POPULATION

Entire population of indian origin upcountry tamil people is currently estimated as 1.5 millian. out of this .75 millian people live outside tea estates and elswhere in the country.only 50% of the people live and work at tea estates and this containes of 3800 families.in 1950 ,six decades ago 90% of above population lived and dependants of tea estates . because of lower wage and poor living conditions people are try to find works outside tea estats and distracted from tea industry.if this tendancy continues in for another five decades there going to be hardley any single workers family going to be left inside in a tea estate.

a tea estate with dwelings

a tea estate with dwelings

it is so cold

it is so cold
there is no way out

sun set pictures near galle

sun set pictures near galle




perspective

perspective
imbulpitiya tea estate near nawalapitiya from the distance

new developments

new developments
after 1972when the parliament passed land ceiling act the hill country border plantations were divided into small portions given to sinhala peasants colonnialising the plantation districts.

workers children.....it is difficult to smile

workers children.....it is difficult to smile

Friday, May 21, 2010

இலங்கை இந்தியர் காங்கிரஸ் அறிக்கை

ஆறாவது மகாநாட்டில்

வரவேற்புக் கமிட்டித் தலைவர் திரு. ஆர்.எம். சிவன் நிகழ்த்திய
வரவேற்புப் பிரசங்கம்

"கோவிந்தன் நகர்'
நுவரெலியா
24.06.1946
மகாநாட்டுப் பிரதிநிதிகளே, மதிப்பிற்குரிய தலைவர்களே! பேரன்புமிக்க பெரியோர்களே அன்பார்ந்த சகோதர சகோதரிகளே. மலைப் பிரதேசத்தின் மாமணி மகுடமாய் விளங்கும் நுவரெலியாவில் நடக்கும் இலங்கை இந்திய காங்கிரஸ் 6ஆவது மகாநாட்டிற்கு வந்துள்ள உங்களை வரவேற்கின்றேன்.

இதற்கு முன் நடந்த ஐந்து மகாநாடுகளில் கம்பளையில் திரு. சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களும், கண்டியில் திரு. சுந்தரமணி அவர்களும், பதுளையில் திரு. தக்ஷிணாமூர்த்தி அவர்களும், ஹட்டனில் திரு. வைத்திலிங்கம் அவர்களும், கொழும்பில் திரு. சங்கரலிங்கம் பிள்ளை அவர்களும் முறையே வரவேற்புக் கமிட்டித் தலைவர்களாக இருந்து சிறப்புற நடத்தித் தந்ததை நீங்கள் அறிவீர்கள். அந்த ஐவரும் ஆண்டில் முதியவர்கள். அறிவிற் பெரியவர்கள். ஆற்றல் மிக்கவர்கள். அரசியல் மேதைகள். எனக்கோ அத்தகைய ஆற்றல் எதுவும் இல்லை. எனினும் உங்களை எல்லாம் வரவேற்கும் பாக்கியம் கிடைக்கும்படியாக என்னை வரவேற்புக் கமிட்டித் தலைவனாகத் தேர்ந்தெடுத்த நூரளை ஜில்லா இந்திய மக்களுக்கு நான் எந்நாளும் கடமைப்பட்டுள்ளேன்.

இலங்கை இந்திய சமூகத்தின் ஜீவ தாதுக்களான ஆறு லட்சம் தொழிலாளர்களில் மூன்றரை லட்சம் தொழீலாளர்கள் வாழ்வது நமது மத்திய மாகாணமேயாகும். இதில் நமது காங்கிரஸ் மகாநாடு நடப்பது நான்காவது தடவையாகும். கம்பளை, கண்டி, ஹட்டன் நகரங்களுக்குப் பல சிறப்புகள் இருந்த போதிலும் இந் நுவரெலியா நகருக்க தனித்த பல சிறப்புகள் உண்டு. அத்தகைய சிறப்புகளுக்கு அடிப்படை எது. நமது இலங்கை இந்திய சமூகத்தைச் சேர்ந்த பாட்டாளி ராமசாமி, மீனாக்ஷி பட்டப்பாடு.

