கே. ஆர். குமார்
மஸ்கெலியா நகரில் இருந்து சுமார் 10 கிலோமீற்றர் தொலைவில் உள்ள "மஸ்கெலியா பிளாண்டேஷனுக்கு' சொந்தமான தோட்டம் தான் அப்புகஸ்தனை தோட்டம். இத் தோட்டத்தில் சுமார் 900 மக்கள் வசித்து வருகின்றனர். அப்புகஸ்தனை மேல் பிரிவு, கீழ்பிரிவு, தெபட்டன் ஆகிய மூன்று தோட்டப் பிரிவுகளைக் கொண்ட இத் தோட்டத்தில் ஏறக்குறைய 350 தொழிலாளர்கள் தொழில் செய்து வருகின்றனர். இந் நிலையில் இத் தோட்டத் தொழிலாளர்கள் கடந்த பல வருடங்களாக பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.
மலையகப் பகுதிகளிலுள்ள ஏனைய தோட்டங்களுடன் ஒப்பிடும் போது இத் தோட்டத்தில் பல பிரச்சினைகள் காணப்படுவதாக இப் பகுதி தோட்டத் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். தோட்ட நிர்வாகத்தின் கெடுபிடியால் தொழிலாளர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்க வேண்டிய நிலையில் உள்ளனர். இது தொடர்பில் தோட்டத் தொழிற்சங்கங்களுக்கு எடுத்துக் கூறியும் இதுவரை எவ்வித பதிலும் கிடைக்கவில்லை என்று இப் பகுதி தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தொழிற்சங்கங்களை கேட்காமல் வேதனைகளை பொறுக்க முடியாமல் தீர்வு கிட்ட வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக தாங்களாகவே பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டதால் இவர்களின் பிரச்சினைகளைப் பேசுவதற்காக தொழிற்சங்கங்களும் முன்வருவதில்லை என்றும் இவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இவர்கள் அனுபவிக்கின்ற பிரச்சினைகளை உற்றுப் பார்த்தால் இப்படியும் ஒரு தோட்டமா? என எண்ணிப் பார்க்கத் தோன்றுகிறது.
இந்த தோட்டத்தில் எங்கேயும் இல்லாத அளவுக்கு அநியாயம் நடக்குது. இந்த வேலை நிறுத்தத்தின் முக்கிய காரணமே ஒரு நாள் வேதனத்துக்கு 19 கிலேõ கொழுந்து பறிக்கச் சொல்வதுதான். மஸ்கெலியா முகாமைத்துவ நிறுவனத்திற்கு சொந்தமான எல்லா தோட்டங்களிலும் ஒரு நாள் சம்பளத்துக்கு 16 கிலோ கொழுந்து எடுக்க சொல்லும் போது எமது அப்புகஸ்தனை தோட்டத்தில் மட்டும் ஏன் 19 கிலோ கொழுந்து எடுக்க சொல்கிறார்கள். அது மட்டுமல்ல. தெப்பட்டன் டிவிசன் முழுவதும் காடாகி இருப்பதால் நாங்கள் அங்கு தொழில் செய்வதில்லை. தோட்ட நிர்வாகம் 3 கிலோ மீற்றர் தொலைவிலுள்ள தெபட்டன் டிவிசனில் இருந்து தோட்ட லொறியில் ஆடு மாடு போல ஆண் மற்றும் பெண் தொழிலாளர்களை ஏற்றிச் சென்று அப்புகஸ்தனை தோட்டத்தில் கொழுந்து பறிக்கச் செய்கின்றனர். மதிய உணவும் கொண்டு செல்ல வேண்டும். மாலை வேலை முடிந்ததும் நடந்துதான் வர வேண்டும். லொறி தர மாட்டார்கள். வீட்டுக்கு வருவதற்கு இரவு 7 மணியாகிவிடுகின்றது. இது இப்படியிருக்க ஒரு நேரத்துக்கு 1 கிலோ கொழுந்து வீதம் 3 நேர நிறுவையின் போது ஒரு தொழிலாளியிடம் இருந்து 3 கிலோ கொழுந்து பலவந்தமாக பிடிக்கப்பட்டு வருகிறது.
கொழுந்து நிறுக்கும் தட்டுக்கும் (தராசு) அதன் எடைக்கேற்ப மேலும் 1 கிலோ வீதம் 3 கிலோ கொழுந்து பிடித்திருக்கப்படுவது ஒரு நபருக்கு மேலதிகமான சுமார் 7 கிலோ கொழுந்தை தோட்ட நிர்வாகம் மேலதிகமாக எம்மிடம் பறிக்கின்றனர். எல்லாமாக ஒப்பிட்டுப் பார்த்தால் நாங்கள் கடந்த 10 வருட காலமாக பயங்கரமாக தோட்ட நிர்வாகத்தால் சுரண்டப்பட்டு வருகின்றோம். எனது உயரத்துக்கு வளர்ந்திருக்கும் தேயிலை செடியிலே கைகளை உயர்த்திய வண்ணம் கொழுந்து பறித்து அதில் ஏன் இவர்களுக்கு சும்மா கொடுக்கனும்? இதை பல முறை சொல்லியும் புரியாததால் நாங்கள் வேலை நிறுத்தம் செய்ய முடிவெடுத்தோம்.
கடந்த பல வருட காலமாக தோட்டத்தில் இடம்பெற்று வரும் தோட்ட துரைமார் அடாவடித்தனம் மற்றும் உரிமை மீறலுக்கு எதிராகவே நாங்கள் கடந்த 21 நாட்களாக பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகிறோம். தோட்ட முகாமையாளர்களிடம் சென்று எமது பிரச்சினைகளைச் சொன்னால் அவர் அதை செவிமடுக்காமல் ஏனைய உத்தியோகத்தர்களுடன் கலகலப்பாக பேசிக் கொண்டிருப்பார். மலையில் கங்காணி, கணக்குப்பிள்ளை ஆகியோர் பெண் தொழிலாளர்களை தகாத வார்த்தைகளால் பேசுகின்றனர். எங்களுக்கு வேலைக்கு போகப் பிடிக்கவில்லை. எதுவும் எதிர்த்து பேசினால் வீட்டுக்கு துரத்துகின்றனர். இது போன்ற பல இன்னல்களுக்கு முகம் கொடுக்க முடியாமல் இங்குள்ள பல தொழிலாளர்கள் தங்களின் இளம் வயதிலேயே தோட்ட பணியில் இருந்து விலகி வீட்டில் இருக்கின்றனர்.
காலையில் 8 மணிக்கு மதிய உணவையும் கட்டியெடுத்த வண்ணம் மலைக்கு வேலைக்கு செல்லும் நாங்கள் பகல் உணவுக்கு வீட்டுக்கு கூட வராமல் மாலை 6 மணி வரை வேலை செய்கிறோம். இந்த நேரத்தில் பல இன்னல்களுக்கு முகம் கொடுக்கின்றோம். பால் கொடுக்கும் தாய்மாருக்கும் நேரம் ஒதுக்கப்படுவதில்லை. மழைக் காலமாக உள்ளதால் பாம்பு அட்டை தொல்லை அதிகரித்துள்ளது. மலையில் வேலை செய்து கொண்டிருக்கும் போது ஏதாவது வருத்தம் ஏற்பட்டு விட்டால் எங்களுக்கு தோட்ட நிர்வாகம் எவ்வித வாகன வசதியும் தர மாட்டார்கள்.
தோட்டத்தில் உள்ள வைத்தியசாலை இயங்குவதே இல்லை. புதிய கூட்டு ஒப்பந்தப்படி அரை பேர் போடக் கூடாது, இருந்தும் முழு நாளுமே வேலை செய்தாலும் கொழுந்து கிலோ சற்று குறைவாக இருந்தாலும் அரை நாளுக்கான வேதனமே வழங்குகின்றனர். புதிதாக யாருக்கும் பெயர் பதிந்து வேலை தருவதில்லை. வேறு தோட்டத்தில் இருந்து திருமணம் முடித்து இங்கு வந்து பெயர் பதியும் போது அங்குள்ள வைத்தியரை வைத்து அப் பெண் கர்ப்பமாக உள்ளாரா என பரிசோதித்து கர்ப்பமாக இருந்தால் பெயர் பதிவதில்லை. காரணம் பிரசவ சகாய நிதி கொடுக்க வேண்டும் என்ற காரணம்தான். குழந்தை பிறந்த பின்னரே பெயர் பதிவு செய்கின்றனர்.
இவ்வாறு தொழிலாளர்களின் உரிமைகள் மீறப்படுகின்றன. தோட்ட அதிகாரி ஒருவருக்கு தனிப்பட்ட ஒருவரை இப்படி பரிசோதிப்பதற்கு என்ன உரிமை உண்டு. இது கண்டிக்கப்பட வேண்டிய விடயமாகும். இதனால் பல பெண்கள் வெட்கப்பட்டு வீட்டிலே தங்கிவிடுகின்றனர். தோட்டத்தில் தொழில் செய்கின்ற ஒருவருக்கு வதிவிட சான்றிதழ் ஒன்று பெறுவதற்காக தோட்ட நிர்வாகத்திடம் சென்றால் அதைப் பெறுவதற்கு சுமார் 3 மாத கால தாமதமாகின்றது. குடியிருப்புகள் மிகவும் மோசமாக காணப்படுகின்றன. இவைகளை திருத்த மறுக்கின்றனர். இப்படி பல பிரச்சினைகள் கடந்த பல வருடங்களாக நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமாகவே உள்ளன.
இதையெல்லாம் தாங்கிக் கொள்ள முடியாமல் தான் பிரச்சினைகளுக்குட்பட்ட சம்பந்தப்பட்ட 3 டிவிசன் தொழிலாளர்களும் ஒற்றுமையாக இந்த பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றோம். தோட்ட துரையை மாற்றி ஏனைய உத்தியோகஸ்தர்களை மாற்றி புதிய துரை மற்றும் உத்தியோகஸ்தர்களை நியமித்து ஒரு நாள் வேதனத்துக்கு 16 கிலோ கொழுந்து பறிக்க உத்தரவு கிடைத்தாலும் மட்டுமே தொழிலுக்கு போவோம். இல்லாவிட்டால் நாம் பட்டினி கிடந்து செத்தாலும் வேலைக்கு திரும்ப மாட்டோம்.
Expose the problems of srilankan upcountry tamil people to the world.Currently this population is under privileged and denied basic human rights.Even being permanent residents for a period of 175 years, very resantly only (in 1985) they had given citizenship and voting rights.This people needs to be helped.Since 1992 the entire population re gained citizenship and voting rights,but,they are not govern by parliament or other local government authorities..
Pages
POPULATION
Entire population of indian origin upcountry tamil people is currently estimated as 1.5 millian. out of this .75 millian people live outside tea estates and elswhere in the country.only 50% of the people live and work at tea estates and this containes of 3800 families.in 1950 ,six decades ago 90% of above population lived and dependants of tea estates . because of lower wage and poor living conditions people are try to find works outside tea estats and distracted from tea industry.if this tendancy continues in for another five decades there going to be hardley any single workers family going to be left inside in a tea estate.
2 comments:
you can subscribe to www.updrf.blogspot.com
and make a comment
visit www.updrf blogspot .com
SHADAGOPAN
huxcovhrxkozhsyjoycoz. http://www.acnetreatment2k.com/ - acne treatment
frxboz
Post a Comment