சென்ற வருடத்தை விட இந்த வருடம் குளிர் சற்று அதிகமாக அருக்கின்றதென தோன்றியது. அந்த மலலைப்பாங்கான பிரதேசத்தில் அதனை நன்றாகவே உணரக்கூடியதாக இருந்தது. சுஜாதா அந்த பள்ளிக்கு கூட அறையில் மேசைக்கு முன்னமர்ந்து ஜன்னலுக்கு அப்பால் அடர்த்தியதக பூத்துக் குழங்கிய சூரியகாந்தி பூக்குளை ரசித்து கொண்டிருந்தாள். மலைநாட்டுப்பகுதியில் அந்தப் பூக்களை கண்டபடி பூத்-துக்கிடக்கும் ஆனால் அதனை யாரும் ரசித்து பார்ப்பதில்லை.
சுஜாதா அந்தப் பாடசாலைக்க திருமணமாகி வந்து கொஞ்சநாள் தான் ஆகிறது. இருந்தாலும் பள்ளிக்கூட சூழலுடன் ஒன்றி போய்விட்டாள். அவளுக்கு பாடசாலையில் அவள் படிப்பிக்கும் பாடத்துக்க மேலதிகமாக பிள்ளைகளின் ஒழுக்கம் கட்டுபாடு மற்றும் மனோவியல் பிரச்சினைகளை கவிக்கும் பொறுப்பும் வழங்கப்பட்டிருந்தது. அவள் தனது பட்டப்படிப்புக்கு மனோவியல் ஒரு சிறப்புப்பாடமாக எடுத்திருந்தமையே அதற்கு காரணம்.
அவள் அவ்விதம் வெளியே பார்த்துக்கொண்டிருந்தபோதுதான் பாடசாலை அதிபர் தந்த பையனைக் கூட்டிக்கொண்டு வந்து அவள் முன் அமரச் செய்தார். அவன் பெயர் கன்னன் . பன்னிரண்டு வயதாகிறது. ஏழாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தான். அவனைப் பார்பதற்கே சோகமாக இருந்தான். கண்களில் ஒழியில்லை. முகம் வாடி போயிருந்தது. ஒழுங்காக சாப்பிடாமல் உடல் மெலிந்து போயிருந்தது.
அதிபர் சுஜாதாவை தூர அழைத்துப்போய் அவனின் தாய் தந்தையர் இருவருமே சில காலங்களுக்கு முன் விபத்தொன்றில் இறந்து போய் விட்டதாகவும், அதன் பின் அவன் அவனது தாத்தாவடனே பேய் வாழந்து வந்ததாகவும், தாத்தாவும் அண்மையில் இறந்து போன தால் அவன் சிறுவர் பராமரிப்பு இல்லத்தில் விடப்பட்டுள்தாகவும் மிகுந்த துயரத்தால் அவன் மனம் பாதிக்கப்பட்டுள்ளான் எனவும் அவன் படிப்பில் ஆர்வம் காட்டுவதில்லை என்றும் யாருடனும் சரியாகப் பேசுதில்லை என்றும் அவனுக்கு ஏதாவது செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.
அவனது கதையைக் கேட்டதுமே சுஜாதாவுக்கும் அவனத சோகம் தொற்றிக் கொண்டு விட்டது. என்றாலும் அவனுக்கு அவள் எப்படி உதவுவது என்று புரியவில்லை. இதுவரை அவள் இவ்விதம் பாதிக்கப்பட்டவர்களை தனிப்பட்டமுறையில் அனுகியது கிடையாது. அவனுடன் என்ன பேசுவதென்று தெரியாமல் இருந்தது. அவன் வந்த நேரத்தில் இருந்து அவளை ஏரிட்டு பார்க்காமல் தயக்கம் காட்டி வந்தான். சுவரில் தீட்டியிருந்த ஓவியங்களையே வெறித்துப்பார்த்துக் கொண்டிருந்தான்.