நுவரெலியா இலங்கையின் சுகவாசஸ்தலம். பூமாதேவி தாண்டவமாடுமிடம். இயற்கையின் பூர்ணப் பொலிவை இங்கேதான் கண்டுகளிக்கலாம். மரகதக் கம்பளம் விரித்தது போன்று தேயிலைத் தோட்டங்களும் பார்க்குமிடங்களெல்லாம் பச்சை வளம், மிதிக்குமிடமெல்லாம் மலர்க்காடு, தொட்டதெல்லாம் ஜில்லென்றிருக்கும் நினைத்தால் நெஞ்சம் குளிரும் நிலையையுடையது நுவரெலியா. இலங்கையின் உயர்ந்த மலைச் சிகரம் பித்துருதலாக்கெல இங்குதான் உள்ளது. மனோரம்மிய சீதோஷ்ண நிலை வாய்ந்த பூலோக அமராவதி இந்நகர். யாத்ரீகர்கள் கண்டு மகிழும் ஹக்களைப் பூந்தோட்டம் இங்குதான் உள்ளது. பிரபுக்களும் சீமாட்டிகளும் பொழுது போக்குக்காக வாழுமிடம் இது. நோயாளிகள் சுகத்துக்கு வரும் வாசஸ்தலம் இது. விளையாட்டு நிபுணர்கள் வருடா வருடம் பந்தயங்கள் நடத்துமிடம் இது. வெள்ளைக்கார துரைமார்கள் வாரந் தவறாது வந்து கேளிக்கை விலாசத்தில் மூழ்கித் திளைப்பதும் இங்கேதான்.

இத்தகைய இலங்காதேவியின் உய்யானவனமான இந் நகரில் இன்று இந்த ஆறாவது மகாநாடு கூடுவதில் ஒரு முக்கியத்துவம் இருக்கின்றது. இயற்கைத் தேவியோடு மனம் விடபுடு நெருங்கி சமூகமாகப் பழகுகின்றபொழுதுதான் இவ்வுலகத்தின் படைப்பிலுள்ள பெருமையும் மனித வர்க்கத்திற்கு இயற்கை அளித்துதவும் எண்ணற்ற பரிசுகளையும் என்றாக நினைத்து பார்க்க முடிகின்றது. இயற்கையோடிசைந்த வாழ்வுகான் இன்பவாழ்வு. அதற்கு மாறுபட்ட வாழ்வு துன்ப வாழ்வுதான் உழைத்துத் தந்தவனைப் பசித்திருக்க வைத்து உழைக்காதவன் புசித்துத் திரிவது இயற்கைத் தேவிக்கு துரோகஞ் செய்வதாகும். இதோ எம் மருங்கிலும் நீங்கள் காணும் பச்சைப் பாவடை விரித்தது யார். கண்பு காக்காடுகளை அழித்து பொன்விளையும் போக பூமியாக்கியது யார்? கல்லிலும் கனிகள் குலுங்க வைத்தது யார்? சதுப்பு நிலத்தைத் தங்க நிலமாக்கி தேயிலையும், தீங்கனியும், காய்கறியும் சேகரித்துத் தந்தது யார்? வனத்தையழித்து மலர்க் காடாக்கி மந்த மாருதம் கொஞ்சி விளையாடும் வசந்த மண்டபமாக இதை மாற்றியது யார்? அவர்கள்தான் ராமசாமி மீனாக்ஷி. அவர்கள் சந்ததி. இலங்கை இந்தியத் தொழிலாள மக்கள்.

