![]() |
Add caption |
ரயில் பயணத்தை தவிர்த்த கூலிகள்
இலங்கையில் கோப்பிப் பெருந்தோட்டப் பயிர்ச் செய்கையை அபிவிருத்தி செய்யும் நோக்கத்துக்காகவே அவசர அவசரமாக ரயில்வே பாதைகள் அமைக்கப்பட்டன. இதன்படி இலங்கையின் முதல் ரயில்வே பாதையான கொழும்பு கண்டி ரயில் பாதை 1867 ஆகஸ்ட் முதலாம் திகதி அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. இக்காலத்தில் சேர் ஹெர்கியூலிஸ் ரொபின்சன் (குடிணூ. ஏஞுணூஞிதடூஞுண் கீணிஞடிணண்ணிண 1865 1872) ஆளுனராகப் பதவி வகித்தார். இதன் காரணமாக கூலித் தொழிலாளர்கள் மன்னாரில் இறங்கி அங்கிருந்து கால்நடையாக கண்டிக்கும் அதற்கு அப்பாலும் செல்வதை தவிர்க்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கு வசதியாக கொழும்புத் துறைமுகம் வரை நீராவி இயந்திரப் படகு (குtஞுச்ட்ஞுணூ) ஏற்பாடு செய்யப்பட்டது.
எனினும் எதிர்பார்த்தபடி தொழிலாளர்கள் ரயில் வண்டியில் பயணிக்கவில்லை. அவர்கள் வழமைபோல் முன்பு சென்ற நடைவழிப் பாதையையே தெரிந்தெடுத்தனர். இது தொடர்பில் மில்லி (Mடிடூடூடிஞு) அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.
""இவர்கள் ரயிலில் போனால் எவ்வளவு செலவாகின்றது என்பதைப் பார்க்கின்றார்களே தவிர எத்தனை நாள் நடக்க வேண்டுமென்று பார்ப்பதில்லை. நடந்து செல்வதால் ஒரு சல்லியும் செலவழிக்கத் தேவையில்லை என்று நினைக்கிறார்கள்.''
கூலித் தொழிலாளரின் இந்த நடத்தையால் ஆச்சரியப்பட்ட அரசாங்கம் இது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க ஒரு குழுவொன்றை நியமித்தது. அவர்களின் கண்டுபிடிப்பின் படி சில சதங்களை மிச்சப்படுத்தவே அவர்கள் அப்படிச் செய்கிறார்கள் என்பது தெரியவந்தது. அக்காலத்தில் கொழும்பில் இருந்து ரயிலில் கண்டிக்குச் செல்ல 75 சதம் டிக்கட் கட்டணமாக அறவிடப்பட்டதுடன் 4 மணி நேரம் பயணிக்க வேண்டியிருந்தது. மறுபுறத்தில் நடந்து செல்ல வேண்டுமாயின் 4 நாட்களுக்கு நடக்க வேண்டியிருந்ததுடன் உணவுக்காக ஒரு நாளைக்கு 16 சதம் செலவிட வேண்டியிருந்தது. அதன்படி 4 நாட்களுக்கான உணவுச் செலவு 64 சதம். எனவே, அவர்கள் 11 சதத்தைச் சேமிக்கிறார்கள். அவர்கள் இந்த 4 நாட்களும் வேலை செய்தால் 11 சதத்தை விட அதிகம் உழைக்கலாம் என்று கருதுகிறார்கள் இல்லை. மொத்த தொழிலாளர்களில் எட்டு சதவீதத்தினர் மாத்திரமே ரயில் சேவையை பயன்படுத்துகிறார்கள். ரயில் சேவையை பயன்படுத்துவதால் பண ரீதியான நன்மை உண்டு என்பதை அவர்களால் விளங்கிக் கொள்ள முடியவில்லை என்று அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து ஹெர்குலிஸ் ரொபின்சன் காலனித்துவ செயலாளருக்கு பின்வருமாறு எழுதினார். ""தொழிலாளர்கள் மீது அதிக அக்கறை காட்டினாலும் அதனை வேண்டாத தொந்தரவாக அவர்கள் கருதுகின்றனர். அவர்களது நன்மைக்காக ஏதாவது செய்தால் அதில் உள்நோக்கமிருப்பதாக சந்தேகிக்கிறார்கள். அனுராதபுரப் பகுதியில் மன்னாரில் இருந்து வரும் கூலித் தொழிலாளருக்கு பொலிஸார் கிட்ட வந்து உதவ முற்பட்ட போது அந்தப் பக்கம் வருவதையே தவிர்த்த அவர்கள் கல் முள் நிறைந்த குறுக்குப் பாதைகளில் போக ஆரம்பித்தார்கள். ஆதலால் பொலிஸாருக்கு தொழிலாளர் அருகில் போக வேண்டாமென்றும் தூர இருந்து அவதானிக்கும்படியும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
அனுராதபுரப் பகுதிக்குப் பொறுப்பான உதவி அரச அதிபர் லெய்சிங்கின் (ஃஞுடிண்ஞுடடிணஞ்) கூற்றுப்படி அனுராதபுரப் பகுதியில் பங்களாவுக்கு சமமான சில வீடுகள் தொழிலாளர் ஓய்வு பெறவென அமைக்கப்பட்டிருந்தன. அங்கு நல்ல கிணறுகளும் இருந்தன. ஆனால் தொழிலாளர் வீட்டில் தங்காமல் வெளியில் கூடாரமிட்டு தங்கியதுடன் பொட்டல் வெளியிலேயே சமைத்தும் சாப்பிடுகின்றனர். அவர்கள் ஏரிகளில் குளித்ததுடன் நீரையும் அங்கிருந்து எடுத்தனர். அவர்களுக்கென கட்டப்பட்டிருந்த கிணறுகளை மிக அரிதõகவே அவர்கள் பயன்படுத்தினர்.
மறுபுறம் வட பகுதிக்குப் பொறுப்பான நிர்வாக செயலாளர் டிவைநாம் (கூதீதூணச்ட்) பின்வருமாறு எழுதினார். ""மாத்தளை நோக்கி வரும் கூலித் தொழிலாளர்கள் பங்களாக்களை பயன்படுத்த முடியாமைக்குக் காரணம் அவற்றிலெல்லாம் இந்தியாவுக்குப் பிரயாணிக்கின்ற தோட்ட துரைமார்கள் சென்று தங்குவதுதான். எப்போதெல்லாம் தோட்டத் துரைமார் அந்த பங்களாக்களுக்கு வருகின்றனரோ அப்போதெல்லாம் அங்கிருக்கும் கூலிகள் அவர்களுக்கு வழிவிட்டு ஒதுங்க வேண்டும். அது மழையோ வெயிலோ எத்தகைய காலநிலையாக இருந்தாலும் ஆதலினால் கூலிகளுக்காகக் கட்டப்பட்ட பங்களாக்களில் எந்தக் காரணத்தை முன்னிட்டும் துரைமார் தங்கக் கூடாதென அவர் விதந்துரை செய்தார்.
இக்காலத்தில் மன்னாரில் இருந்து மாத்தளை வரும் வழியில் சுமார் 131 மைல் தூரம் கூலிகள் தங்கவென 17 பங்களாக்களும் 22 கிணறுகளும் அமைக்கப்பட்டிருந்தனவென்றும் இவற்றின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் வரண்ட காலத்தில் கிணறுகள் வற்றுவதால் ????õக்கவும் அடுத்து வந்த ஆளுநர் சேர் வில்லியம் கிரகரி (குடிணூ ஙிடிடூடிச்ட் எணூஞுஞ்ணிணூதூ (1872 1877) நடவடிக்கை எடுத்தாரென்றும் 10 12 மைல்கள் இடைவெளியில் அரிசி மற்றும் ரேசன் வாங்க கடைகள் அமைக்கப்பட்டனவென்றும் ரோட்டிலிருந்து 400 யார் வரை பெரிய மரங்கள் தறிக்கப்படக் கூடாது என்று கட்டளையிடப்பட்டதென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரா. சடபோபன்