POPULATION

Entire population of indian origin upcountry tamil people is currently estimated as 1.5 millian. out of this .75 millian people live outside tea estates and elswhere in the country.only 50% of the people live and work at tea estates and this containes of 3800 families.in 1950 ,six decades ago 90% of above population lived and dependants of tea estates . because of lower wage and poor living conditions people are try to find works outside tea estats and distracted from tea industry.if this tendancy continues in for another five decades there going to be hardley any single workers family going to be left inside in a tea estate.

a tea estate with dwelings

a tea estate with dwelings

it is so cold

it is so cold
there is no way out

sun set pictures near galle

sun set pictures near galle




perspective

perspective
imbulpitiya tea estate near nawalapitiya from the distance

new developments

new developments
after 1972when the parliament passed land ceiling act the hill country border plantations were divided into small portions given to sinhala peasants colonnialising the plantation districts.

workers children.....it is difficult to smile

workers children.....it is difficult to smile

Sunday, September 29, 2013



ஐயகோ! மலையகத் தமிழ் மக்களே ...
- ச. ஜேசுநேசன் -
இலங்கையில் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் இரண்டு பிரதேசங்களில் அண்மையில் மாகாண சபைத் தேர்தல்கள் நடந்தன. ஒன்று வட மாகாணம், இதில் ஐந்து மாவட்டங்கள். ஐந்திலும் தமிழரே பெரும்பான்மையினர். மற்றையது மத்திய மாகாணம். இதில் உள்ள மூன்று மாவட்டங்களிலும் தமிழ் மக்கள் வாழ்ந்தாலும் நுவரெலியா மாவட்டம் தமிழர்களைப் பெரும்பான்மையாகக் கொண்டது. வடக்கு, கிழக்குக்கு வெளியே தமிழர்களைப் பெரும் பான்மையாகக் கொண்ட ஒரே மாவட்டம் நுவரெலியாதான்.
வடக்கு மாகாணத்தில் தமிழரே 95% வெற்றி பெற்றிருக்கின்றார்கள். அது இயல்பு. நுவரெலியா மாவட்டத்திலும் மொத்த மாவட்ட உறுப்பினர் 16 பேரில் 11 தமிழர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள்., அதாவது 69% தமிழ் உறுப்பினர்கள். ( 2010 பொதுத் தேர்தலின் போது மாவட்டத்தின் மொத்த பா.ம. உறுப்பினர்கள் 7 பேரில் 5 பேர் தமிழர். அத்துடன் தேசியப் பட்டியலில் இருந்தும் ஒரு தமிழர். அவரும் நுவரெலியா காரர்தான் ). மேலே குறிப்பிட்ட 11 புதிய மா.ச. உறுப்பினர்களில் 10 பேர் ஆளும் ஐ.ம.சு.கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள். ஆதாவது ஆளுங்கட்சியினர். ஒருவர் ஐ.தே.க. காரர்.
சுருக்கமாகச் சொல்வதாயின், வட மாகாணத்தில் எதிர்க் கட்சி (த.தே.கூ) தமிழர்களே மிகப் பெரும்பான்மையாக வெற்றி பெற்றிருக்கிறார்கள். நுவரெலியா மாவட்டத்திலோ வெற்றி பெற்ற 11 தமிழர்களில் 10 பேர் ஆளும் ஐ.ம.சு.கூ-வினர். என்னே நேரெதிர் மாற்றம் !.
இத்தனைக்கும் வட பகுதித் தமிழருக்குத்தான் பிரச்சினை. மலையகத் தமிழ் மக்களுக்குப் பிரச்சினை இல்லை. அவர்கள் இராஜபோக வாழ்க்கை வாழ்கிறார்கள் என்பதல்ல. அவர்களின் அரசியல், மொழி, கல்வி, பண்பாட்டு, அசையாச் சொத்து, நிர்வாக, பொருளாதார உரிமைகளும் நிலைமைகளும் வடக்கு, கிழக்குத் தமிழர்களின் உரிமைகளோடும் நிலைமைகளோடும் ஒப்பிடும் போது படுபாதாளத்தில் இருக்கின்றது. அவை பற்றி அந்த மக்களுக்கு கவலையில்லை, அவர்களின் தலைமைகளுக்கும் அக்கறை இல்லை. சுதந்திர இலங்கையில், இலங்கை வம்சாவளித் தமிழர் உரிமை மறுக்கப்பட்ட மக்களாவர். இந்திய வம்சாவளியினரான மலையக தமிழ் மக்களோ உரிமை பறிக்கப்பட்ட மக்களாவர்.
வடபுலத்தில் எதிர்க்கட்சியான தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வெற்றி பெற்றிருப்பதால் அவர்கள் அரசுடன் போராடி, பேரம் பேசி தமிழுருக்கான உரிமைகளையும் சலுகைகளையும் அபிவிருத்தியையும் பெற்றுக் கொள்வார்கள் என்பது திண்ணம். அவர்கள் அவ்வாறு செய்யாது விட்டால், அரசுடன் சேர்ந்து ஆட்டமாடி, காட்டிக் கொடுத்து, கொள்ளையடித்து அராஜகம் நடாத்திக் கொண்டிருந்த ட்ரக்லெஸ் (trackless) குழுவுக்கு நடந்த கதிதான் அவர்களுக்கும் நடக்கும்.
ஆனால், நுவரெலியா மாவட்டத்திலோ அப்படியல்ல. வெற்றி பெற்றிருப்பது ஐ.ம.சு.கூ. என்ற ஆளுங்கட்சியே. எனவே, வெற்றி பெற்ற அத்தனை தமிழ் உறுப்பினர்களும் சிந்தனைக்காரர் காலால் இட்ட கட்டளையை தலையால் செய்ய மட்டுமே முடியும். எதிர்த்துப் பேச முடியாது. கௌரவ பா.ம. உறுப்பினர்களான தொண்டமான், சிவலிங்கம், திகாம்பரம், இராஜதுரை, இராதாகிருஷ்ணன், ஶ்ரீரங்கா ஆகியோர் இதைத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள். எனவே இந்த 10 ஆளுங்கட்சிசார் நுவரெலியா மாவட்ட எம்பிசி மார்களும் (மாகாணசபை உறுப்பினர்கள்) இதையே செய்வார்கள். ஏனென்றால் அவர்கள் தன்மானம், தன்னம்பிக்கை, தனித்துவம், தமிழ்மொழி, தமிழினம் அத்தனையும் விற்றுவிட்டு அந்தப் பணத்துக்கு வெற்றிலை வாங்கி சப்பிக்கொண்டிருக்கிறார்கள். இப்படியான சப்பல்களைத்தான் அவர்களால் செய்ய முடியும்.
அவர்களின் மத்திய மாகாண சபையின் புதிய முதலமைச்சராக வருபவர் யாரென்று அவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள். ஏனென்றால் தொண்டமான், திகாம்பரம், ரங்கா ஆகியோருக்கப் போன்று மலையக அரசியல் இவர்களுக்குப் புதிது. புதிதாக முதலமைச்சராக வருபவர், அவர்தான் 1977 ல் புசலாவை பகுதி டெல்டா, சோகமை, சங்குவாரி தோட்ட லயங்களை எரித்து தோட்ட மக்களை நடுத்தெருவுக்கு விரட்டிய தலைவனின் புத்திரன். எனவே, இனி இந்த 10 பேரினதும் மற்றும் கண்டி, மாத்தளை மாவட்டங்களில் தெரிவான இரண்டு அரசாங்க கட்சி தமிழ் உறுப்பினர்களினதும் ஏகோபித்த ஆதரவுடன்,
1. தோட்டங்கள் துண்டாடப்படும்,
2. சிங்களவருக்கு அந்த தோட்டக் காணிகள் பிரித்துக் கொடுக்கப்படும்,
3. இந்த புதிய மாகாணசபைத் தமிழ் உறுப்பினர்கள் போட்டி போட்டிக்கொண்டு தோட்டங்கள் தோறும் சந்திக்கு சந்தி, மூலைக்கு மூலை மதுக்கடைகளை ஆரம்பிப்பார்கள்,
4. போதைப் பொருள் வியாபாரத்தில் அனுபவமிக்க மலையக அரசியல் தலைவர்மார், ஏற்கனவே பெருங்’குடி’ மக்களாக இருக்கும் மலையக மக்களை, போதைப்பொருள் பாவித்தலிலும் சம்பியன்களாக ஆக்குவார்கள்.
5. டெம்பரரி செட்டுக்கு (தற்காலிக கொட்டகை) கொஞ்சம் தகரம் கொடுப்பார்கள், கோயிலுக்கு மணி கொடுப்பார்கள், களிப்புடன் ஆடிப்பாடி மகிழ வாத்தியக் கருவிகள் வாங்கிக் கொடுப்பார்கள், கொஞ்சம் கிறிக்கட் மட்டைகளும் பந்துகளும் வழங்குவார்கள்.
6. இடைக்கிடையே தமிழ் நாட்டுக்குப் பறந்து தமது சின்ன வீடுகளையும் கவனித்து வருவார்கள்.
அப்பாடா, இத்துடன் மலையக மக்களின் பிர்ச்சினைகள் எல்லாவற்றையும் தீர்த்துவிட்டோமென்று நிம்மதிப் பெருமூச்சு விடுவார்கள். இவர்களுக்கு முன்பிருந்தவர்களும் இப்படியானவற்றைத்தான் செய்து கொண்டிருந்தார்கள். இனி அடுத்த தேர்தலில் நிற்பார்கள். ‘பார்’கள் கைகொடுக்கும். வெல்வார்கள்.
ஐயகோ! மலையகத் தமிழ் மக்களே உங்களுக்கு எப்போது அறிவு (உணர்ச்சி) வரும் !!.