அவனது கதையைக் கேட்டதுமே சுஜாதாவுக்கும் அவனத சோகம் தொற்றிக் கொண்டு விட்டது. என்றாலும் அவனுக்கு அவள் எப்படி உதவுவது என்று புரியவில்லை. இதுவரை அவள் இவ்விதம் பாதிக்கப்பட்டவர்களை தனிப்பட்டமுறையில் அனுகியது கிடையாது. அவனுடன் என்ன பேசுவதென்று தெரியாமல் இருந்தது. அவன் வந்த நேரத்தில் இருந்து அவளை ஏரிட்டு பார்க்காமல் தயக்கம் காட்டி வந்தான். சுவரில் தீட்டியிருந்த ஓவியங்களையே வெறித்துப்பார்த்துக் கொண்டிருந்தான்.
அடுத்த நாளே சுஜாதா அவனைப்பற்றிய விபரங்களை தேடிப்பார்கிறாள். எல்லோரும் அவனைப்பற்றி சோகக்கதையையே திரும்பி திரும்பி கூறினார்களே தவிர புதிதாக ஒன்றும் தகவல் கிடைக்கவில்லை. அப்போதுதான் அவர்களது பள்ளிக்கூடத்தின் விளையாட்டுத்துறை ஆசிரியரை (தற்செயலாக) சந்தித்தாள். அவருடன் கதைத்துக்கொண்டிருந்ததில் இருந்து கன்னன் செஸ் விளையாட்டில் ஆர்வம் காட்டியதாகத் தெரிந்து கொண்டாள் அவளுக்கு ஏதோ புரிவது போல் இருந்தது. தொடர்ந்து செஸ் விளையாட்டுப் பலகையொன்றையும் காய்களையும் அவரிடம் இருந்து கேட்டுப்பெற்றுக்கொண்டாள்.
அடுத்த நாள் கன்னன் அவளை சந்திக்க வந்த போது அவளது அறையில் தனியாக மேசை ஒன்றைப்போட்டு அதன் மீது செஸ் விளையாட்டுப்பலகையும் காய்களையும் வைத்திருந்தாள் அவர்கள் அமர்ந்து விளையாட இரண்டு நாட்காலிகளும் போடப்பட்டிருந்தன. கன்னன் வழக்கமான அதே சோகத்துடன் வந்த போதும் அங்கே செஸ் விளையாட்டுப்பலகையைக் கண்டதுமே அவன் சுபாவத்தின் மாற்றத்தை அவதானித்தாள். அவள் அவனைப்பார்த்து கன்னா செஸ் விளையாடலாமா-? என்று கேட்ட போது தான் அவன் முதன் முறையாக அவள் கண்களை ஏரெடுத்துப்பார்த்தான்.
அவன் மேசைக்கு முன்னால் அமர்ந்து செஸ் பலகையில் காய்களை உரிய கிரமத்தில் அமடுக்கினான். விளையாடலாமா-? என்பது போல் சுஜாதா பார்த்ததான். அவளுக்கு ஒன்றும் பேசாமலேயே செஸ் பலகையின் முன் அமர்ந்தாள். கன்னனே முதல் நகர்த்தலை செய்ய அவள் அனுமதித்தாள் அவர்கள் இருவருமே மௌனமாக காய்களை நகர்த்திக்கொண்டார்கள். சுஜாதாவுக்கு நனடறாக விளையாட தெரிமென்றாலும் எந்த சந்தர்ப்பத்திலும் கன்னனை தோற்கடித்து விடக்கூடாதென்பதிலும் தனது அனுதாபத்தில்தான் அவன் வென்றான் என்ற உணர்வு ஏற்பாமனும் பார்த்துக்கொண்டாள். ஒரு சந்தர்ப்பத்தில் சுஜாதா தனது நகர்வை மேற்கொள்ளாமல் வேறொங்கோ பார்த்த போது அவன் ஆர்வத்தால் “டீச்சர் உங்கள் முறை டீச்சர்” என்று கத்தினான்.
அன்றுதான் அவன் நீண்ட நாட்களுக்குப்பின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினான். அவன் முகத்தில் அப்பிக் கொண்டிருந்த சோகம் படிப்படியாக அகள்றது. கண்கள் ஔி வீசத்தொடங்கின. அவன் அடுத்து வந்த விளையாட்டுகளிகலும் அவன் வெற்றி பெற்ற அவனுக்கு தெரியாமல் மறைமுகமாக அவனுக்கு உதவினாள் அவன் ஒவ்வொரு முறையும் வெற்றி பெறற்ற போது தன்னை மறந்து குதூகளித்தான். அவன் வெற்றிப்பெற்ற போதெல்லாம் அவள் அவன் கையைப்பற்றி குலுக்கி அவனுக்க வாழ்த்து தெரிவித்தாள் அவன் தோல்களில் தட்டிக்கொடுத்தாள்..