இந்தியாவின் கற்பத்தில் தோன்றி இலங்கைக்காக உழைத்து அலுத்த இலங்கை மண்ணிலே புதைக்கப்படுவதற்காக 1835இல் இந்தியத் தொழிலாளர்கள் ஒப்பந்தக் கூலிகளாய்க் கொண்டு வரப்பட்டார்கள். உரிமைகள் வழங்கப்படும் இந் நாட்டுப் பிரஜைகளாய் வாழ விரும்பின் அதற்குத் தடையெதுவும் இருக்காது என்ற உத்தரவாதத்தின் மீது அவர்கள் அழைக்கப்பட்டு வந்தவர்கள். அது மட்டுமா? மாசியும் தேங்காயும் மரத்தின் வேரிலே விளைந்து குவிந்து கிடக்கிறது. அள்ளிப் புசிப்பதற்கு அட்டி கிடையாது. பவுன் செடியிலே காய்க்கிறது. பறித்துக் கொள்ளலாம் என்று அவர்களுக்குக் கூறப்பட்டது. அப்பொழுது நுவரெலியாவுக்கு ரயில் இல்லை. காடு மலை தாண்டி கடுங்கானகந் தாண்டி கால்கடுக்க நடந்து இங்கு வந்து சேர்ந்தார்கள். புலி கரடிக்கு இரையானவர்கள் எத்தனை பேர். விஷ ஜந்துக்களுக்குப் பலியானவர் பலபேர். குளிர் தாங்காது விறைத்து வீதியில் செத்து விழுந்தவர் எத்தனை பேர் என்று நுவரெலியா வீதி மருங்கிலுள்ள மரங்கள் வாய்விட்டுச் சொல்லும். எந்தப் பாழாப் போனாலும் கந்தப்பளை போகாதே என்பது நாடோடிப் பேச்சு. ஆனால் அத்தகைய உடலையும் உள்ளத்தையும் உருக்கும் கூதலும் வாடையும் நிறைந்தது கந்தப்பளை. அதைக் காய்கறி வனமாக்கினார்கள் ராமசாமி மீனாக்ஷி சந்ததி. உடலை உரமாக்கி, ரத்தத்தை பாய்ச்சி லக்ஷ்க்கணக்கான ஏக்கர் நிலத்தை தேயிலை விளையும் தேவலோகமாக்கினார்கள். இல்லைத் தங்கச் சுரங்கத்தை உண்டுபண்ணினார்கள்.

நூறு வருடங்கள் ஓடி மறைந்து விட்டன. இன்று ராமசாமி மீனாக்ஷியைச் சேர்ந்தவர்கள் எண்ணிக்கை ஆறேகால் லட்சம். இன்று அவர்கள் நிலை என்ன? இரண்டு உலக யுத்தங்கள் முடிந்து விட்டன. லக்ஷ்க்கணக்கான உயிர்கள் பலியிடப்பட்டன. உலகமெங்கும் புதிய எழுச்சி, தொழிலாளர்கள் விழிப்படைந்து வருகின்றனர். ஆட்சியை கைப்பற்றக் கொடி தூக்கிவிட்டனர். சர்வாதிகார ஆட்சி தகர்ந்து ஜனநாயக ஆட்சி மலர ஆரம்பித்திருக்கிறது. ஆனால் ஏகாதிபத்திய வெறியும் முதலாளித்துவக் கும்பலின் சதியும் இடையே புகுந்து தொழிலாளர் அரசியல் சகாப்தத்தைக் கவிழ்க்க முயற்சித்துப் பார்க்கிறது.

இந்தச் சரித்திரப்பூர்வமான உண்மைக்கேற்ப ஆசியாவிலும் நமது தந்தை நாடான இந்தியாவிலும் தேசிய முற்போக்குச் சக்திகள் சுதந்திரம் பெறத் துடித்து முன்னேறிச் சென்று கொண்டிருக்கின்றன. அந்தத் தேசப் பக்த இந்திய பரம்பரையில் பிறந்த நாம் மட்டும் எப்படி சும்மா இருக்க முடியும்? 1939ஆம் ஆண்டு இலங்கை இந்தியக் காங்கிரஸ் உதித்தது. பாரதத்தின் தவப் புதல்வன் பண்டித ஜவஹர்லால் நேரு ஆகர்ஷணத்தால் உதித்த காங்கிரஸ் இலங்கை இந்தியர்களுக்கு உரிமை உணர்ச்சியை ஊட்டி வளர்க்க ஆரம்பித்தது. தாங்கள் ஒரு தனிப்பெரும் இனம். ஒரு பழமையான நாகரீகம், கலாசாரம், மொழி முதலிய பண்புகள் நிறைந்த சமுதாயம் என்ற கிளர்ச்சியை ஊட்டி வளர்த்து தங்கள் நியாயமான உரிமைகள் பெற ஸ்தாபன பலம் மிக அவசியமா? என்பதை வெளிப்படுத்திற்று.