Tuesday, March 5, 2013


வேலூரில் கண்டி மன்னர் பரம்பரை-01

கண்டி மன்னன் ராஜசிங்கன் சிறை வைக்கப்பட்டிருந்த இடம்


-மணி ஸ்ரீகாந்தன்-


சென்னையிலிருந்து நூற்றி நாற்பது கிலோமீட்டரை பெங்களுர் அதிவேக பாதையின் ஊடாக கடந்தால் வேலூரை சென்றடையலாம். கடுமையாக வெயில் காயும் இடம் என்பதால் வெயிலூர் தான் வேலூர் ஆனது என்றும்
ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன்
சொல்வார்கள். தங்கக் கோயில், கோட்டை, சி.எம்.சி மருத்துவமனை, மத்திய சிறைச்சாலை என்று வியந்து பார்க்க வேண்டிய இடங்கள் ஏராளம். குறிப்பாக நம் நாட்டில் கண்டியை கடைசியாக ஆட்சி செய்த ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் சிறை வைக்கப்பட்ட சிறைக்கூடம், மன்னரின் கல்லறை அமையப்பட்டுள்ள முத்து மண்டபம் உள்ளிட்ட சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் வேலூரின் சிறப்புகளில் இடம் பெறுகின்றன.
மன்னர் சிறைவைக்கப் பட்ட வேலூர் கோட்டை