அடுத்தடுத்த நாட்களில் பின்னேரங்களில்அவன் அவனுக்கென ஒதுக்கப்பட்ட நேரத்துக்கு முன்னமேயே அவளை தேடி வந்தான் அவளைக் கேட்காமலேயே ராக்கையில் இருந்து செஸ் பலகையை எடுத்து காய்களை அடுக்கி வைத்தான். அவர்கள் நீண்ட நேரம் செஸ் விளையாட்டில் ஆர்வத்துடன் ஈடுபட்டிருந்தார்கள். அவன் ஒவ்வொரு முறை வெற்றி பெற்றபோதும் கண்களில் வெற்றிகளிப்புடன் அவளைப் பார்த்தான். அவள் எதிர்பார்த்தது அதைத்தான்.
படிப்படியாக அவர்ஙகளுக்கிடையில் ஒரு புரிந்துணர்வும் நட்பும் வயர்ந்தது. தன்னை மகிழ்ச்சிப்படுத்த தனது சோகத்தை பகிர்ந்து கொள்ள தனது வலியை புரிந்து கொள்ள இவ்வுலகில் இன்னொருவரும் இருக்கிறார் என்ற அவன் மனக்காயங்களை படிப்படியாக குணப்படுத்தியிருக்க வேண்டும் என்று சுஜாதாகவுக்கு தோன்றியது.
சில மாதங்கள் கடந்திருந்தன சுஜாதா வழக்கம் போல்தன் நாற்காலியில் அமர்ந்து அந்த சூரிய காந்தி பூக்களை ரசித்துக்கொண்டிருந்தாள். அங்கே பழைய பூக்கள் உதிர்ந்து புதிய பூக்கள் பூத்து புன்னகைத்துக்கொண்டிருந்தன. அப்போத கல்லூரி அதிபர் அவளைக் தேடி வந்துக்கொண்டிருநடதார். அவர் சுஜாதாவைப் பார்த்து வெற்றிப்புன்னகை ஒன்றை உதிர்த்து பாராட்டு தெரிவித்தார். கன்னனின் வாழ்வில் பதிய ஔி பாய்ச்சியமைக்காக அவர் நன்றி தெரிவித்தார். கன்னனை பழையபடி கலகலப்பாகி விட்டான் என்றும். அவன் இப்போது நண்பர்களுடன் சிரித்துப் பேசி பழகுகிறான். என்றும் படிப்பிலும் ஆர்வம் ஏற்பட்டள்ளதென்றும் கூறினார்.
சுஜாதா கன்னனை தன்னால் மீட்டெடுக்க முடிந்தது தொடர்பில் பெரிதும் சந்தோசப்பட்டாள். கன்னனை சந்திக்கும் வரரையில் அவள் தன் தொழிலை சுவாரஸ்யமின்றியே செய்து கெபண்டிருந்தாள். கன்னனடைய விடயத்தில் அவள் நிறைய கற்றுக்கொண்டதாக கருதினாள். தனது வலியை இன்னொருவரால் புரிந்து கொள்ள முடிகிறது என்ற உணர்வை ஏற்படுத்தினால் மாத்திரமே ஒருவரின் வலியைக் குறைக்க முடியும் என்பதனை அவள் மிகத் தெளிவாக புரிந்து கொண்டாள். ஒருவருக்கு ஏற்பட்ட மனக்காயங்களை காலம் மாற்றி விடும் என்பார்கள் . ஆனால் அதனை விட ஒரு அனுதாபத்துடனான மௌனமான பார்வை அன்புடனான ஒரு அரவணைப்பு தோளில் நட்புடன் கைபோட்டு நானிருக்கின்றேன் என்ற நற்புறவை வெளிப்படுத்துல் சாய்ந்து கொண்டு அழுது கண்னீர் விட ஒரு தோல் கிடைத்தல் இவைகளால் மனவலிமைகளை இலகுவாக ஒத்தடம் கொடுத்து நீக்கி விட முடியுமென்று அவள் கற்றுக்கொண்டாள்.
கன்னன் அக்கல்லூரியின் சிறந்த மாணவனாக உயர்வகுப்பில் உயர் பெறுபேறுகளை பெற்றுக்கொடுத்து கல்லூரிக்கு பெருமை சேர்த்து பல்கலைகழகத்துக்குத் தெரிவானான். அதன் பின்னரும் அவன் சுஜாதாவுக்கு தனது வெற்றிகள் தொடர்பில் கடிதங்கள் எழுதத்தவரவில்லை. அதன் பின் அவன் கடிதங்கள் குறைந்து போய் விட்டன. அவன் வெற்றிகரமாக தன் வாழ்வை தொடங்கி விட்டான் என்பதை சுஜாதா புரிந்துகொண்டாள்.
தொடர்புடைய சிறுகதைகள்
பொதுவா தனிம என்னை வாட்டுறப்பெல்லாம் அந்தப் பெரிய பாறாங் கல்லுக்கு மேலதான் நா ஏறி இருப்பேன். அங்கிருந்து பாத்தா சுத்து வட்டாரத்தில உள்ள பத்துத் தோட்டங்களும் தெரியும். எங்க தோட்டத்திலேயே ரொம்ப ஒசரமான ஒரு எடத்துல அது கம்பீரமா ஒரு பாறைக்குன்று ...
மேலும் கதையை படிக்க...
பெருமழையாக இல்லாவிட்டாலும் ஒரு மனிதனை தொப்பையாக நனைத்து விடும் அளவுக்கு மழை பெருந்தூறலாகத் தூறிக் கொண்டிருந்தது. அதனுடன் சேர்ந்து மெல்லிய ஈரக்காற்றும் வீசியதால் தேகத்தில் நடுக்கம் ஏற்படுத்தும் அளவுக்கு குளிர் காணப்பட்டது. அந்திச் சூரியனைக் கண்டு சில நாட்கள் ஆகியிருந்தன. தொடர்ச்சியான மழை ...
மேலும் கதையை படிக்க...
தொடர்ந்து மூன்று நாட்களாக அடை மழை கொட்டியது வெளியில் தலைகாட்டவே முடியாமலிருந்தது. நான் எனது எழுத்து மேசையில் அமர்ந்து கொண்டு இன்றைக்கு வேலைக்குப் போவதா வேண்டாமா என்று இரண்டுங்கெட்டான் மன நிலையில் யோசித்துக் கொண்டிருந்தேன். இன்றைக்கு ஏதாவது அவசரமாக முடிக்க வேண்டிய ...
மேலும் கதையை படிக்க...
தேவநேசன் வாழ்க்கையில் மிக நொந்து போனதன் பின்னரே ஓரளவு நல்ல நிலைக்கு வந்தான். இருந்தாலும் அவனது கடுமையான முயற்சி அத்துடன் நின்று போய்விடவில்லை. அவனுக்கு ஒரு அழகிய அற்புதமான மனைவியும் மூன்று பெண் குழந்தைகளும் இருந்தனர். அந்த ஐவர் அடங்கிய குடும்பம் ...
மேலும் கதையை படிக்க...
அங்கஜனுக்கு மிகக் கவலையாக இருந்தது. அவன் அந்த பாடசாலையின் விவசாயப் போதனாசிரியராக அண்மையில்தான் நியமனம் பெற்று வந்திருந்தான். அவனது அந்த பாடசாலை அதிபர் அவன் என்ன விதமான விவசாயக் கல்வியை அந்த பாடசாலை மாணவர்களுக்கு கற்பிக்கவேண்டுமென்று விளக்கமளித்துக்கொண்டிருந்தார். அவர் அண்மைக் காலமாக ...
மேலும் கதையை படிக்க...
சூடேறும் பாறைகள்
இன்னும் எத்தனை நாள்…?
கரிச்சான் குருவி
உங்களுக்காகத்தானே உழைக்கிறேன்
என்ன காரணம்?
No comments:
Post a Comment