இந் நாட்டில் ஒரு சில சுயநல அரசியல் சூதாடிகள், அதிகார ஆசையின் காரணமாக இந்திய துவேஷ விதை விதைக்கப்பட்ட கந்தப்பளை சம்பவத்தை நாம் மறப்பதற்கில்லை. அதைத் தொடர்ந்து அடுக்கடுக்காய் இந்திய சமூகத்தின் மீது ஏவப்பட்ட பாணங்களை விஸ்தரிக்க தேவையில்லை.

ஐந்து தலைமுறையாய் இலங்கை மண்ணில் வாழும் இந்தியன் இலங்கையனில்லையாம். அவன் இலங்கையனாக முடியாதாம். அவனுக்கு பிரஜா உரிமை கொடுக்க முடியாதாம். வாக்குரிமை வழங்க முடியாதாம். நூற்றாண்டு வாழ்ந்தும் நீர்க்குள் பாசி போல்த்தான் இருக்க வேண்டுமென்பது திரு. சேனநாயக்கா அவர்களின் திருவுள்ளமாம். இந்தியன், அரசாங்கக் காணி வாங்க முடியாது. விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ??????? படும் பிறப்புத்தான் அவன் தலையில் சேனநாயக்கா பிரம்மா எழுதினதாம். அதை மாற்ற யாராலும் முடியாதாம். மாணப்படுக்கையிலும் இந்தியர்களுக்கு உரிமை வழங்க ஒருக்காலும் சம்மதிக்க மாட்டாராம்.

இந் நாட்டு அரசியலதிகாரிகளிடம் இந்தியர்கள் ஏறெடுத்தும் பார்க்கப் போவதில்லை. ஸோல்பரி கமிஷனும் இந்தியர்களைத் தீண்டாதவர்களென ஒதுக்கிவிட்டது. வெள்ளை அறிக்கையால் இந்தியர்களுக்கு விமோசனம் இல்லையென்பது வெட்ட வெளிச்சமாகிவிட்டது. இந் நாட்டிலுள்ள இதர அரசியல் கட்சிகளும் தலைவர்களும் இந்தியப் பிரச்சினையை முக்கியமானதாகக் கருதுவதாகத் தெரியவில்லை.

