, இலக்கிய பண்பாட்டுத்தளங்களில் சற்றே தள்ளி நிற்கும் மலையக மக்கள் வாழ் தாழ்நில மாவட்டங்களை உள்வாங்கிக்கொள்ளும் பொறுப்பு அந்தந்த துறைசார் தரப்பினரின் தேவையாகவுள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக தங்களது இன, மொழி, மத, கலாசார, பண்பாட்டு அம்சங்களில் இருந்து விலகிச்செல்லும் அல்லது விலகிச்செல்ல நிர்ப்பந்திக்கப்பட்டுள்ள தாழ்நிலப்பிரதேச இந்திய வம்சாவளி மக்கள் தங்களை மலையக மக்களாக அழைத்துக்கொள்வதில் அவர்களாகவே அக்கறைகொள்ளுதல் அதிகம் வேண்டப்படுகின்றது.
(இது ஒரு உரையின் கட்டுரைவடிவமே. கட்டுரையாகவே எழுதப்பட்டிருக்குமிடத்து. மேலே பதியப்பட்டுள்ளவை உரையின் சாராம்சம் மட்டுமே. இந்த கட்டுரை வடிவில் அடங்காத பிற சில விடயங்களும் உரையிலே அமைந்தன. அது கருத்தாடல் சூழல் கருதிய விடயங்கள் என்பதனால் இந்த பதிவில் சேர்த்துக்கொள்ளவில்லை. அதேநேரம் உரையில் அடங்காதபோதும் இந்த பதிவில் சேர்த்துக்கொள்ளவேண்டும் என தோன்றிய (தட்டச்சு செய்யும்போது) விடயமொன்றை இங்கு மேலதிகமாகக் குறிப்பிட விரும்பகிறேன். அதாவது, இந்திய வம்சாவளி மக்கள் என்பதற்குள் கொழும்பு நகர் வாழ் சிறு தோட்ட மக்களும் அடங்குவர். இவர்கள் மிக நீண்ட நாளைக்கு முன்னரே இந்திய வம்சாவளி என்ற நிலை மாறி இலங்கைத்தமிழர்கள் எனப் பெதிவு செய்யப்பட்டுள்ளனர். ஆனால் இன்னும் இந்திய பிணைப்பு அவர்களிடையே காணப்படுகின்றது. அதே நேரம் அவர்கள் மலையக மக்களாக உள்வாங்காமல் போனமைக்காகன காரணம் சுவாரஷ்யமானது. ஆரம்ப காலங்களில் இந்த மக்களையும் உள்ளடக்கியே இந்திய வம்சாவளி தமிழரின் கணக்கெடுப்பு அமைந்துள்ளது. பின்னாளில் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தொழிற்சங்க கட்டமைப்புக்குள் உள்வாங்கப்பட அவர்களை நோக்கி மட்டமே தொழிற்சங்க இயக்கங்கள் செயற்படத்தொடங்கின. சிறுதோட்டங்களில் வசிக்கும் இந்த மக்கள்  முறைமைப்படுத்தப்படாத தொழில்களில் (தறைமுகத் தொழிலாளர்கள், நகரசுத்தி தொழிலாளர்கள், மற்றும் சிப்பந்திகள்) ஈடுப்பட்டதனால் தொழிற்சங்ககங்கள் தமக்குரிய சந்தாவை இவர்களிடத்தில் இருந்து பெற்றுக்கொள்வதில் உள்ள சிக்கல்கள் காரணமாக இவர்கள் அந்த தொழிற்சங்க கட்டமைப்பில் இருந்து கழற்றிவிடப்பட்டவர்களானார்கள். பின்னாளில் தொழிற்சங்க கட்டமைப்பின் அடிப்படையில் வளர்ந்துவந்த மலையக அரசியல் செல்நெறியிலும் இவர்கள் இணைத்துக் கொள்ளப்படுவதற்கான வாய்ப்புகள் அமையவில்லை. அந்த நிலைமை இன்று வரை தொடர்வது துரதிஷ்டவசமானது. நான் உரையிலே குறிப்பிட்ட இறப்பர் தொழில்துறைசார்; மக்கள் எவ்வாறு விலகிச் செல்கிறார்கள் என்பதற்கு தலைநகர் சிறுதோட்ட மக்கள் எவ்வாறு விலகிச்சென்றுள்ளார்கள் என்பது சான்றாக அமைகிறது)

Monday, September 17, 2012


கவாத்துக்குத் தப்பிய செடிகள்! மலையகத் தமிழர்களின் நூறாண்டு சோகம்
[ சனிக்கிழமை, 15 செப்ரெம்பர் 2012, 05:34.45 AM GMT ]
------------------------------------------------------------------------------------------
இலங்கைக்குத் தேயிலை பறிக்க தமிழக மக்களை ஏற்றிச் சென்று மூழ்கிப்போன 'ஆதிலட்சுமி’ கப்பலை எத்தனை பேருக்குத் தெரியும்? மலைகளில் ஏறிவிட்டாலும் வாழ்க்கையில் கரை ஏற முடியாத ஏழை மக்களின் துயரம், சொல்
லால் வடிக்க முடியாத சோகம்.
டைட்டானிக் கப்பலில் சென்ற ஆயிரத்துச் சொச்சம் பேர் கடலில் மூழ்கிப் போனது பற்றி இதுவரை மூன்று திரைப்படங்கள் வெளிவந்துவிட்டன. மூவாயிரம் புத்தகங்கள் வந்துவிட்டன.

இலங்கைக்குத் தேயிலை பறிக்க தமிழக மக்களை ஏற்றிச் சென்று மூழ்கிப்போன 'ஆதிலட்சுமி’ கப்பலை எத்தனை பேருக்குத் தெரியும்? மலைகளில் ஏறிவிட்டாலும் வாழ்க்கையில் கரை ஏற முடியாத ஏழை மக்களின் துயரம், சொல்லால் வடிக்க முடியாத சோகம்.

அவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கிறது என அறிய சமீபத்தில் இலங்கை சென்று வந்தேன். அப்போதைய மனவோட்டம்தான் இது.

இலங்கையில் 2-ம் தேதி இறங்கினேன். தமிழர்ப் பகுதிகளான மட்டக்களப்பிலும் அனுராதபுரத்திலும் 8-ம் தேதி தேர்தல் நடக்க இருந்ததை ஒட்டி எல்லாக் கட்சியினரும் மேடைகளில் முழங்கிக்கொண்டு இருந்தனர்.

தமிழகத்தில் சுற்றுப்பயணம் வந்த சிங்களவர்களைத் திருப்பி அனுப்பிய செய்தி அந்தப் பிரசார மேடைகளில் விவகாரம் ஆகிவிட்டது.

லட்சக்கணக்கில் தமிழர்களைக் கொன்று குவித்த... அந்த இரத்தம் காயாத நிலையில் ராஜபக்ச, 'மக்கள் இனவாதத்தை விட்டுவிட வேண்டும்’ என்று தமிழில் வேண்டுகோள் வைத்தபடி இருந்தார்.

கடையடைப்பு செய்ய இருப்பதாகத் தகவல்கள். இன விரோதம் தூண்டிவிடப்படுமானால், அது இரண்டு பக்கத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும். ஒவ்வொரு திருப்பத்திலும் புத்தர் சிலைதோறும் துப்பாக்கியுடன் நிற்கும் ஆர்மிக்காரர்கள் ஏற்படுத்தும் மிரட்சி போதாதென்று இது வேறு. அசம்பாவிதம் எதுவும் நடக்கவில்லை.

தேர்தல் நேரம் என்பதாலேயே அடக்கிவாசிக்கிறார்கள் என்று பேசிக்கொண்டனர்.

கொழும்பிலிருந்து ஹட்டன் மலையகப் பகுதி சுமார் 150 கி.மீ. சரிபாதி சிங்களவரும் தமிழரும் கலந்து வாழும் பகுதி.

தேயிலைத் தோட்டத்தில் நண்பரின் வீட்டில் மூன்று நாட்கள் தங்கி இருந்ததால், காலையில் எழுந்ததும் தோட்ட வேலைக்கு செல்லும் மக்களைச் சந்திக்க முடிந்தது.

முதுகில் மூங்கில் கூடைகளுடன் தேயிலைத் தோட்டங்களில் பெண்கள் ஏறிச் சென்றுகொண்டு இருந்தார்கள். சேற்றில் கால் சறுக்கிவிடாமல் இருப்பதற்காக அவர்கள் கையாளும் உத்தி செருப்புப் போட்டுக்கொள்ளாமல் இருப்பதே.

மழையில் நனையாமல் தப்பிக்க பிளாஸ்டிக் கோணிப் பைகள். கடந்த 200 வருடங்களில் ஏற்பட்ட எந்த விஞ்ஞான முன்னேற்றமும் அவர்களின் இந்த உத்திக்கு மேல் உதவவே இல்லை.

குளவி கடித்தால் சுண்ணாம்பு, இரத்தம் உறிஞ்சும் அட்டையை அகற்றுவதற்கு மூக்குப் பொடி... இதற்கு மேல் எந்த வைத்தியமும் இல்லை.

தினம் 20 கிலோ வரை கொழுந்து பறிக்க வேண்டும் என்பது அவர்களுக்கு எழுதப்படாத கட்டளை. மாதத்தில் 17 நாட்கள் வேலை பார்த்தாக வேண்டும்.

உடல் நிலை சரியில்லாமல் படுத்துவிட்டால் அவர்களுக்குக் கொடுக்க வேண்டிய ஒரு நாள் சம்பளத்தைப் பாதியாக்கி, செய்த நாளுக்கான கூலியைக் கணக்கிட்டுக் கொடுப்பார்கள்.

உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் ஈழ மக்களுக்கும் உணவுக்காக அல்லல்படும் மலையக மக்களுக்கும் வாழ்க்கை வித்தியாசம் ஏராளம்.

காலை முதல் கொட்டும் மழையில் கொழுந்து பறித்துவிட்டு குளிரில் வெடவெடத்து நீரில் ஊறிப்போன கை கால்களோடு அந்தி சாயும் நேரத்தில் அவர்கள் வீடு திரும்புகிறார்கள்.

அதன் பிறகு அவர்கள் சமையல் செய்கிறார்கள். குழந்தைகளைக் கவனிக்கிறார்கள்... கணவனைக் கவனிக்கிறார்கள்.

ஆண்களுக்கு வேறு சில தோட்ட வேலைகள்... தேயிலை நாற்றுப் பராமரிப்பு,மருந்து தெளித்தல், கானு வெட்டுதல், கவாத்து செய்தல், களை வெட்டுதல், குழி தோண்டுதல் என்று தினம் தினம் வேலைகள் வேறுபடும்.

அவர்களில் சிலரின் களைப்பைப் போக்க அதிவிசேஷமான பொருள் ஒன்று மாலை ஆனதும் கைகொடுக்கிறது. அங்கு விற்பனையாகும் சாராயத்தின் பெயர் அதிவிசேஷம்.

நான் சந்தித்த தோட்டத்து மக்கள் எல்லோரும் பேசிவைத்துக்கொண்டதுபோல ஒரு கேள்வியைக் கேட்டார்கள். ''எங்களைப் பற்றி ஏன் தமிழக அரசியல் தலைவர்கள் பேசுவதில்லை?''

மலையகத்தில் இருக்கும் இந்த 15 லட்சம் பேரின் பிரச்சினைகள் வேறு. இவர்கள் இந்தியாவில் இருந்து பிழைப்புக்காக கடந்த 200 ஆண்டுகளில் இடம் பெயர்ந்தவர்கள்.

இலங்கைத் தமிழர்கள் என்று அவர்களைப் பொதுமைப்படுத்துவதில் ஒரு நியாயமும் இருப்பதாகத் தெரியவில்லை.

குழந்தை பெற்ற பெண்கள் மூன்று மாதங்களுக்குள் தேயிலை பறிக்கச் செல்ல வேண்டி இருந்தது. குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள 'பிள்ளை மடுவம்’ என்று ஒன்று தோட்டத்தில் உண்டு.

இன்றைய 'கிரீச்’சின் பண்படாத நூற்றாண்டு வடிவம் அது. ஒரு கூடாரத்தில் வரிசையாகத் தொட்டில்கள் தொங்குகின்றன. குழந்தையைப் பார்த்துக்கொள்ள ஆயாக்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

டார்வின் சித்தாந்தப்படி இயற்கைத் தேர்வு செய்த குழந்தைகள் மட்டுமே இங்கு தப்பிப் பிழைக்கும். இப்போது அங்கு, படித்த பெண்களை வேலைக்கு வைத்திருக்கிறார்கள்.

ஒரு முதியவர், மகனும் மருமகளும் இறந்து போய்விட்டதால் தன் இரண்டு பேரக் குழந்தைகளையும் தான்தான் வேலைக்குப்போய் காப்பாற்றி வருவதாகச் சொன்னார்.

இதுபோன்ற சோகக் கதைகள் வீட்டுக்கு வீடு இருக்கின்றன. வறுமை, நோய், சாதி இழிவு, வந்தேறிகள் என்ற அவமானம் எல்லாம் கலந்த கதைகள் அவை.

காடாய்க்கிடந்த இடத்தில் 200 ஆண்டு உழைப்பில் தோட்டம் உருவாக்கி தங்கள் இரத்தத்தையும் வேர்வையையும் இட்டு தேயிலை வளர்த்தவர்களுக்கு அதைக் குடிக்கும் அனுமதி இல்லை. சோகத்தின் உச்சம் இது.

மலையக மக்களோடு இருந்ததில் ஒரு விஷயம் புரிந்தது. இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் அவர்கள் இந்தியத் தமிழர்களாகத்தான் இருக்கிறார்கள்.

அவர்கள் பேச்சுநடை மாறவில்லை. உணவில் கூட மாற்றம் இல்லை. இனக் கலவரம் வெடித்தபோதெல்லாம் சுலபமாகத் தாக்கப்பட்டவர்களும் இவர்கள்தான்.

வெகு சில தோட்டத் தமிழர்களின் வாரிசுகள் மட்டுமே படித்து வேறு வேலைக்குச் சென்று குடும்பத் தரத்தை உயர்த்தி இருக்கிறார்கள்.

சிலர் ஆசிரியர் வேலைக்குப் போவதைப் பார்க்க முடிந்தது. அவர்கள் பேன்ட், சட்டை அணிந்து நகரத்துக்குச் சென்று வருகிறார்கள்.

தோட்டத்தைச் சுற்றித் திரிந்த இரண்டு நாட்களில் நண்பர் ஒரு மரத்தைக் காட்டி, ''இது என்ன மரம் என்று தெரிகிறதா?'' என்று கேட்டார்.

என் விவசாய அறிவுக்கு எட்டாத மரம். ''தெரியவில்லை'' என்றேன்.

இது தேயிலைச் செடிதான். தேயிலைச் செடி என்றால் மூன்று அடிக்கு மேல் வளரவிடாமல் அவ்வப்போது கவாத்து செய்ய வேண்டும்.

அப்போதுதான் மக்களால் கொழுந்து பறிக்க முடியும். இது கவாத்துக்குத் தப்பிவிட்ட செடி... மரமாக வளர்ந்துவிட்டது''

ஆசிரியர் வேலைக்குச் சென்றுகொண்டிருக்கும் சிலரும் அப்படி கவாத்துக்குத் தப்பிய செடிகள்தான்! 

Thursday, September 13, 2012


மலையக தோட்டத் தொழிலாளர்கள்




மலையகத் தொழிலாளர்கள் அல்லது மலைய
தோட்டத் தொழிலாளர்கள் என்போர்
இலங்கையின் மத்திய மலைப்
பிரதேசங்களில், தோட்டத்
தொழிலாளர்களாக தொழில்
புரிவோரை குறிக்கப் பயன்படும்
ஒரு சொற்றொடராகும். இருப்பினும்
இலங்கையின் மத்தியப் பிரதேசம்
மட்டுமல்லாமல், வடக்கு கிழக்கு அல்லாத
அனைத்து பிரதேசங்களிலும்
தோட்டத்தொழிலாளர்களாக தொழில்
புரிவோரையும் "மலையகத்
தொழிலாளர்கள்" அல்லது "தோட்டத்
தொழிலாளர்கள்" என்று அழைப்பதுண்டு.
இலங்கையில் மலையகத் தொழிலாளர்கள்
என்போர், பிரித்தானியரின் ஆட்சியின்
போது பெருந்தோட்டப் பயிர் செய்கைக்காக
கூலி தொழிலார்களாக
தென்னிந்தியாவில்
இருந்து அழைத்து வரப்பட்டவர்களாகும்.
அவர்களில் அதிகமானோர் தமிழகத்தில்
இருந்து அழைத்து வரப்பட்ட
தமிழர்களாகும். இருப்பினும்
தென்னிந்தியாவின் பிற மாநிலங்களான
மலையாளம், மற்றும் தெலுங்கு, கன்னடா
போன்றவர்களும் அவற்றில் உள்ளடக்கமாகும்.
அதேவேளை தென்னிந்தியாவில்
இருந்து அழைத்து வரப்பட்ட
பல்வேறு மாநிலத்தவரும் தற்போது
இந்திய வம்சாவளித் தமிழர்களாகவே
இனங்காணப்படுகின்றனர்
என்பது குறிப்பிடத்தக்கது.
மலையாளத்தவர்கள் தமிழ் பேசினாலும்,
தங்களது மலையாள
வழக்குகளை பேணுவோராக
இருப்பதனையும், கேரளாவில்
தமது உறவுகளுடன்
உறவு நிலையை தொடர்ந்து
பேணிவருவோரும் இருப்பதும் சில
இடங்களில் காணக்கூடியதாக உள்ளது.
அதேவேளை இலங்கை தோட்டத்
தொழிலாளர்களாக சிங்களவர்களும்
உள்ளனர்.
இவர்களைத் தவிர, இலங்கை தமிழர்களான
வட கிழக்கு தமிழர்களும், முஸ்லீம்களும்
தோட்டத் தொழிலாளர்களாக எங்கும்
பணிப்புரியவில்லை என்பது
குறிப்பிடத்தக்கது.
அதேவேளை தோட்டங்களில் அதிகாரிகளாக
பணிப்புரிந்தோர் உளர்.
சிங்கள தோட்டத் தொழிலாளர்கள்
இலங்கையில் 1977ம் ஆண்டு ஆட்சியின்
பின்னர் தோட்டங்களை பிரித்து, அதன்
காணிகளை சிங்களவர்களுக்கு
பகிர்ந்தளிக்கும் திட்டங்கள் தோன்றத்
தொடங்கியதன் பின்னர். தோட்டங்கள் பல
மறைந்து, சிங்கள கிராமங்களாக மாற்றம்
அடையத் தொடங்கின. அக்காலப்பகுதிகளில்
சிங்கள தோட்டத் தொழிலாளர்களுக்கும்
காணிகள் கிடைக்கப்பெற்றதால், அவர்கள்
தோட்டத் தொழிலாளர்கள் எனும் நிலையில்
இருந்து கிராம மக்களாக மாற்றம்
பெற்றுவிட்டனர். இருப்பினும் இன்னும்
சில இடங்களில், மிக சொற்பமான அளவில்
தோட்டத் தொழிலாளர்களாக சிங்களவர்கள்
இருப்பது காணக்கூடியதாக உள்ளது.
தோட்டங்கள் பகிர்ந்தளித்தல்
தோட்டங்கள் "கொலனிமயமாக்கல்" எனும்
பெயரில் பகிர்ந்தளிக்கும் திட்டம்
1977ம் ஆண்டு தொடங்கியது.
அப்போது ஆட்சிக்கு வந்த ஐக்கிய
தேசியக் கட்சி
தமது ஆதரவாளர்களுக்கு தோட்டங்களை
பிரித்து காணிகள் வழங்கி கிரமமயமாக
மாற்றினர். அதன் பின்னர் வந்த
ஆட்சியாளர்களும்
இதே முறைமையைதொடர்ந்ததால்
இலங்கையின் மேற்கு மற்றும்
தெற்கு பகுதிகளில் இருந்த
அனைத்து தோட்டங்களுமே
சிங்களவர்களுக்கு பிரித்து
கொடுக்கப்பட்டு சிங்களக் கிராமங்களாக
மாறிவிட்டன. தற்போது மத்தியப்
பிரதேசத்தில் மட்டுமே அதிகமான
தோட்டங்கள் உள்ளன.
இவ்வாறு தோட்டங்களை பிரித்து காணிகள்
வழங்கியப் பகுதிகளில் ஆட்சிக்கு வந்த
கட்சிக்கு ஆதரவாக இருந்த,
அதேவேளை வாக்குரிமை இருந்த
ஒரு சில தமிழர்களுக்கு காணிகள்
கிடைத்துள்ளன. இருப்பினும்
குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவாக
இருந்தும் வாக்குரிமை அற்றவர்களாக
இருந்த தமிழர்களுக்கு காணிகள்
வழங்கப்பட வில்லை.
அதேவேளை அக்காலப்பகுதியில்
அதிகமான மலையகத்
தமிழர்களுக்கு வாக்குரிமை
இருக்கவில்லை என்பது
குறிப்பிடத்தக்கது.
இதனால் தோட்டங்கள்
பிரித்து சிங்களவர்களின்
காணிகளாகியதும், அங்கே தோட்டத்
தொழிலைத் தவிர வேறு தொழில்கள்
தெரியாத மலையகத் தமிழர்கள்,
சிங்களவர்களின் காணிகளில் கூலித்
தொழிலாளர்களாக வேலைச் செய்யும்
நிலைக்கு தள்ளப்பட்டனர்.
மலையகத் தமிழர் எதிர்நோக்கியப்
பிரச்சினைகள்
பெருந்தோட்டங்களில் கூலித்
தொழிலாளர்களாக தொழில் புரிந்தப்
போதும், தமிழர்கள் அந்தந்த தோட்டங்களில்
ஒருங்கிணைந்து வாழ்ந்தனர்.
எனவே தமது அடையாளங்களை
பேணிக்கொள்பவர்களாக இருந்தனர்.
தோட்டங்கள் பிரிக்கப்பட்ட சிங்கள
கிராமங்களாக மாறியப் பின்,
அதே கிராமத்தில் சிங்களவர்களின்
காணிகளில் கூலி தொழிலாளர்களாக
பணிப்புரிந்தோர் கிட்டத்தட்ட
அடிமை நிலைக்கே தள்ளப்பட்டனர்.
அவர்களது வாழ்க்கை மிகவும் அச்சமான
சூழ்நிலைக்கே இட்டுச் சென்றது.
காலப்போக்கில் தமிழர்
தனித்தனியே பிரியும்
நிலை தோன்றியதுடன்,
தமது குழந்தைகளுக்கு தமிழ்
வழி கற்பிக்கும் நிலை இல்லாத
சூழ்நிலையில் சிங்களப்
பாடசாலைகளுக்கு அனுப்பும்
நிலை தோன்றியது. அப்பாடசாலைகளிலும்
தமிழர் எனும் அடையாளத்துடன் சிங்களப்
பாடசாலைகளில் கல்வி கற்கும்
போது ஏற்படும் இன்னல்களால்,
தமது அடையாளத்தை மறைத்து வாழ்வதே
அவர்களுக்கு பாதுகாப்பானது எனும்
நோக்கில், வீட்டுக்கு வெளியில் தமிழ்
பேசாத ஒரு சமூகமாக,
மாற்றமாகி தற்போது தென்னிலங்கைப்
பகுதிகளில் வாழும் பலர்
தம்மை சிங்களவர்களாக அடையாளம்
காட்டி வருகின்றனர்
அல்லது பாவனை செய்து வருகின்றனர்.
பிறக்கும் குழந்தைகளுக்கும் சிங்களப்
பெயர்களை சூடிக்கொள்பவர்கள்
பலரை தென்னிலங்கையில் காணலாம்.
முஸ்லீம்களின் ஆதரவு
தோட்டங்கள் பிரித்து கொடுக்கப்பட்டு,
சிங்கள கிராமங்களாக மாறியதன்
பின்னர், தமது சமூக அடையாளங்களையும்
ஒருங்கிணைந்து பேண முடியாத
சூழ்நிலையில், தமிழ் பாடசாலைகளும்
இல்லாத நிலையில், சிங்களப்
பாடசாலைகளுக்கு தமது பிள்ளைகளை
பெற்றோர் அனுப்பி வந்த அதேவேளை,
முஸ்லீம்கள் செரிந்து வாழும் ஊர்களில்
முஸ்லீம் பாடசாலைகள் இருப்பதால்,
அவை தமிழ் வழி கல்வி கற்பிக்கும்
பாடசாலைகள் என்பதால்,
அப்பாடசாலைகளிற்கு தமது குழந்தைகளை
அனுப்பு தமிழ் வழி கற்கும் வாய்ப்பைப்
பெற்றனர். இவ்வாறான நிலையில் முஸ்லீம்
சமூகம் மலையகத்
தமிழர்களுக்கு ஆதரவாக உதவிய இடங்கள்
பலவற்றை அறியலாம். இந்த உறவின்
காரணமாக ஓரளவான மலையகத் தமிழர்கள்
இஸ்லாம் மார்க்கத்தை கடைப்பிடிக்கத்
தொடங்கியதுடன், முஸ்லீம்களாக மாறினர்.
குறிப்பாக தென்னிலங்கை மற்றும்
மேற்கு பிரதேசங்களில் இவ்வாறான
நிகழ்வுகள் பல
இடம்பெற்றிருப்பதனை காணலாம்.
மலையகத் தமிழரின் வாழ்நிலை
தென்னிந்தியாவில் இருந்து ஆங்கிலேயர்
ஆட்சி காலத்தில்
அழைத்து வரப்பட்டவர்களான
இவர்களுக்கு அக்காலம் முதல்
இன்று வரை போதிய ஊதியம்
இன்றியே வேலை வாங்கப்படுகிறது.
ஒப்புநோக்கில் எந்தவித
அடிப்படை வசதிகளும்
அற்றவர்களாகவே இவர்கள் வாழ்கின்றனர்.
மிகவும் கடினமான தொழில் புரியும்
இவர்களுக்கு தமது அடிப்படை தேவைகளை
பூர்த்தி செய்வதற்கான ஊதியம் என்றாலும்
இல்லை. இலங்கையில் குறிப்பிட்ட
காலத்திற்கு முன்புவரை, இலங்கையின்
பிரதான வருமானமே பெருந்தோட்டப்
பயிர்செய்கையின்
ஊடாகவே கிடைக்கப்பட்டது. எனினும்
தற்போதும் இவர்கள் வாழும் பகுதிகள்
இவர்களுக்கு அடிப்படை வசதிகள்
எதுவும் அற்ற சமூகமாகவே உள்ளனர்.
ஆங்கிலேயர் ஆட்சியின் போது லயான் என
அழைக்கப்படும் குதிரைகளை அடைக்கும்
நீண்ட கொட்டில்களிலே இன்றும்
பெரும்பான்மையோனோரின்
வசிப்பிடங்களாக உள்ளன. அத்துடன்
அடிப்படை வசதிகள் எதுவும்
இவருகளுக்கு இல்லை. நூலகம்,
உடற்பயிற்சி மையம்,
விளையாட்டு மைதானம் போன்ற எதுவும்
அநேகமான இடங்களில் இல்லை. இன்னும் பல
தோட்டத் தொழிலார்களுக்கு மலசலக்கூட
வசதிகள் கூட இல்லை.
இவர்களது கடின உழைப்புக்கு வழங்கும்
ஊதியம் இவர்களது உணவுக்கே போதாத
நிலையில், பொருளாதார ரீதியில்
மிகவும் பின்னடைவில் உள்ளவர்களாக,
தமது உரிமைகளை கேட்டும் பெறும்
அல்லது தமது உரிமைகளே என்ன
என்று தெரியாத நிலையில் அதிகமானோர்
வாழ்கின்றனர். இவர்களுக்கான
அமைச்சர்களும் பெரிதாக
இவர்களது உரிமைகள் தொடர்பில்
ஒரு வரையரைக்கு மேலே குரல்
கொடுப்பதில்லை.
இவர்கள் கடுமையான தொழில் புரிவோர்
என்பதாலும், வெயிலில் காய்ந்து உடல்
கருத்தவர்களாகவும், பொருளாதார
ரீதியிலும் பின்னடைவில் உள்ளவர்கள்
என்பதாலும், தொடர்ந்தும்
அச்சத்திற்குள்ளேயே வாழ்பவர்கள்
என்பதாலும், சிங்கள சமூகத்தவரும்
ஏனைய பிற சமூகத்தவரும்
இவர்களை ஒரு அடிமை வர்க்கமாக
பார்ப்பதனையும் பல இடங்களில்
அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
இருப்பினும் அன்மையக் காலங்களில்
மலையகத் தமிழர்களும்
கல்விக்கு முன்னுரிமை கொடுத்தும்
மற்றும் பல்வேறு வணிகங்களில்
தம்மை ஈடுபடுத்தி வருவதனாலும்
முன்னேற்றமான சூழல்
உருவாகி வருகின்றது.
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
விக்கிப்பீடியா ™

Wednesday, February 1, 2012


<!-- AddThis Button BEGIN -->
<div class="addthis_toolbox addthis_default_style ">
<a class="addthis_button_preferred_1"></a>
<a class="addthis_button_preferred_2"></a>
<a class="addthis_button_preferred_3"></a>
<a class="addthis_button_preferred_4"></a>
<a class="addthis_button_compact"></a>
<a class="addthis_counter addthis_bubble_style"></a>
</div>
<script type="text/javascript" src="http://s7.addthis.com/js/250/addthis_widget.js#pubid=ra-4f291436642adf11"></script>
<!-- AddThis Button END -->