நம் நாட்டை சேர்ந்தவர்கள் வேலூருக்கு சென்றால் இவ்விரு இடங்களையும் பார்க்கத் தவறுவதில்லை. அன்மையில் சென்னையில் உள்ள நமது இலங்கை துணைத்தூதரகத்தின் தூதரக செயலாளர் அந்தபாங்கொடை உள்ளிட்ட அதிகாரிகள் குழு மன்னரின் கல்லறையை பார்வையிட்டு திரும்பியிருக்கிறது. நம் நாட்டு அதிகாரிகளின் இந்த வருகையை ஒழுங்கு செய்தவர் 'அரண்மனை' வசந்த குமார். இவர் யாழ்ப்பாணம் ஊர்காவற்துறையை சேர்ந்தவர் நம் நாட்டின் பழைய கலைஞர். கடந்த இருபதாண்டுகளுக்கு மேலாக வேலூரில் வசித்து வரும் இவர் வடாற்காடு மாவட்ட பன்னாட்டு தமிழுறவு மன்ற அமைப்பாளராகவும் சமூக நல தொடர்பு மைய இயக்குனராகவும் பணியாற்றி வருகிறார்.
வசந்த குமார்



“நம் நாட்டு மன்னரின் கல்லறையில் சில பணிகளை செய்வதற்கு எனக்கும் ஒரு சந்தர்ப்பம் கிடைத்ததற்காக மகிழ்ச்சியடைகின்றேன். இங்கே கடந்த இருபது ஆண்டுகளாக முத்து மண்டப காப்பாளராக பணியாற்றி வரும் முனியம்மாவுக்கு குறைந்த ஊதியமான நூற்று ஐம்பது ரூபாய் தான் கிடைத்து வந்தது. எனது அழைப்பை ஏற்று அ.தி.மு.க அமைச்சர் விஜய் அன்மையில் முத்து மண்டபத்தை பார்வையிட்டதோடு மண்டப காப்பாளர் முனியம்மாவிற்கு இரண்டாயிரம் ரூபா ஊதிய உயர்வை பெற்று தருவதாக வாக்குறுதி வழங்கியிருக்கிறார். விரைவில் விக்கிரம ராஜசிங்கனின் அறக்கட்டளையை தொடங்கி அதில் கிடைக்கும் நிதியில் வேலூரில் மன்னரின் சிலை அமைக்கும் பணியை தொடங்க இருக்கின்றோம்" என்று 'அரண்மனை' வசந்தகுமார் எம்மிடம் தெரிவித்தார்.
முத்து மண்டபம்

பண்ணிரெண்டு இதழ்களை கொண்ட தாமரைப்பூவின் நடுவில் முத்து இருப்பது போல காட்சியளிக்கும் முத்து மண்டபம் கலைஞரின் ஆட்சிக்காலத்தில் 1990 ஆம் ஆண்டில் கட்டப்பட்டதாகும். மன்னர் சிறை வைக்கப்பட்டிருந்த வேலூர் கோட்டை, 16ஆம் நூற்றாண்டில் சின்ன பொம்மி நாயக்கர் என்ற தெலுங்கு நாயக்க மன்னரால் கட்டப்பட்டதாகும். கோட்டையை சுற்றிலும் கருங்கற் சுவர் எழுப்பப்பட்டதோடு கோட்டையை சுற்றிலும் எட்டாயிரம் அடி நீளமான அகழியும் அமைந்துள்ளது. 20 அடி முதல் 100 அடி வரை ஆழம்கொண்டதாக இந்த அகழி காணப்படுகிறது. பொம்மி நாயக்கருக்கு பிறகு இந்தக்கோட்டை ஆற்காட்டு நவாப்புகளின் வசமானது.
மன்னர் குடும்பத்து கல்லறைகள்

முன்னர் கோட்டையில் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்த இழுவைப்பாலமே இருந்ததாம். பிறகு 18 ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயரால் இது கல் பாலமாக மாற்றப்பட்டது. இந்தியாவின் முதல் சிப்பாய் கலகம் 1806 ஆம் ஆண்டில் தொடங்கியதே இந்தக்கோட்டையில் தான்.

கோட்டை வளாகத்தினுள் அரசு அருங்காட்சியகம் உள்ளது. இதில் கண்டி மன்னன் பாவித்த சில பொருட்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இது தவிர மாவட்ட பதிவாளர் திணைக்களம், காவலர் பயிற்சிப்பள்ளி, ஆற்காட்டு நவாப்புகள் கட்டிய பள்ளி வாசல், பிரிட்டிஷ் கால கிறிஸ்தவ தேவாலயம், சின்ன பொம்மி நாயக்கர் கட்டிய பிரமாண்டமான ஜலகண்டேஸ்வரர் திருக்கோயில், திருவள்ளுவர் பல்கலைக்கழகம் ஆகியவை கோட்டைக்குள் உள்ளன. கடந்த சில ஆண்டுகள் வரை, வேலூர் மாவட்ட நீதிமன்றம், கலக்டர் அலுவலகம், இலங்கை அகதிகள் முகாம் ஆகியவை இங்கேயே இயங்கி வந்தன. தற்போது அவை வேலூரின் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன. முக்கியமாக ராஜீவ் கொலைக்குற்றவாளிகளான சின்ன சாந்தன், முருகன், நளினி, பேரறிவாளன் ஆகியோர் இங்கு தான் சிறை வைக்கப்பட்டிருந்தார்கள். ஆனால் 1995 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் திகதி கோட்டை சிறையிலிருந்து 43 விடுதலைப்புலிகள் 152 அடி தூரத்திற்கு சுரங்கம் அமைத்து தப்பி சென்றதன் பின், ராஜீவ் கொலையுடன் சம்பந்தப்பட்ட கைதிகள், வேலூர் தொரப்பாடி மத்திய சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார்கள்.

1815 இல் ஆங்கிலேயரிடம் கண்டி இராச்சியம் வீழ்ச்சியடைந்த பின் கண்டி மன்னர் ராஜசிங்கன் கைது செய்யப்பட்டார். பின்னர் கொழும்புக்கு அழைத்து வரப்பட்டு சிலிங்கோ கட்டிடத்திற்கு அருகில் இருந்த ஒரு கட்டடத்தில் அவர் சிறை வைக்கப்பட்டிருக்கிறார். அங்கே சில மாதங்கள் கழிந்த பின் 1816ஆம் ஆண்டு ஜனவரி 24ஆம் திகதி மன்னரும் அவரின் துணைவியார்கள் நான்கு பேரும் கொழும்பு கோல்பேசிலிருந்து ‘கோர்ஸ்வலிஸ்’ என்ற கப்பல் மூலமாக சென்னைக்கு அழைத்து செல்லப்பட்டிருக்கிறார்கள். அப்போது அந்தக்கப்பலில் மன்னருடன் ஒரு ஆங்கில அதிகாரியும் உடன் சென்றிருக்கிறார். அவர் பெயர் ‘வில்லியம் கிரண்வில்’ இவர் மன்னருடன் கப்பலில் சென்ற அனுபவங்களை ஒரு புத்தகமாகவும் எழுதியிருக்கிறார்.

சென்னையை சென்றடைந்த மன்னன் பின்னர் வேலூர் கோட்டைக்கு அழைத்துச்செல்லப்பட்டு சிறை வைக்கப்பட்டிருக்கிறார். மன்னர் சிறை வைக்கப்பட்ட அந்தக் கட்டடத்தில் தான் தற்போதைய வேலூர் மாவட்ட (ரிஜிஸ்டர் அலுவலகம்) பதிவாளர் திணைக்களம் செயற்பட்டு வருகிறது.
மன்னர் சிறைவைக்கப் பட்ட இடம் 
(ரிஜிஸ்டர் ஆபிஸ்.வேலூர்)

இந்தப் பதிவாளர் திணைக்களம் இரண்டு மாடிகளை கொண்டிருக்கிறது. அதில் கோப்புகள் வைக்கப்பட்டிருக்கும் களஞ்சிய அறைதான் அந்தக்காலத்தில் சிறைக்கூடமாக செயற்பட்டிருக்கிறது. அந்த அறையின் நீளம் 30 அடியாகவும் அகலம் 20 அடியாகவும் காணப்படுகிறது.

அந்த அறையில் தான் பதினெட்டு ஆண்டுகளை மன்னன் கழித்திருக்கிறார். மன்னரின் சிறை வாசத்தின் போது அவருடன் இரண்டு மனைவி மார் உடன் இருந்திருக்கிறார்கள். இலங்கையில் இருந்து கப்பலில் இந்தியாவுக்கு வரும்போது மன்னரின் ஒரு மனைவி கப்பலிலேயே இறந்து விட்டார். மன்னரின் சிறை வாழ்க்கையில் மன்னரின் மனைவி வெங்கட ரெங்கம்மாள் சிறையிலேயே மூன்று பிள்ளைகளை பெற்றெடுத்திருக்கிறார். பிறகு மன்னர் 1834 ஜனவரி 30 ஆம் திகதி அன்று தனது 53 வது வயதில் சிறையிலேயே மரணமாகி விட அவரின் இறுதிக்கிரியைகளை வேலூர் பாலாற்றங்கரையில் நடாத்தியிருக்கிறார்கள். பிறகு மன்னருக்கு அந்த இடத்தில் ஒரு கல்லறையை அமைத்திருக்கிறார்கள். மன்னரின் மரணத்திற்கு பிறகு அவரின் துணைவியரை ஆங்கிலேய அரசு விடுதலை செய்துவிட்டது. வேலூர் தோட்டப்பாலையத்தில் காணி பெற்று குடியமர்த்தியிருக்கிறார்கள்;

 இது தவிர மன்னர் கைது செய்யப்பட்ட நாளிலிருந்து இலங்கை சுதந்திரத்திற்கு பின்னரும் சில வருடங்கள் வரை மன்னர் குடும்பத்திற்கான மானியத்தொகை இங்கிருந்து முறையாக அனுப்பப்பட்டு வந்திருக்கிறது. அந்தக்காலத்தில் வேலூர் மாவட்டத்தில் அரசுக்கு வரி கட்டிய குடும்பங்களில் கண்டி மன்னரின் குடும்பமும் அடங்கும். பிறகு ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் காரணமாக இந்த ராஜகுடும்பத்தின் ராஜ யோகம் பறிபோய் வறுமையில் தள்ளாடத்தொடங்கியதோடு மன்னரின் வாரிசுகள் இந்தியாவின் மூலை முடுக்குகளுக்கு இடம்பெய்ந்தார்கள். இன்று மன்னரின் வாரிசாக விளங்கும் பிருத்விராஜன் வேலூர் ஸ்ரீநிவாசா தியேட்டரில் டிக்கட் கிழிக்கிறார். மற்றவர்கள் சென்னை, பெங்களுர், திருப்பதி உள்ளிட்ட இடங்களில் வசித்து வருகிறார்கள்.

(இன்னும் வரும்)


1 comment:

  1. சிறீவிக்கிரம இராசசிங்கனின் சொந்தக்காரர் ஒருவர் அறுபதுகளில் இலங்கை மத்திய வங்கியில் பணி புரிந்தார். தமிழ்நாட்டுக்கு ஒரு முறை போனபோது நீச்சல் குளத்தில் மூழ்கி மரணமானார். இன்னொருவர் ஏரிக்கரை தினகரன் நாளிதழில் வேலை பார்த்தார். அவர் என்ன ஆனார் என்பது தெரியவில்லை. பார்த்தால் இருவரும் இராசகுடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது நெற்றியில் எழுதி ஒட்டியிருந்தது!


Friday, January 18, 2013



புதிய பண்பாட்டுத்தள கருத்தாடலில் மல்லியப்பு சந்தி திலகர் உரை


புதிய பண்பாட்டுத்தளம் ஏற்பாடு செய்திருக்கக்கூடிய இந்த கருத்தாடல் களம் பலதரப்பு விடயங்களை உள்வாங்கத்தயாராக உள்ள நிலையில் மலையகத்தைச் சார்ந்தவன் என்ற வகையிலும் மலையகத்தைத் தளமாகக் கொண்டு செயற்படுகின்றவன் என்ற வகையிலும் மலையகம் சார்ந்ததாக எனது கருத்துக்களை பதிவு செய்யலாம் என நினைக்கிறேன்.
தலைமையுரை ஆற்றிய கலாநிதி ந.இரவீந்திரன் வடகிழக்கு தீண்டாமை ஒழிப்பு இயக்கம் முதல் பாரதி, காந்தி, மற்றும் அம்பேத்கார் காலம் முதலான சாதிய நிலைமைகளையும் அதற்கெதிரான பேராட்டங்களையும் இந்து மதம் அதற்கு எதிரான அல்லது மாற்றான மதங்கள் குறித்த தெரிவுகள் எவ்வாறு இடம்பெற்று வந்துள்ளன என்பன குறித்த தமது கருத்துக்களை முன்வைத்தார். எனினும் மலையகம் சார்ந்து முன்வைக்கப்படவிருக்கும் எனது கருத்துரையில் அங்கு நிலவக்கூடிய சாதிய நிலைமகளுக்கு அப்பால் தற்போதைய சூழ்நிலையில் ‘மலையக தேசியத்தை’ நிறுவுவதில் உள்ள சவால்கள் குறித்து அதிகம் விபரிக்கலாம் என நினைக்கிறேன்.
இலங்கைக்கு 200 வருடங்களுக்கு முன்பாக கூலிகளாக வந்த மக்கள் இன்று தங்களை ‘மலையக’ மக்கள் எனும் சொல்லாடல் கொண்டு அழைக்கும் நிலைமைகளை உருவாக்கியுள்ளனர். இந்திய வம்சாவளி தமிழர்  என்பதே பதிவாக உள்ளபோதும் கூட ‘மலையக மக்கள்’ என்போர் இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி தமிழர்களைத்தான் குறிக்கின்றது என தனியாக யாரும் விவரணப்படுத்தத் தேவையில்லை. இந்திய வம்சாவளியினர் என்று விரும்பியே தம்மை பதிவு செய்துகொள்பவர்கள்கூட பொது உரையாடல்களின்போது ‘மலையகம்’ எனும் சொல்லாடலை பிரயோகிக்கின்ற நிலைமைகளை அவதானிக்கலாம். இந்த ‘மலையகம்’ என்ற கருத்துருவாக்கத்தில் அரசியலைக்காட்டிலும் சமூக, இலக்கிய செய்பாடுகளே அதிக பங்கினை வகித்துள்ளது. ஈழத்து இலக்கியத்தின் ஒரு கூறாக ‘மலையக இலக்கியம்’ நோக்கப்படும் அளவுக்கு அது தனித்துவத்தைக் கொண்டுள்ளது. ஊடகத்துறையும் மலையகம், மலையகத்தமிழர்கள் என்ற சொல்லாடலை பயன்படுத்தி அந்த மக்களை சுட்டிக்காட்டுகின்ற நிலைமை பரவலாகவே வந்துவிட்டது. இத்தகைய செய்பாடுகளின் விளைவுகளாக ஆரம்ப காலங்களில் ‘தொழிலாளர்’ என்ற சொல்லாடலோடு இயங்கிய அரசியல், தொழிற்சங்க இயக்கங்கள் கூட மலையகம் என்ற சொல்லைப் பயன்படுத்த (உதாரணம்: மலையக மக்கள் முன்னணி) அது இன்னும் புதிய அர்த்தத்தையும்; புதிய எல்லைகளையும் அடையத்தொடங்கியது. இது இயல்பாகவே நடைபெற்று வந்திருக்கக்கூடிய ஒன்று.
தற்போது மலையகம் சார்ந்த உரையாடல்கள் இடம்பெறும் வெளிகளில் எல்லாமே அவர்கள் மலையகத்தமிழ்கள் என்று அழைப்பதா அல்லது இந்திய வம்சாவளி தமிழர்  என்று அழைப்பதா எனும் வாதப்பிரதிவாதங்கள் கிளம்பிவிடுகின்றன. அது பெரும் சர்ச்சைக்குரிய விடயமாகவும் விவாதமாகவும் பல சந்தர்ப்பங்களில் அமைந்து விடுகின்றன. இதற்கான காரணம் தம்மை மலையக மக்கள் என அழைத்துக்கொள்ளும் இந்த மக்கள் அவ்வாறு மலையக மக்களாகவே தம்மை பதிவு செய்து கொள்ளும் ஏற்பாடுகள் எதுவும் இல்லை. ஆட்பதிவின்போதோ, சனத்தொகை கணக்கெடுப்பின்போதோ மலையகத்தமிழர்கள் எனத்தம்மை பதிவு செய்தகொள்ளும் நிலைமை இல்லை. எனவே தம்மை இந்திய வம்சாவளியினர் என அழைத்துக்கொள்வதில் அல்லது பதிந்துகொள்வதில் நாட்டமில்லாத மலையக மக்கள் அவர்களை ‘இலங்கைத் தமிழர்’ என பதிவு செய்து வருகின்றனர். இலஙகைத் தமிழர்கள் என்பதற்கு உள்ள உண்மையான அர்த்தம் அவர்கள் பூர்வீக தமிழர்கள் (வடக்கு கிழக்கு வாழ்) என்பதாகும். எனவே புள்ளிவிபரங்கள் அடிப்படையில் இலங்கையில் வாழ்கின்ற மலையக மக்களின் அளவு தொடர்பான குறிகாட்டி மாற்றமடைகின்றது. இந்த நிலை இலங்கைத்தமிழர்கள் எனும் அளவிலும் மாற்றத்தை எற்படுத்துகின்றது. எனவே உத்தியோகபூர்வமாக இலங்கையில் கிடைக்கப்;பெறுகின்ற புள்ளிவிபரங்களுக்கும் உண்மையான மலையக மக்களின் எண்ணிக்கைக்கும் ஒரு பாரிய இடைவெளி காணப்படுகின்றது. 
மலையக மக்களை இந்திய வம்சாவளியினர் என்று அழைக்கவேண்டும் என வாதிட்டு நிற்போர் பாரம்பரிய விடயதானங்களை சுட்டிக்காட்டி அவர்களது அரசியல் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்கு அதுவே சிறந்தது என்றும் கருத்துக்களை முன்வைக்கின்றனர். இந்தியாவின் (தமிழகத்தின்) கலாசாரம் பண்பாட்டோடு தாம் இரண்டரக் கலந்திருப்பதாகவும் பரம்பரை வழியாக வந்த மரபினை மாற்ற முடியாது என்பதும் அவர்களது வாதம். 
மறுபுறம் தமிழகத்தில் (இந்தியாவில்) இருந்து இலங்கைக்கு பிரித்தானியர் அந்த மக்களை அழைத்துவந்தபோது இந்தியா காட்டிய பொறுப்புடைமை அதேபோல ஸ்ரீமா - சாஷ்திரி ஒப்பந்தம் உள்ளடங்களாக பல்வேறு சந்தர்ப்பங்களில் அந்த மக்களை திரும்பவும் இந்தியாவுக்கு (தமிழகத்துக்கு) பெற்றுக்கொண்டபோதும் அவர்களின் மறுவாழ்வுக்காக இன்றுவரை எடுத்த முயற்சிகள் தொடர்பிலும் இந்தியா காட்டிய, காட்டிவரும் பொறுப்புடமை தொடர்பிலும் நாம் சிந்திக்க வேண்டியுள்ளது. 
ஒரு புறம் இலங்கையில் இன்றுவரை சட்டரீதியாக இந்த மக்கள் ‘இந்திய வம்சாவளி மக்கள்’ என அழைக்கப்படும் அதே வேளை இந்தியாவுக்கு திருப்பியழைக்கப்பட்ட (சட்டரீதியான ஒப்பந்தப்படி இந்தியா ஏற்றுக்கொண்ட) மக்கள் இன்றும் தமிழ்நாட்டில் ‘சிலோன்காரர்கள்’ என்று அழைக்கப்படுகின்ற அவலநிலை காணப்படுகின்றது. அவர்கள் இன்னும் இந்தியர்களாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. சாதாரண இந்திய குடிமகனுக்கு உள்ள உரிமைகள் இந்த திருப்பிபெறப்பட்ட இலங்கை மலையக மக்களுக்கு இல்லை என்பதை பல ஆய்வுகள் காலத்துக்கு காலம் எடுத்துக்காட்டியுள்ளன. அண்மைக்கால எனது ஆய்வு முயற்சிகளும் இந்த ‘தமிழ்நாட்டின் சிலோன்காரர்கள்’ நிலைமை அப்படியே தொடர்வதையே உறுதிபடுத்துகிறது.
இந்த நிலையில் தங்களை ‘இந்திய வம்சாவளி மக்கள்’ என்றா அல்லது ‘மலையக மக்கள்;’ என்றா தாங்கள் அழைத்துக்கொள்வது என்கின்ற வினாவுக்கு விடையாக அந்த மக்கள் தாமாகவே மலையக மக்கள் என அழைத்துக்கொள்வதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை என்றே எண்ணத் தோன்றுகிறது. (எல்லோரம் தமிழர்கள்தான் இதில் வேறுபாடு தேவையில்லை என்ற ‘முற்போக்கான’ கருத்துக்கள் பதியப்படும். அது குறித்து தனியாக விவாதிக்கலாம்)
அண்மைக்காலமாக இந்த மலையக தேசியம் குறித்த கருத்தாடல்கள் பல்வேறு மட்டங்களில் நடைபெற்றுவருகின்றன. அதில் முதன்மையாக மலையக இளம் சமூகத்தினரிடையே இந்த கருத்தாடல் மலையகத்திலும் தலைநகரிலும் இடம் பெற்றுவருகின்றமையை சொல்லவேண்டும். இரண்டாவதாக தமிழ்நாட்டில் ‘சிலோன்காரர்களாக’ப்பார்க்கப்படும் தாயகம் திரும்பிய மக்களிடையேயும் உள்நாட்டு யுத்தத்தினால் தமிழகத்துக்கு அகதிகளாகச் சென்று தற்காலிக முகாம்களில் வசிக்கும் மலையக மக்களிடையேயும்  இது குறித்த தேடல்கள் இடம்பெறுவதை அவதானிக்க முடிகின்றது. கருத்தரங்குகள், குறுந்திரைப்படங்கள், ஆய்வு மாநாடுகள் என அவர்கள் தங்களைப்பற்றிய தேடல்களையும் ஆய்வுகளையும் விசாலப்படுத்தியுள்ளனர். மூன்றாவதாக புலம்பெயரந்துவாழும் மலையகத் தமிழ் மக்களிடையே இந்த உணர்வு தற்போது மேல் எழும்பி வருவதனை அவதானிக்கலாம். ஐரோப்பா, கனடா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் இந்த கருத்தாடல்கள் இடம்பெறத்தொடங்கியுள்ளன. அண்மையில் லன்டனிலே இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் ‘மலையக மக்கள் - ஒரு நூற்றாண்டு துயர்’, ‘மலையக மக்கள் அங்கும்-இங்கும்’ (இலங்கையிலும் இந்தியாவிலும்) எனும் தலைப்புக்களில் பேராசிரியர் மு.நித்தியானந்தன் அவர்கள் ஆற்றிய உரைகள் குறிப்பிடத்தக்கன.
இத்தகைய வெளிகளில் கலந்தரையாடப்படும் மலையக மக்கள் தங்களை மலையக தேசியமாக நிறுவிக்கொள்வதில் உள்ள சவால்கள் குறித்தே இப்போது பார்க்கப்படுகின்றது. இந்த சவால்களை பொருளியல் மற்றும் புவியியல் கண்ணோட்டத்தோடு ஒப்பு நோக்குவது பொருத்தப்பாடுடையது. பொருளியல் ரீதியாக ‘தேயிலை’ மற்றும் ‘இறப்பர்’ பயிர்ச்செய்கைகளுக்காக தமிழகத்தில் இருந்து அழைத்துவரப்பட்ட இந்த மக்கள் ‘கூலிகள்’ என்றே அழைக்கப்பட்டனர். (கள்ளத் தோணிகள், வடக்கத்தியான் என்றும் அழைக்கப்பட்டனர்) பின்னர், பெருந்தோட்டத்தொழிலாளர்கள், இந்தியதமிழர்கள், இந்திய வம்சாவளி தமிழர் என மாற்றம் கண்டு இன்று மலையக மக்கள் என்று அழைக்கப்படுகின்றனர். மலையக மக்கள் என்ற சொல்லில் வரும் ‘மலை’யை புவியில் சார்பு அடிப்படையில் பார்த்து பெரும்பாலும் மலைப்பாங்கான பகுதிகளில் வாழ்ந்த மக்களை மட்டும் சுட்டுவதாக பொருட்கொள்ளப்பட்டதோர் நிலைமையை அவதானிக்க முடிகின்றது. (தமிழகத்தில் இதனை இலங்கையில் மலைவாழ் மக்கள் என அர்த்தம் கொள்ளும் நிலைமை காணப்படுகிறது. இது முற்றிலும் தவறான ஒரு பார்வை).
 அதே நேரம் பொருளாதார ரீதியாக இலங்கையில் ‘இறப்பர்’ பயிர்ச்செய்கை ஒரு வீழ்ச்சிப்போக்கை பதிவ செய்ய அந்த தொழில் தறை சார்ந்து வாழ்ந்த மக்களும் ‘மலையக மக்கள்’ என்பதற்குள் உள்வாங்குவதில் ஒரு வீழ்ச்சிப்போக்கை அவதானிக்ககக்கூடியதாகவுள்ளது. அதனை இரண்டுவிதமாகப் பார்க்கலாம். ஒன்று, தேயிலைத்தொழில்தறைசார்ந்த பிரதேசங்களில் வாழும் மக்கள் தாழ்நிலப்பிரதேசங்களில் (அண்சமவெளிப் பிரதேசம்) வாழும் இந்திய வம்சாவளி மக்களை மலையக மக்களாக கணக்கிலெடுத்துக்கொண்டபோதும் ‘இறப்பர்’ தொழில் சார் நிலப்பரப்பில் இருந்து தாம் ‘மலையக மக்கள்’ என்கின்ற குரல் பலமாக ஒலிக்காமை. இரண்டாவது, ‘மலையகம்’ என விளிப்பதில் முன்னிற்கும் மலையக இலக்கிய பரப்;பில் இருந்து ‘இறப்பர்’ துiறாசர் இலக்கிய படைப்புகள் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவுக்கேனும் வெளிவராமை. இது மலையக இலக்கிய செல்நெறியில் காணப்படுகின்ற ஒரு குறைபாடாகக்கூட கொள்ளமுடியும். தேயிலை மற்றும் இறப்பர் இரண்டு துறைகளிலுமே தொழிலாளர்கள் அல்லது பாட்டாளிவர்க்கத்தினரே உள்வாங்கப்பட்டுள்ளபோதும் தேயிலை தொழில் சார் தொழிலாளர்களின் பிரச்சினைகளை பேசிய அள்வுக்கு இறப்பர் தொழில் சார் பாட்டாளிமக்களின் பிரச்சினைகளை மலையக இலக்கியம் பதிவு செய்யவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது. இதற்கான காரணங்களை கண்டறியவும் மலையகத்தேசியத்துக்குள் அவர்கள் அகப்படாமல் செல்வதை தவிர்ப்பதற்கும் தனியான ஆய்வு முயற்சிகள் அவசியமாகின்றன. 
ஏற்கனவே கூறியபடி புவியியல் அடிப்படையில் பார்க்குமிடத்து தற்போது நுவரெலியா பதுளை  மாவட்டங்கள் மாத்திரமே ‘மலையகம்’ என்றதும் மனக்கண் முன் விரியும் ஒரு தன்மை காணப்படுகின்றது. காரணம் தற்போது ‘இறப்பர்’ தொழில் துறை அனுபவித்த அதே வீழ்ச்சிப்போக்கை தேயிலைத் தொழில் துறையும் அடையத்தொடங்கியுள்ளது. பயிர்ச்செய்கைக்கு பயன்படாத நிலங்கள் ‘பகிர்ந்தளிக்கும்’ ‘வேலைத்திட்டம்’ தற்போது ஆரம்பித்தாயிற்று. ஏற்கனவே, இறப்பர் தொழில் சார் மாவட்டங்களான களுத்துறை, கேகாலை மலையக கருத்துருவாக்கத்தில் பின்தள்ளப்பட்டு தற்போது தேயிலை மருவிவரும் மாத்தளை, கண்டி, மொனராகலை, இரத்தினபுரி என மலையகம் என்பதற்குள் அடங்ககக்கூடிய பரப்பெல்லை குறைந்து வருவதனை அவதானிக்கலாம். அரசியல் ரீதியாக மலையக மக்களின் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் இன்றைய நிலையில் நுவரெலியா மாவட்டத்துக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதை அவதானிக்கலாம்.
ஒரு புறம் ‘இந்திய வம்சாவளி’ என்றே பதியவேண்டும் என்போர் முன்னெடுக்கும் அதற்கான நிகழ்ச்சி நிரலோடு ஒப்பிடும்போது ‘மலையகம்’ என்பதனை நிறுவிக்கொள்வதில் உள்ள சவால்கள் மிகப்பெரியதாகவே தெரிகிறது. ஏனெனில் சட்டரீதியாக தற்போதும் ‘இந்திய வம்சாவளி’ (இந்தியான தெமள) என்றே பதிவு செய்துகொள்ளும் சந்தர்ப்பமே உள்ளது. ஒருவர் ‘மலையகத்தமிழர்’ என தன்னை இலங்கையில் பதிவு செய்துகொள்ள விரும்பினால் கூட அதற்கான ஏற்பாடுகள் எதுவுமில்லை. அந்த எற்பாட்டினைச் செய்யும் பாரிய பொறுப்பு மலையக தேசிய  முன்னெடுப்பாளர்களால் கையில் உள்ளது. அதனைத்தொடர்ந்து புவியியல் பார்வையைக் கடந்து ‘மலையகம்’ என்பது ‘மலையை’ மாத்திரம் குறித்து நிற்கும் சொல்லாக அல்லாமல் அது கருத்தியல் ரீதியாக தற்போது மாற்றம் பெற்றுவரும் இந்திய வம்சாவளி தமிழ் மக்களை குறிக்கும் சொல்லாக உள்ளமையை பரப்புரை செய்யவேண்டியள்ளது. அரசியல், தொழிற்சங்க சமூக, கலை, இலக்கிய பண்பாட்டுத்தளங்களில் சற்றே தள்ளி நிற்கும் மலையக மக்கள் வாழ் தாழ்நில மாவட்டங்களை உள்வாங்கிக்கொள்ளும் பொறுப்பு அந்தந்த துறைசார் தரப்பினரின் தேவையாகவுள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக தங்களது இன, மொழி, மத, கலாசார, பண்பாட்டு அம்சங்களில் இருந்து விலகிச்செல்லும் அல்லது விலகிச்செல்ல நிர்ப்பந்திக்கப்பட்டுள்ள தாழ்நிலப்பிரதேச இந்திய வம்சாவளி மக்கள் தங்களை மலையக மக்களாக அழைத்துக்கொள்வதில் அவர்களாகவே அக்கறைகொள்ளுதல் அதிகம் வேண்டப்படுகின்றது.
(இது ஒரு உரையின் கட்டுரைவடிவமே. கட்டுரையாகவே எழுதப்பட்டிருக்குமிடத்து. மேலே பதியப்பட்டுள்ளவை உரையின் சாராம்சம் மட்டுமே. இந்த கட்டுரை வடிவில் அடங்காத பிற சில விடயங்களும் உரையிலே அமைந்தன. அது கருத்தாடல் சூழல் கருதிய விடயங்கள் என்பதனால் இந்த பதிவில் சேர்த்துக்கொள்ளவில்லை. அதேநேரம் உரையில் அடங்காதபோதும் இந்த பதிவில் சேர்த்துக்கொள்ளவேண்டும் என தோன்றிய (தட்டச்சு செய்யும்போது) விடயமொன்றை இங்கு மேலதிகமாகக் குறிப்பிட விரும்பகிறேன். அதாவது, இந்திய வம்சாவளி மக்கள் என்பதற்குள் கொழும்பு நகர் வாழ் சிறு தோட்ட மக்களும் அடங்குவர். இவர்கள் மிக நீண்ட நாளைக்கு முன்னரே இந்திய வம்சாவளி என்ற நிலை மாறி இலங்கைத்தமிழர்கள் எனப் பெதிவு செய்யப்பட்டுள்ளனர். ஆனால் இன்னும் இந்திய பிணைப்பு அவர்களிடையே காணப்படுகின்றது. அதே நேரம் அவர்கள் மலையக மக்களாக உள்வாங்காமல் போனமைக்காகன காரணம் சுவாரஷ்யமானது. ஆரம்ப காலங்களில் இந்த மக்களையும் உள்ளடக்கியே இந்திய வம்சாவளி தமிழரின் கணக்கெடுப்பு அமைந்துள்ளது. பின்னாளில் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தொழிற்சங்க கட்டமைப்புக்குள் உள்வாங்கப்பட அவர்களை நோக்கி மட்டமே தொழிற்சங்க இயக்கங்கள் செயற்படத்தொடங்கின. சிறுதோட்டங்களில் வசிக்கும் இந்த மக்கள்  முறைமைப்படுத்தப்படாத தொழில்களில் (தறைமுகத் தொழிலாளர்கள், நகரசுத்தி தொழிலாளர்கள், மற்றும் சிப்பந்திகள்) ஈடுப்பட்டதனால் தொழிற்சங்ககங்கள் தமக்குரிய சந்தாவை இவர்களிடத்தில் இருந்து பெற்றுக்கொள்வதில் உள்ள சிக்கல்கள் காரணமாக இவர்கள் அந்த தொழிற்சங்க கட்டமைப்பில் இருந்து கழற்றிவிடப்பட்டவர்களானார்கள். பின்னாளில் தொழிற்சங்க கட்டமைப்பின் அடிப்படையில் வளர்ந்துவந்த மலையக அரசியல் செல்நெறியிலும் இவர்கள் இணைத்துக் கொள்ளப்படுவதற்கான வாய்ப்புகள் அமையவில்லை. அந்த நிலைமை இன்று வரை தொடர்வது துரதிஷ்டவசமானது. நான் உரையிலே குறிப்பிட்ட இறப்பர் தொழில்துறைசார்; மக்கள் எவ்வாறு விலகிச் செல்கிறார்கள் என்பதற்கு தலைநகர் சிறுதோட்ட மக்கள் எவ்வாறு விலகிச்சென்றுள்ளார்கள் என்பது சான்றாக அமைகிறது)