இத்தகைய பொல்லாத சூழ்நிலையில் மற்றும் ஒரு துரதிர்ஷ்டக் கஷ்டம் இலங்கை இந்திய தலைவர்களிடையே நிலவும் பிணக்கும் பேதமும் இன்னும் நீங்கினபாடில்லை. ஐக்கியப்பட்ட நேரடியான நடவடிக்கைகள் பற்றி முடிவு செய்ய வேண்டிய முக்கியமான தருணத்தில் தலைவர்களிடையே இந்த முரண் நீடித்து வருவது அபாயகரமானது. ஆயினும் சென்ற ஆண்டில் இந்த மகாநாட்டுத் தலைவராக மீண்டும் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உயர்திரு சௌமியமூர்த்தித் தொண்டமான் அவர்களே தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின் ""முடிந்த அளவு ஒத்துழைப்பு அவசியம் ஏற்படின் நோடிப் போராட்டம்'' என்ற கொள்கையை தன்னால் முடிந்த அளவு அமுல் நடத்த முயன்றதை நீங்களறிவீர்கள். துணிந்து நேரடிப் போராட்டப் பரீøக்ஷ செய்வதென்று சென்ற ஆண்டில்தான் தீர்மானிக்கப்பட்டதையும் நீங்களறிவீர்கள். கொடுமைக்குப் பயந்து இனியும் குப்புற விழுந்து நடக்கப் போவதில்லை. பிரஜா உரிமையும் வாக்குரிமையும் பெற்றோ தீருவோம் என்ற உங்கள் உறுதியின் கோஷம் சோல்பரி அநீதிவாரத்தின் மூலம் குடியேற்ற நாட்டு மந்திரி முதலருட்டு வகுப்புவாத விடாக்கண்டர்கள் செவி வரையும் கவர்னர்கள் முதல் கௌண்சிலர்கள் வரை மந்திரி சபையார் முதல் முதலாளிமார் சங்கக் கோட்டை வரையிலும் ஒலித்தது. காங்கிரஸ் கிளப்பிய அந்தக் கோரிக்கைக் குரல் செயல் வடிவம் எடுத்தது. காங்கிரஸ் போர்முரசு கொட்டிய அந்த நாள்தான் அகில இலங்கையும் அறிந்த பிப்ரவரி 12ஆம் திகதி. இந்திய சமூகத்தின் செயல் வலிமையையும் காங்கிரஸின் மகோன்னத செல்வாக்கையும் தொழிலாளிகளின் நெஞ்சுறுத்தியையும் தியாக புத்தியையும் வெளிப்படுத்திய வெற்றிகரமான அந்த வெற்றி ஹர்த்தால் தினமாகும்.

ஆறேகால் லக்ஷ்ம் இந்தியத் தொழிலாளிகள் மட்டுமா? தோட்டப் பகுதிகளில் வாழும் சிங்கள சகோதர பாட்டாளி மக்களும் இலங்கை இந்தியரின் நியாயமான கோரிக்கைகளை ஒப்புக் கொள்ளுதற்கறிகுறியாக ஹர்த்தாலில் கலந்து கொண்டனர். இந்திய வியாபாரிகள் சில்லரைக் கடைக்காரர்கள், கைவண்டி இழுப்பவர்கள் வரை சகல இந்தியரும் சம்ப>ர்ண ஹர்த்தால் அனுஷ்டித்தனர். இந்த ஹர்த்தால் வெற்றி தோட்டத் துரைமார் சங்கத்திற்கும் இன்னும் ராமசாமி செக்குமாடு என்று நினைத்து மனப்பால் குடித்துக் கொண்டிருக்கும் சில பழம் பெருச்சாளி தோட்டத் துரைமார்களுக்கும் பெருத்த ????????? உண்டுபண்ணியிருக்கிறது. அந்த ஹர்த்தாலுக்குப் பிறகு எல்லா ஜில்லாக்களிலும் தொழிலாளர்கள் ???????? வெளியேற்றப்பட்டு வருகிறார்கள். இந்தியத் தொழிலாளியை அதிகார வர்க்கத்தின் துணையாலும் கெடுபிடியாலும் பயமுறுத்தல்களாலும் தடியடி தர்பார்களாலும் அடக்கி ஒடுக்கிவிடலாம். காங்கிரஸை உடைத்து விடலாம் என்று முதலாளி வர்க்கம் நினைக்குமானால் அந்தப் பாச் பலிக்காதென்று நாம் அவர்களுக்கு சொல்லத் தேவையில்லை. கடந்த இரண்டு மாதங்களாக நடந்து வரும் சம்பவங்களைக் கவனிப்போமானால் ஒன்று நிச்சயமாக விளங்குகிறது. மந்திரி வர்க்கம் அதிகார வர்க்கம், முதலாளி வர்க்கம் இந்தியர்கள் உரிமையை நியாயமாகத் தரப் போவதில்லை என்பது நன்றாகத் தெரிகிறது. உருளவள்ளித் தோட்டத்தில் 400 இந்தியத் தொழிலாளரும் மே 1ஆம் திகதி வெளியேற வேண்டுமென்று நோட்டீஸ் கொடுத்திருப்பது நாடு கடத்தும் சேனநாயக்கா மந்திரி சபைத் திட்டத்தை பரீøக்ஷ பார்க்க மந்திரி வர்க்கம் முனைந்திருக்கிறது. தாமரை வள்ளித் தோட்டத்தில் அழகன் என்ற தொழிலாளியை சுட்டதன் மூலம் அதிகார வர்க்கம் தொழிலாளர் எழுச்சியை அடக்கி அவர்கள் காங்கிரஸை ஒழித்துக்கட்டிவிட முனைந்திருப்பதாகத் தெரிகிறது. ?????? வள்ளித் தோட்டத்தில் ஆளதிகம் என்று சாக்குப் போக்கால் 43 இந்தியத் தொழிலாளரை வேலையிலிருந்து நீக்கியிருப்பது முதலாளி வர்க்கம். இன்னும் வர்க்க உணர்ச்சி கொண்டெழுந்து நிற்குந் தொழிலாளர்களை தட்டுமுட்டுச் சாமான்கள் போல தங்களிஷ்டப்படி நடத்தலாம் என்று கொக்கரிப்பதாகத் தெரிகிறது.

