இலங்கையை ஆண்ட கடைசி தமிழ் மன்னரின்
வாரிசு மரணம்
ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்டவரும் கடைசியாக இலங்கையை ஆட்சி செய்த தமிழ்
மன்னனுமான விக்கிரம ராஜசிங்கர் வம்சத்தின் கடைசி வாரிசு பிருதிவிராஜ் வேலூரில் மரணமடைந்தார்.
இலங்கையை ஆண்ட கடைசி தமிழ் மன்னர் விக்கிரம ராஜசிங்கர் 26 ஆண்டுகள் ஆங்கிலேயரை எதிர்த்து போர் புரிந்தார். போரின் இறுதியில் மன்னரும் அவரது குடும்பத்தினரும் தலைமறைவானார்கள்.
அவர்களை சிறைபிடித்த ஆங்கிலேயர்கள் வேலூர் கோட்டையில் 16.5 ஆண்டுகள் சிறை வைத்தனர். 1832ல் விக்கிரம ராஜசிங்கர் மரணம் அடைந்தார். அவர் புதைக்கப்பட்ட இடத்தில் பாலாற்றங்கரையில் 1990ல் முத்து மண்டபம் கட்டபட்டது.
இலங்கையில் கடைசி வரை ஆங்கிலேயரை எதிர்த்த தமிழ் மன்னரின் வீரத்தை பிரதிபலிக்கும் வகையில் இந்த மண்டபம் கம்பீர சின்னமாக நிற்கிறது. மன்னரின் வம்சத்தினர் இன்றும் வேலூரில் வாழ்ந்து வருகின்றனர். வேலூர் சாய்நாதபுரம் நடேச முதலி தெருவில் வசித்து வந்த மன்னரின் 3-வது வாரிசு பிருதிவிராஜ்(17-01-2014) இன்று மரணம் அடைந்தார்.
இவரை இளவரசன் என்று அப்பகுதி பொதுமக்கள் அழைத்து வந்தனர். ஏராளமான பொதுமக்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இவருக்கு புஷ்பா என்ற மனைவி, விக்கிரமன்,
விஜயகுமார் என்ற மகன்கள் உள்ளனர். இறந்த பிருதிவிராஜ் மன்னர் விக்கிரம சிங்கரின் மகன் வயிற்று பேரன் என்று தெரிவித்தனர்.

No comments:
Post a Comment