இந்தியத் தொழிலாளிக்கு வாக்குரிமைப் பிரஜா உரிமை இல்லை. இந் நாட்டு அரசியல் வாழ்வில் பங்குபற்ற சந்தர்ப்பம் இல்லை. இந்த அரசியல் அடிமைத்தனத்தை இனி ஒருக்காலும் நாம் நீடிக்கப் போவதில்லை. இந்தியத் தொழிலாளிக்கு போதிய உணவு, உடை பெறுவதற்குரிய சம்பளம் இல்லை. வசிக்க வீடு இல்லை. இந்த பொருளாதார அடிமை நிலையையும் இனி பொறுத்துக் கொண்டிருக்கப் போவதில்லை. இந்தியத் தொழிலாளியின் சமூக வாழ்வு உருக்குலைந்து விட்டது. தார்மீக வாழ்வு மறைந்து விட்டது. மிருக வாழ்வு வாழும் நிர்ப்பந்த நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் சமூக வாழ்வு புதுப்பிக்கப்பட வேண்டும்.

இவைகளுக்கு வழிவகுக்க பரிகாரந் தேட தீர்மானங்கள் நிறைவேற்ற பிரதிநிதிகளாகிய நீங்கள் இங்கே பெருந்திரளாக கூடியுள்ளீர்கள். உங்களுக்குத் தக்க வழிகாட்டி தலைமை தாங்கி வெற்றிப் போராட்டத்தை நடத்தித் தர தகுதி வாய்ந்த தலைவர்கள் விஜயம் செய்துள்ளார்கள்.

வரவேற்புக் கமிட்டியின் அழைப்பிற்கிணங்கி இலங்கை இந்திய சமூக அபிமானங்கொண்ட பல சமூகப் பிரமுகர்களும் பல்வேறு ஸ்தாபனப் பிரதிநிதிகளும் மற்றும் இங்கு விஜயம் செய்துள்ளனர். இங்கு விஜயம் செய்துள்ளவர்கள் எல்லோருக்கும் வரவேற்புக் கமிட்டியின் சார்பாக மீண்டும் வரவேற்பு கூறுகின்றேன்.

இது நெருக்கடியான காலமென்பதை நீங்கள் அறிவீர்கள். உணவு நெருக்கடி, உடை நெருக்கடி, எங்கும் எதிலும் நெருக்கடி. நாங்கள “செய்ய எண்ணியிருந்த வசதிகளெல்லாம் உங்களுக்குச் செய்து தர முடியவில்லை. வருந்துகின்றோம். மன்னிக்க வேண்டுகிறோம். மகாநாட்டுத் தலைவர் திருவாளர் தொண்டமான் அவர்கள் மகாநாட்டுக்குத் தலைமை வகித்து மகாநாட்டை வெற்றிகரமாக நடத்தித் தரும்படி வரவேற்புக் கமிட்டி சார்பாகவும் உங்கள் சார்பாகவும் கேட்டுக் கொள்கிறேன்.

No comments: